விஜய்க்காக செந்தூரப் பாண்டி படத்தில் விஜயகாந்த் செய்த செயல் இருக்கே.. கண்கலங்கிய நடிகை சுமதி ஸ்ரீ
சென்னை: நடிகை சுமதி ஸ்ரீ மறைந்த நடிகர் விஜயகாந்த் உடன் செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் கண்ணீரோடு பேசியிருக்கிறார். அதில் நடிகர் விஜய் மற்றும் விஜயகாந்த் உடைய உறவு எப்படி இருந்தது என்பது பற்றியும் கண்கலங்க சுமதி ஸ்ரீ பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
செந்தூரப்பாண்டி என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் நடிகர் விஜய்யின் அண்ணன் கேரக்டரில் நடித்திருப்பார். இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை சுமதி ஸ்ரீ நடித்திருப்பார். அவர் தன்னிடம் விஜயகாந்த் என்ன மாதிரி நடந்து கொண்டார் என்று பேட்டியில் பேசி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் விஜயகாந்த் விஜய்க்காக அனைவர் முன்பும் செய்த செயல் பற்றி சுமதி ஸ்ரீ பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து விஜயகாந்தின் பெருந்தன்மையை பாராட்டி வருகிறார்கள். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய்காந்த் மறைந்து இருந்தாலும் அவரைப் பற்றி பல நினைவுகளை தொடர்ச்சியாக அவரோடு நடித்த நடிகர் நடிகைகளும் நண்பர்களும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அது குறித்து அதிகமான ரசிகர்கள் விஜயகாந்த் இதுவெல்லாம் செய்திருக்கிறாரா? என்று வியந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் உடன் செந்தூரப்பாண்டி என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை சுமதி ஸ்ரீ அந்த சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து கண்ணீரோடு பேசி இருக்கிறார். நடிகை சுமதி ஸ்ரீ பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இப்போது பல சீரியல்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் அண்ணி கேரக்டரில் நடித்திருந்தார்.
அப்போதுதான் முதல்முறையாக விஜயகாந்தை நேரில் பார்த்திருந்தாராம். சூட்டிங் ஸ்பாட்டில் முதல் நாள் இவர் கலந்து கொள்ளும்போது இவருடைய தந்தையிடம் விஜயகாந்த் என்ன அண்ணன் இந்த பக்கம் வந்து இருக்கீங்க என்று கேட்டிருக்கிறார். அப்போது நான் இந்த படத்துல நடிக்கலப்பா என்னோட பொண்ணு தான் இந்த படத்துல நடிக்கிறா என்று சொன்னபோது எங்க இருக்காங்க என் தங்கச்சி என்று கேட்டு இருக்கிறார்.
உடனே அப்பா என்னை கூப்பிட்டு விஜயகாந்திடம் அறிமுகப்படுத்தினார். தங்கச்சி எப்படி இருக்கிறா சாப்டியா என்று அவர் அவ்வளவு பாசமா பேசினாரு. அந்த வார்த்தை என்னால் மறக்கவே முடியாது. ஏன்னா எனக்கு கூட பிறந்த அண்ணன் கிடையாது. ஆனால் அன்னைக்கு விஜயகாந்த் அண்ணன் தான் எனக்கு அண்ணனா மாறினாரு. அப்புறம் அப்பா அவர்கிட்ட இவ சரியா சாப்பிடவே மாட்டேங்குறான்னு பேச்சுவார்த்தையில் சொல்லிட்டாரு.
ஆனா அதையே காரணமாக எடுத்துக்கிட்டு நான் சாப்பிடும்போது என் பக்கத்திலேயே இருந்து அதை சாப்பிடு இதை சாப்பிடுன்னு அவ்வளவு பாசமா கவனிச்சுக்கிட்டாரு. செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் நான் அவர் கூட நடிச்சது ஒரே ஒரு காட்சி தான். ஆனால் அப்போ கூட அவருடைய நடிப்பை பார்த்து நான் மிரண்டு போயிட்டேன். அது மட்டும் அல்லாமல் விஜயகாந்த்தும் விஜய்யும் அந்த திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருப்பாங்க.

அப்போ சூட்டிங் ஸ்பாட்ல நெஜமா ஒரு அண்ணன் தம்பி எப்படி இருப்பாங்களோ அப்படித்தான் இருப்பாங்க. விஜயகாந்த் தன்னுடைய தம்பி மேல அவ்ளோ பாசமா நடந்துக்குவாரு, அதுபோல விஜய்யும் விஜயகாந்த் மீது மரியாதையா நடந்துப்பாரு.. ஒருமுறை ஒரு கல்யாண மண்டபத்தில் வச்சு சூட்டிங் நடந்துட்டு இருந்து, அப்போ விஜய்யை அங்கு இருப்பவர்கள் அடிப்பது போன்று ஒரு காட்சி.
அந்த நேரத்தில் விஜயகாந்துக்கு சூட்டிங் கிடையாது. ஆனால் ஷூட்டிங் பார்ப்பதற்காக வந்திருந்தார். வந்து அங்கே விஜய் முகத்தில் அடிபடாத மாதிரி எப்படி தடுக்கணும் என்பதை எல்லாம் விஜயகாந்த் சார் பொறுமையா சொல்லிக் கொடுத்தாரு. சின்ன சின்ன மிஸ்டேக் கூட வராமல் சிரிச்சுக்கிட்டே விஜய்க்கு சொல்லிக் கொடுத்த போது அப்படியே கூடப்பிறந்த அண்ணன் தம்பி போல அவ்ளோ பாசமா இருந்தாங்க.... என்று அந்த பேட்டியில் நடிகை சுமதி ஸ்ரீ பேசி இருக்கிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications