22 வருஷம் ஆகிடுச்சு! வதந்திகளுக்கு மத்தியில் பிரபலங்களோடு கேக் வெட்டிய திரிஷா.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகை த்ரிஷா திரை உலகில் ஹீரோயினாக 22 வருடங்கள் நிறைவு செய்துள்ள நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அவருக்கு சூர்யா, ஆர்ஜே பாலாஜி, நட்டி போன்ற பல பிரபலங்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள்.
சினிமா துறையில் பலரும் பார்த்து வியந்த நடிகைகள் ஒரு சிலர் மட்டும்தான் எத்தனை வருடங்கள் ஆனாலும் ஆரம்பத்தில் பார்த்தது போலவே இருக்கிறார்கள். அதில் நடிகை திரிஷாவையும் சொல்லியே ஆக வேண்டும். திரிஷா ஆரம்பத்தில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் சில கட்சிகளில் அவர் வந்தாலும் படம் முழுக்க அவருடைய தாக்கம் இருக்கும். அப்போது தொடங்கிய அவருடைய பயணம் இப்ப வரைக்கும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது. தற்போது திரிஷா 40 வயதை கடந்துவிட்டாலும் இன்னும் 20 வயது பெண் போல் அழகில் ஜொலிக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்தார். அப்போது கூட ஒரு சிலர் திரிஷா உடைய சினிமா பயணம் இனி அவ்வளவுதான் அவரால் இனி முன்பு போல வர முடியாது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் எல்லா பேச்சுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 96 திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார்.

தற்போது கூட அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் வரிசையில் திரிஷாவும் இருக்கிறார். ஒரு படத்திற்கு சுமார் 12 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் என்று கூறப்படுகிறது. அதுபோல கமல் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகி வரும் தக்லைப் திரைப்படத்திலும் சிம்புக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அதுபோல மலையாளத்தில் ஐடெண்டிடி, தெலுங்கில் விஸ்வபரா ஆகிய படங்களும் கைவசம் இருக்கிறது. இந்த வரிசையில் தற்போது லேட்டஸ்ட் ஆக ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 45 ஆவது படத்திலும் ஹீரோயினாக திரிஷா கமிட் ஆகி இருக்கிறார்.

சூர்யாவோடு ஏற்கனவே மௌனம் பேசியதே, ஆறு போற்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே பெரிய அளவில் ஹிட் அடித்தது. அந்த வரிசையில் இப்போது மீண்டும் சூரியா, திரிஷா கூட்டணி இணைந்திருக்கும் நிலையில் இந்த திரைப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து ஒளிப்பதிவு பணிகளை ஜிகே வாசன் கவனிக்க, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் கமிட் ஆகி இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கான சூட்டிங் கோவை, பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றி உள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக திரிஷா கோவா சென்று இருந்த போது விஜய்யுடன் தனி விமானத்தில் சென்று கலந்து கொண்டதாக புகைப்படங்களும், பிளைட் டிக்கெட்டும் வலம் வருகிறது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் சூர்யா 45 படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது த்ரிஷாவிற்கு படபிடிப்பு குழுவினர் பூங்கொத்து கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.
த்ரிஷா திரையுலகில் நடிக்க தொடங்கி 22 ஆண்டுகள் நிறைவு செய்ததை படக் குழுவினரோடு கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் த்ரிஷாவிற்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications