நடிகை "ஸ்ரீப்ரியா” எப்படி மாறிட்டாங்கன்னு பாருங்க.. கூட இருக்கிறது யாருன்னு தெரியுதா? மாறாத அன்பு
சென்னை: நடிகை ஸ்ரீப்ரியா நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் இவர் லேட்டஸ்ட் ஆக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ரீப்ரியா தற்போது நடிகை ராதிகாவோடு ஷாப்பிங் சென்று அந்த வீடியோவை பதிவிட்டு, அதோடு ராதிகா பற்றி சில தகவல்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

சின்னத்திரை வெள்ளித்திரை என்று கலக்கி வந்த இவர் இப்போது சினிமாவை விட்டு விலகி இருக்கும் நிலையில் பல வருடங்களுக்கு பிறகு இவரை பார்த்த ரசிகர்கள் இவரா? இப்படி மாறிவிட்டார் என்று அதிர்ச்சி அடைத்திருக்கின்றனர்.
1974 ஆம் ஆண்டு வெளிவந்த "முருகன் காட்டிய வழி" என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ஸ்ரீப்ரியா ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன் மற்றும் ஜெய்சங்கர் போன்ற பல நடிகர்களோடு நடித்திருக்கிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் இந்தி போன்ற பழமொழிகளிலும் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் தமிழில் மட்டும் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறாராம்.

பொதுவாக ஒரு சிலருக்கு திறமைகள் என்பது அசாத்தியமாக இருக்கும். அந்த வகையில் ஒரு நபராக தான் நடிகை ஸ்ரீப்ரியா இருந்திருக்கிறார். இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக, இயக்குனராகவும், குரல் கலைஞராகவும் பல முகங்களை வெளிக்காட்டி அதிலும் ஜெயிக்கவும் செய்து இருக்கிறார். இப்போது உள்ள காலகட்டம் போல இல்லாமல் அவருடைய காலகட்டம் ரொம்பவே பெண்களுக்கு அடக்கு முறையாக இருந்த காலம் தான்.
இப்போதுள்ள சூழ்நிலையில் கூட பல பெண்கள் தங்களுடைய திறமையை வெளி உலகத்திற்கு காட்ட முடியாமல் அடக்கி ஆளப்படுகிறார்கள். ஆனால் பல வருடங்களுக்கு முன்பு தனக்கு எத்தனையோ பிரச்சனைகள் வந்தாலும் அதை தைரியமாக எதிர் கொண்டு அடுத்தடுத்து ஒவ்வொரு துறையிலும் காலடி எடுத்து வைத்து அங்கு தனக்கென்று ஒரு முத்திரையும் பதித்திருந்தார். அதோடு வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் சில சீரியல்களில் நடித்திருந்தார்.

திரைப்படங்களில் கம்பீரமான கேரக்டராக நடித்து வந்த ஸ்ரீப்ரியா சின்ன திரையில் அதுவும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்ன பாப்பா பெரிய பாப்பா சீசன் 1 மற்றும் இரண்டில் இவருடைய கலகலான காமெடி இவருடைய இன்னொரு முகத்தை வெளிக்கொண்டு வந்து, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தது. இந்த நிகழ்ச்சி இப்போதும் பல 80ஸ் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த மாதிரி ஒரு கலகலப்பான ஜாலியான நிகழ்ச்சி இப்போதெல்லாம் இல்லையே என்று பலர் பீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை பார்த்து தான் விஜய் டிவியில் கூட கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகள் அறிமுகம் செய்தார்களோ என்று கூட அப்போது அதிகமான ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதுபோல தற்போது இவர் 2014 ஆம் ஆண்டு வெளிவயான "திருஷ்யம்" திரைப்படம் உட்பட சில கனடா திரைப்படங்களில் இயக்கியிருக்கிறார். அதற்கு பிறகு எந்த திரைப்படங்களிலும் இவரை காணவில்லை.

இதனால் இவருடைய ரசிகர்கள் இவரை தேடிக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தல் இவர் தன்னுடைய instagram பக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் உடன் சில புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அதில்," எனக்காக எப்போதும் நேரம் செலவிடும் ஒருவரோடு விடுமுறையை கொண்டாடுகிறேன். என்னுடைய அன்பான ராதிகா தான் அது, என்று குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இதற்கு அதிகமான ரசிகர்கள் லைக் கொடுத்து இவரை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications