பெரிய தப்பு செய்த திரிஷா.. ஒரே ஒரு போட்டோவால் கொந்தளிப்பு.. இந்த நேரத்தில் இது தேவையா? வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: நடிகை திரிஷா வெளியிட்ட பதிவு தான் இப்போது சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே சமீபகாலமாக சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், இப்போ ஒரு பதிவு வந்திருப்பது ரசிகர்களை இரண்டு விதமான மனநிலைக்குள் தள்ளியுள்ளது.
நடிகை திரிஷா சமீபத்தில் நடிகர் விஜய் உடன் கல்யாண பங்க்ஷன் ஒன்றில் ஒரே நிறத்தில் உடை அணிந்து கலந்து கொண்டது பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்குப் பிறகு திரிஷா போடும் போஸ்டர்கள் அதிகமாக கவனிக்கப்படுகிறது. சர்ச்சைக்கு திரிஷா என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் இப்போது அவர் தன்னுடைய நாயுடன் கோவிலுக்கு சென்றது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

கோவிலில் திரிஷா
திரிஷா தனது செல்ல நாய் "இஸ்ஸி"யை முதல் முறையாக கோவிலுக்கு அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அந்த தருணத்தை புகைப்படமாக எடுத்த அவர், அதை இன்ஸ்டா ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.
"இஸ்ஸியின் முதல் கோவில் விஜயம்" என்ற கேப்ஷனுடன் வெளியான இந்த போட்டோ, வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களிடையே வேகமாக பரவியது.
மகள் என்ற பாசம்
திரிஷா தனது செல்ல நாய்களை சாதாரணமாக பார்க்காமல், குடும்ப உறுப்பினராகவே பார்த்து வருகிறார். "இஸ்ஸி"யை அவர் மகளாகவே அழைக்கிறார். அதனால்தான் அந்த நாய்க்கும் தன்னுடைய அப்பாவின் பெயரான கிருஷ்ணனை அந்த நாயுடைய பெயருடன் சேர்த்து இஸ்ஸி கிருஷ்ணன் என்று வைத்திருக்கிறார்.
இஸ்ஸிக்கு முன்பு "ஜோரோ" என்ற நாயை மிகவும் பாசமாக வளர்த்திருந்தார். அது இறந்தபோது அவர் பகிர்ந்த பதிவுகள் ரசிகர்களையே உணர்ச்சிவசப்பட வைத்தது. "என் மகன் போயிட்டான்" என்று அவர் கூறியதும் அப்போது பெரிதும் பேசப்பட்டது. அந்த இழப்புக்குப் பிறகுதான் இஸ்ஸி அவரது வாழ்க்கையில் வந்தது.
இன்றும் ஜோரோ பற்றிய நினைவுகள் அவரை விட்டு போகவில்லை என்பது அவர் அடிக்கடி பகிரும் ஸ்டோரிகளில் தெரிகிறது.

ரசிகர்களின் ரியாக்ஷன்
இந்த கோவில் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களில் சிலர், "அச்சோ ரொம்ப க்யூட்... இஸ்ஸி நாளுக்கு நாள் அழகாகி வருகிறது" என்று சிலர் ரசித்துள்ளனர். சிலர் நேரடியாக, கோவிலுக்குள் நாயை கூட்டிக் கொண்டு வருவது சரியா என்று விமர்சித்து வருகின்றனர்.
ஏன் இவ்வளவு சர்ச்சை?
திரிஷா சமீப காலமாக சில சர்ச்சைகளில் அடிக்கடி பேசப்பட்டு வருகிறார். திரையுலக சம்பந்தப்பட்ட கருத்துக்கள், சமூக வலைதள பதிவுகள் போன்றவை சில நேரங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.
அதனால் தான், அவர் போடும் ஒவ்வொரு பதிவும் ரசிகர்களால் அதிக கவனத்துடன் பார்க்கப்படுகிறது. ஒரு சாதாரண ஸ்டோரி கூட பெரிய விவாதமாக மாறிவிடுகிறது.
ஸ்டோரி மீது அதிக ஈர்ப்பு
திரிஷாவுக்கு இன்ஸ்டாகிராமில் சாதாரண போஸ்ட் விட ஸ்டோரி போடுவது அதிகம் பிடிக்கும் போல தெரிகிறது. இஸ்ஸியுடன் விளையாடுவது, குளிக்க வைப்பது, வீட்டில் இருக்கும் சின்ன சின்ன தருணங்கள் என அனைத்தையும் அவர் வீடியோவாக பகிர்ந்து வருகிறார். இதுவே ரசிகர்களுக்கும் அவருடன் ஒரு நெருக்கமான உணர்வை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications