சில்க் ஸ்மிதா என் கணவரை தான் காதலிச்சாங்க.. என்னிடமே நேரடியாக அப்படி சொன்னாங்க.. நடிகை சுலக்ஷனா ஓபன்
சென்னை: நடிகை சுலக்ஷனா பேட்டி ஒன்றில் நடிகை சில்க் ஸ்மிதா பற்றி பேசி இருக்கிறார். அதிலும் சில்க் ஸ்மிதா இறப்பதற்கு முன்பு என்னுடைய கணவரை காதலிப்பதாக என்னிடமே சொன்னார் என்று அப்போது நடந்த சில விஷயங்கள் பற்றி சுலக்ஷனா பகிர்ந்து இருக்கிறார்.
பிரபல நடிகையாக சுலக்ஷனா தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். முதல் முதலில் இவர் தமிழில் தூரல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகி ஆனார். அதற்கு பிறகு தம்பிக்கு எந்த ஊரு, சிந்து பைரவி, ராஜதந்திரம், வைகாசி பொறந்தாச்சு, சின்னத்தம்பி உள்ளிட்ட சூப்பரான ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.

ஆனால் குழந்தை நட்சத்திரமாக சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனின் பல படங்களிலும் சுலக்ஷசனா நடித்திருக்கிறார். இப்போது சின்னத்திரையிலும் அம்மாவாகவும் மாமியாராகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிகமாக பாசிட்டிவ் கேரக்டரிலேயே நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் சின்ன வயசில் இருக்கும் போது ஹீரோயின் ஆகணும்னு எங்க வீட்ல கண்டிப்பா சொல்லிட்டாங்க. அதற்காக நிறைய ஆடிசன் போயிருக்கிறேன். அப்போ சின்ன பொண்ணா இருக்க, ஒல்லியா இருக்க என்று என்னை பலர் ரிஜெக்ட் பண்ணிடுவாங்க. அப்ப எல்லாம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அதற்குப் பிறகு பல கஷ்டங்களுக்கு அப்புறம் தான் ஹீரோயினி ஆனேன். நான் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும் போது தான் எம் எஸ் விஸ்வநாதனின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அந்த நேரத்தில் எங்களுடை காதலுக்கு எங்கள் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை.

ஆனால் எம்.எஸ். விஸ்வநாதன் என்னை அவருடைய மருமகளாக ஏற்றுக் கொண்டார் என்று தன்னுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி சுலக்ஷசனா பேசியிருக்கும் நிலையில் நடிகை சில்க் ஸ்மிதா பற்றி பேசி இருக்கிறார். அதில் அவர் கூறுகையில் சில்க் ரொம்பவே பாசமான பொண்ணு. அவங்க நடித்த கேரக்டருக்கும் அவருடைய நிஜ கேரக்டருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாது. ரொம்ப தங்கமான பொண்ணு. சில்க் பற்றி தெரிஞ்சவங்க அவங்கள நல்லவங்க என்றுதான் சொல்லுவாங்க. ரொம்ப பாசமான பொண்ணு அப்பவே சில்க் என்னிடம் நான் தான் உங்க கணவரை முதல்ல லவ் பண்ணேன். ஆனா நீங்க கல்யாணம் பண்ணிட்டீங்க அப்படின்னு சொல்லுவாங்க. அப்ப கூட நான் அப்படியே இருந்துகிறேன் நீ வேணா என் கணவரை லவ் பண்ணிக்கோ அப்படின்னு நான் சொல்லி இருக்கிறேன். அதற்கு சில்க் ஸ்மிதா வேண்டாம் என்று சொல்லிடுவாங்க. சிலுக்கு என்னிடமே என்னுடைய கணவர் பற்றி பேசும்போது எனக்கு தப்பா எடுக்கத் தோணாது. இது என்னுடைய கணவருக்கும் தெரியும். பொதுவாக இறந்து போனவங்களை பார்க்கிறது எனக்கு ரொம்பவும் பயம். அதனாலதான் நான் சில்க் ஸ்மிதா இறந்தபோது போய் பார்க்கவில்லை. சில்க் தற்கொலை பண்ணிக்கிற ஆளு கிடையாது. அவங்க ரொம்ப தைரியமான பொண்ணு. ஏதோ எங்கேயோ தப்பு நடந்திருக்கு என்று அந்தப் பேட்டியில் சுலக்ஷனா பேசியிருக்கிறார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications