Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த நபரிடமிருந்து உயிரை கையில் பிடித்து தப்பித்த ஸ்ரீவித்யா.. தூக்க மாத்திரை வேற! அண்ணி சொன்ன பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் பலருக்கும் பரீட்சையமான நடிகை ஸ்ரீவித்யா ஹீரோயினியாக நடித்ததை விட குணச்சித்திர நடிகையாக தான் மக்கள் மத்தியில் அதிக அளவில் பிரபலம் அடைந்திருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் டாப் நடிகையாக ஸ்ரீவித்யா இருந்து வந்தார்.

ஸ்ரீவித்யாவின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் எப்போதும் இனிமையான நினைவுகளை கொடுத்திருக்கும். அந்த அளவிற்கு பல திரைப்படங்களில் நடித்த ஸ்ரீவித்யா சங்கமம் திரைப்படத்தில் கதாநாயகியின் அம்மாவாக காதலர்களை கண்கலங்க வைத்திருந்தார்.

Actress Srividya pain of her real marriage life

எத்தனையோ திரைப்படங்களில் பலருடைய மனதை கவர்ந்த ஸ்ரீவித்யா அவருடைய நிஜ வாழ்க்கையில் பட்ட வேதனை யாரும் பட்டு இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும் அவ்வளவு வேதனைகளையும் ஸ்ரீவித்யா அனுபவித்திருக்கிறார். அது குறித்து அவருடைய அண்ணி பல தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வகையில் தமிழில் மட்டுமல்லாமல் ஸ்ரீவித்யா கேரளாவில் ஒரு வருடத்திற்கு 14 படங்கள் வீதம் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்திருக்கிறார். ஸ்ரீவித்யாவிற்கு ஒரே ஒரு அண்ணன் மட்டும் தானாம். அவருடைய அம்மா ஒரு பாடகி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அதுபோல ஸ்ரீ வித்யா அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது கமலுடன் ஏற்பட்ட நட்பு பிறகு காதலாக மாறி சினிமா துறையில் பலருக்கும் தெரிந்திருந்ததாம்.

அந்த நிலையில் இரு வீட்டருக்கும் தெரிந்த போது ஸ்ரீவித்யாவின் அம்மாவிடம் கமல்ஹாசன் நேரடியாக பேசும் போது அதற்கு ஸ்ரீவித்யாவின் அம்மா சம்மதிக்காமல் திருமணத்திற்கு மறுத்து விட்டாராம். அதனால் ஸ்ரீவித்யாவை விட்டுவிட்டு கமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். கமலுடைய திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் தனிமையில் இருந்த நிலையில் மலையாள புரொடியூசரான சார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தாராம்.

அந்த திருமணத்திற்காக மதம் மாறி இருந்த நிலையில் இந்த திருமணம் செய்தது ஸ்ரீ வித்யா குடும்பத்திற்கு விருப்பமே இல்லையாம். ஆரம்பத்தில் இனிமையாக தொடங்கிய ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையில் சார்ஜ் உடைய சுய ரூபம் தெரிய வந்த பிறகுதான் பெரிய கஷ்டங்களை தொடங்கி இருக்கிறது. சார்ஜ்க்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பெண்ணையே திருமணம் செய்ய போவதாகவும் ஸ்ரீ வித்யா கேள்விப்பட்டிருந்தாராம்.

அது போல ஒருமுறை ஸ்ரீவித்யாவின் அண்ணன் மனைவியிடம் ஒரு ஹேர் டிரஸ்ஸர் வந்து, என்னம்மா அந்த பொண்ணை அப்படியே நீங்க விட்டுட்டீங்களே? அந்த பொண்ணு கை நிறைய தூக்க மாத்திரைகளை வைத்துக்கொண்டு சாகப் போறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கு. அந்த பொண்ணு வெளியே சொல்ல முடியாத அளவில் வேதனையில் இருக்கு என்று சொல்லி இருக்கிறார். இது தெரிந்ததும் ஸ்ரீவித்யாவின் அம்மா வேகமாக ஸ்ரீவித்யாவின் வீட்டிற்கு சென்று அவரை பார்த்திருக்கிறார்.

அப்போது ஸ்ரீவித்யாவையும் அவருடைய அம்மாவையும் வீட்டிற்குள் வைத்து சார்ஜ் வெளியே பூட்டிவிட்டு சென்றுவிட்டாராம். அருகில் இருந்த உதவியாளரை வைத்து தான் பிறகு இவர்கள் இருவரும் வெளியே தப்பி ஓடி வந்திருக்கிறார்கள். அதற்கு பிறகு தான் சார்ஜ் உடன் தன்னால் இனி வாழ முடியாது என்று விவாகரத்து பெறுவதற்காக முயற்சி செய்தாராம். ஆனால் அந்த நேரத்தில் ஸ்ரீவித்யா மதம் மாறி திருமணம் செய்து இருந்ததால் எளிதாக விவாகரத்து பெற முடியவில்லையாம்.

அதனாலயே பத்து வருடங்கள் வேறு திருமணமும் செய்யாமல் ஸ்ரீவித்யா போராடினார் என்று அவருடைய அண்ணன் மனைவி விஜி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியானதும் ஸ்ரீவித்யா இவ்வளவு வேதனைகளை அனுபவித்திருக்கிறாரா? என்று ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+