குழந்தை பற்றி வெளிப்படையாக பேசிய சுகன்யா.. ஒரு வருஷம் தான் அதற்குள் எப்படி? வதந்திகளுக்கு பதிலடி
சென்னை: நடிகை சுகன்யா சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவை பார்த்ததும் ரசிகர்கள் பலர் தன்னை பற்றி பல வதந்திகள் பரப்பி வருவதாக அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது தன்னுடைய அக்கா மகளோடு எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சுகன்யாவின் குழந்தை என்று சொல்லி வருவதால் அது குறித்து சுகன்யா விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
பொதுவாக சிலருக்கு ஒரு சில திறமைகள் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் தான் பல திறமைகள் இருக்கிறது. அந்த வரிசையில் ஒருவர் தான் சுகன்யா. இவர் நடிகையாக பலருக்கும் தெரிந்திருந்தாலும் டப்பிங் கலைஞர், பாடகி, பாடல் ஆசிரியர், பரதநாட்டிய கலைஞர், ஓவியர், டிசைனர், இசை அமைப்பாளர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் என்று பல திறமைகள் சுகன்யாவிற்கு இருக்கிறது.

அதுபோல 90ஸ் காலகட்டத்தில் தொடங்கி இப்ப வரைக்கும் முன்னணி நடிகையாக சுகன்யா நடித்துக் கொண்டிருக்கிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் சுகன்யா பற்றி அடிக்கடி வதந்திகளும் பரவி வருவதை பார்க்க முடிகிறது.
ஆனால் தன்னைப் பற்றி எந்த செய்திகள் வந்தாலும் அதற்கு தைரியமாக விளக்கம் கொடுக்கும் சுகன்யா சமீபத்தில் தான் வெளியிட்ட போஸ்டில் இருந்த குழந்தை குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த சுகன்யாவிற்கு அவருடைய பெற்றோர் கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த திருமணம் ஒரு வருஷம் கூட நீடிக்கவில்லை. தன்னுடைய கணவரோடு தனக்கு கருத்து வேறுபாடு அதிகமாக இருந்ததால் திருமண வாழ்க்கையில் இருந்து விலகி விட விவாகரத்திற்கு அப்ளை செய்திருக்கிறார்.
ஆனால் பல வருட போராட்டத்திற்கு பிறகு தான் அவருக்கு விவாகரத்து கிடைத்திருக்கிறது. அதற்கு பிறகு தனியாக தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். சில வருடங்களாக சினிமா மற்றும் சீரியலுக்கு பிரேக் விட்டிருந்த சுகன்யா சமீபத்தில் பொதிகை சேனலில் ஒளிபரப்பாகி வரும் "சக்தி ஐபிஎஸ்" என்ற சீரியல் மூலமாக மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் சில வருடங்களாக சுகன்யாவின் மகள் இவர்தான் என்று பரவி வரும் புகைப்படம் குறித்து பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நானும் அந்த புகைப்படத்தை பார்த்தேன். அந்த புகைப்படத்தில் இருப்பது என்னுடைய மகள் கிடையாது. அது என்னுடைய அக்காவின் ஒரே மகள்.

நான் என்னுடைய twitter பக்கத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தேன். அதில் என்னுடைய அக்கா மற்றும் அவருடைய மகள் என்று எல்லாவற்றையும் குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் அந்த புகைப்படம் இப்ப வரைக்கும் இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்துகிறது.
இந்த புகைப்படம் திடீரென்று வைரலாகி வருகிறது. இதை பார்த்து என்னுடைய அக்கா மகள் உங்க கூட சேர்ந்து நானும் பிரபலமாகிவிட்டேன். நான் இவ்வளவு வளர்ந்த பிறகும் இந்த புகைப்படம் தான் இப்போதும் வலம் வருகிறது என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்.

நான் ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து பிறகு விவாகரத்துக்கு அப்ளை செய்தது எல்லோருக்கும் தெரியும். ஒரு சில மாதங்கள் மட்டும் தான் நான் திருமண வாழ்க்கையில் வாழ்ந்தேன் பிறகு சில வருடங்களாக எங்களுடைய விவாகரத்து பிரச்சனை ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு பிறகு விவாகரத்து செய்து பிரிந்து விட்டேன்.
ஆனால் இது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்தாலும் என்னைப் பற்றி பரபரப்பு ஏற்படுத்தும் செய்திகள் அடிக்கடி வெளியாகி விடுகிறது என்று சிரித்தபடியே அந்த பேட்டியில் சுகன்யா சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ சில மாதங்களுக்கு முன்பு சுகன்யா பேசியிருந்தாலும் தற்போது இது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications