நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு இவ்வளவு பெரிய மகளா? விஜய் பாடலுக்கு பிரபல நடிகரோடு செம டான்ஸ்
சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தன்னுடைய மகளோடு அன்னையர் தினத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதே போல ஸ்ரீதேவி விஜய் டிவி பிரபலத்தோடு நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்பட பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார். அந்த வீடியோவும் இணையத்தில் அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது.
பழம்பெரும் நடிகரான விஜயகுமார் வீட்டில் அவருடைய மகள் மற்றும் மகன் என எல்லோருமே நடிகர்களாக இருக்கின்றனர். அவருடைய இரண்டாவது மகள் அனிதா மட்டும் தான் டாக்டராக இருக்கிறார். இந்த நிலையில் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் கடைசி மகளான ஸ்ரீதேவி பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் திருமணத்திற்கு பிறகு அதிகமான திரைப்படங்களில் நடிக்காமல் இருக்கிறார்.

அதிலும் ஸ்ரீதேவி விஜயகுமார் முதல் முதலில் காதல் வைரஸ் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக தமிழில் என்ட்ரி கொடுத்தார். அதற்கு முன்பு தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வர் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தமிழில் தனுஷுடன் தேவதையை கண்டேன், ஜீவாவுடன் தித்திக்குதே போன்ற பல படங்களில் நடித்து வந்தார். அதிலும் தித்திக்குதே மற்றும் தேவதையை கண்டேன் திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது.
இவர் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஆர் யூ ரெடி என்ற நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டிருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு இவரை சின்ன திரையில் பார்த்த ரசிகர்கள் இவர் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வருகின்றனர். அதே நேரத்தில் ஸ்ரீதேவிக்கு 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவரோடு திருமணம் முடிந்தது.
இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய மகளோடு ஸ்ரீதேவி அன்னையர் தினத்தன்று க்யூட்டான ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான லைக்களை குவித்து வருகிறது. அதோடு இந்த வீடியோவிற்கு "உனக்கு நான் உன் தாய்.. எனக்கு நீயே என் உலகம்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே தன்னுடைய அம்மாவான மஞ்சுளா இறப்பிற்கு பிறகு தன்னுடைய மகளாக தனக்கு மீண்டும் பிறந்து வந்திருப்பதாக ஸ்ரீதேவி பல இடங்களில் கூறி இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய மகளோடு ஸ்ரீதேவி வெளியிட்ட வீடியோவை பார்த்ததும் ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதே நேரத்தில் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி நடுவராக இருக்கும்போது அதில் தொகுப்பாளராக இருந்த நடிகர் ரியோ உடன் ஸ்ரீதேவி கில்லி திரைப்படத்தில் இடம் பெற்ற அப்படி போடு பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார். இந்த வீடியோவும் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அதுபோல ஸ்ரீதேவி அதிகமான திரைப்படங்களில் இப்போது நடிக்கவில்லை என்றாலும் விரைவில் சினிமாவிற்கு வருவார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கூட ஸ்ரீதேவியின் அக்கா பிரீத்தாவின் மகன் இயக்கி நடித்த ஷார்ட் பிலிம் ஒன்றில் ஸ்ரீதேவி முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications