Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுஹாசினி ஒரே போடு.. மலையாள ஷூட்டிங்குகளில் அத்துமீறலும், தகாத உறவும்.. இதுதான் காரணம்.. திணறிய கோவா

Subscribe to Oneindia Tamil

மும்பை: மலையாள சினிமாவில் ஷூட்டிங் முடிந்தபிறகு அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதால்தான், நிறைய எல்லை மீறல்கள் அங்கு நடப்பதாக, நடிகை சுஹாசினி பரபரப்பு காரணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். என்ன நடந்தது?

கேரள திரையுலகில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியிருந்தது..

suhasini mani ratnam

ஹேமா கமிட்டி: இந்த அறிக்கை வெளியானதுமே, நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக், டைரக்டர் ரஞ்சித், நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.. மேலும் கேரளா நடிகர்கள் சங்கத்தின் AMMA (Association of Malayalam Movie Artists) நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

அப்போது, ஹேமா கமிட்டி குறித்து பல்வேறு நடிகர், நடிகைகள் தங்களது கருத்துக்களை கூறியிருந்தனர்.. அப்போது, நடிகை சுஹாசினியிடமும், மலையாள சினிமாவில் நடைபெறும் சர்ச்சை குறித்தும், ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாகவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால், அதுகுறித்து சுஹாசினி பேச மறுப்பதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எல்லை மீறல்கள்: இந்நிலையில், மலையாள சினிமாவில் எல்லை மீறலுக்கு காரணம் என்ன? என்பது குறித்து தற்போது ஓபனாகவே சுஹாசினி விளக்கம் தந்துள்ளார்.. மலையாள சினிமாவில் ஷூட்டிங் முடிந்தபிறகு அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதால்தான், இப்படியான எல்லை மீறல்கள் அங்கு நடப்பதாக, சுஹாசினி காரணத்தை கூறியிருக்கிறார்.

கோவாவில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த விழா, கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. இதில், "சினிமாவில் பெண்களின் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில், நடிகை சுஹாசினி, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.

ஷூட்டிங்: நடிகை சுஹாசினி பேசும்போது, "" மற்ற துறைகளைக் காட்டிலும் திரைத்துறையில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. மற்ற துறைகளில் நீங்கள் வேலை செய்துவிட்டு, மறுபடியும் உங்கள் வீட்டிற்கு இரவு திரும்பி செல்வீர்கள்... ஆனால் சினிமாவில் அப்படி கிடையாது. 200, 300 பேர் ஓரிடத்துக்கு ஷூட்டிங்கிற்கு சென்றால், அங்கேயே ஒரு குடும்பம் போல தங்கியிருப்பார்கள். அந்த படக்குழு, புது இடத்திற்கு சென்று ஒரு குடும்பமாக வாழ்வார்கள்.. அப்போதுதான், தெரிந்தோ தெரியாமலோ சில எல்லைகள் மீறப்படுகின்றன...

200 பேர் இருக்கும்போது, விதிகளை கடைபிடிக்காமல் இருக்கும்பட்சத்தில் அங்கே எல்லை மீறல் நிகழ்வதற்கு அதிக சாத்தியங்கள் உண்டு. 200 பேர் கொண்ட ஒரு படக்குழுவில், குடும்பத்தை விட்டு தனியாக இருப்பவர்கள் மீது சிலர் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வார்கள். அதுவும் இல்லாமல், தற்போது புதிதாக வரும் சினிமாவுக்குள் நுழையும் இளைஞர்களுக்கு போதுமான அனுபவமும் இருப்பதில்லை . இதைத்தான் சிலர் தவறாக பயன்படுத்தி கொள்ள நினைக்கிறார்கள்..

லோகேஷன்கள்: மற்ற சினிமா துறைகளைவிட, மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு... காரணம், மலையாள படங்கள் பெரும்பாலும் வெவ்வேறு லோகேஷன்களில் எடுக்கப்படுகின்றன. இதனால் நடிகைகள் மாதக்கணக்கில் தங்கள் வீட்டை விட்டு பிரிந்திருக்க நேரிடுகிறது. இதனால் அவர்களிடம் தவறாக நடந்துகொள்கிறார்கள் .

ஷூட்டிங்குகளில், எல்லை மீறுபவர்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? உங்கள் படப்பிடிப்புகளில் தகாத முறையில் ஒருவர் நடந்து கொண்டால், என்ன செய்வீர்கள்? என்று அவரிடம் கேட்டேன்.

தகாத உறவுகள் : அதற்கு அவர், அப்படி தகாத முறையில் நடந்து கொள்ளும் நபரை உடனடியாக வெளியேற்றிவிடுவேன்.. ஒரு முறை ஷூட்டிங்கின்போது, படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் வரம்பு மீறி நடந்து கொண்டார்.. அவரை வேலையைவிட்டு தூக்கிவிட்டேன். வரம்பு மீறி நடந்துகொள்பவர் யாராக இருந்தாலும் அவரை வேலையைவிட்டு தூக்க வேண்டும்" என்று மணிரத்னம் என்னிடம் சொன்னார்.

மலையாள திரையுலகில் இதுதான் நடக்கிறது. தமிழ் சினிமாவில் படப்பிடிப்பு முடிந்தால் நான் சென்னைக்கு சென்றுவிடுவேன், தெலுங்கில் ஷூட்டிங் முடிந்தால் ஹைதராபாத் சென்றுவிடுவேன்.. கர்நாடகாவில் என்றால் நான் பெங்களூரு சென்றுவிடுவேன்.

எல்லைகள் மீறப்படுகின்றன: ஆனால் மலையாள சினிமாவில் ஷூட்டிங் முடிந்தால், உங்களால் வீட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாது. காரணம், அங்கே அப்படி ஒரு இடம் இல்லாததால், உங்களால் வெளியில் எங்கேயுமே செல்ல முடியாது. அதனால்தான், படப்பிடிப்பு தளங்களில் எல்லைகள் மீறப்படுகின்றன" என்றார் சுஹாசினி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+