வாழ்க்கையில் வெளிச்சம் கொடுத்த நபர்.. என்றென்றும் என் காதலர் இவர்தான்! காதலர் தினத்தில் த்ரிஷா பதிவு
சென்னை: நேற்று பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை உலகெங்கும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள். அதுபோல பிரபலங்களும் தங்களுடைய காதலர், கணவர், மனைவியோடு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து காதலர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். அப்போது நடிகை த்ரிஷா தன்னுடைய காதலர் இவர்தான் என்று வெளியிட்ட பதிவு இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.
காதலர் தினம்: காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு வாரமாகவே கிஸ் டே, சாக்லேட் டே, ஹக் டே என்று விதவிதமாக கொண்டாடி மக்கள் மகிழ்ந்து வந்தனர். அதே நேரத்தில் நேற்றிலிருந்து சமூக வலைதள பக்கங்களில் காதலர்களின் புகைப்படங்கள் மற்றும் கணவன் மனைவியின் புகைப்படங்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

த்ரிஷாவின் போஸ்ட்: சமூக வலைதளங்களில் பலர் தங்களுடைய காதலை ஆறாக ஓட விடுகிறார்கள். அதே நேரத்தில் சிங்கிளாக இருப்பவர்கள் தங்களை தாங்களே காதலிப்பதாகவும் மோட்டிவேஷனல் போஸ்ட் போட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை திரிஷா வெளியிட்ட பதிவு பலருடைய கவனத்தைப் பெற்று இருக்கிறது.
காதலி இவள்: அதில், "இந்த நாள் தான் நான் இஸியை தத்தெடுத்தேன். ஆனால் அவள் என்னை மீட்டெடுத்தாள். நன்றி லோகேஷ் பாலா. என் வாழ்க்கையில் எனக்கு வெளிச்சம் தேவைப்பட்டபோது எனக்கு அவளை கொடுத்ததற்கு நன்றி. என்றென்றும் என் காதலர் இவள் தான்" என்று பதிவிட்டு இருக்கிறார்.
Vidaamuyarchi: நானே அஜித்தின் ரசிகர் தான்.. அவர் இந்த விஷயத்தை சொல்லிட்டே இருப்பாரு! ஆரவ் ஓபன்
த்ரிஷாவின் x தளம்: அழகான நாய்க்குட்டியோடு திரிஷா எடுத்த கியூட்டான வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் சில நாட்களுக்கு முன்பு திரிஷாவின் ட்விட்டர் பக்கத்தில் கிரிப்டோ கரன்சி தொடர்பான பதிவுகள் வெளியானது. பிறகு சிறிது நேரத்தில் அவை டெலிட் செய்யப்பட்டன. இந்த பதிவை திரிஷா டெலிட் செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியானது.

த்ரிஷாவின் விளக்கம்: ஆனால் இது குறித்து த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருந்தார். அதில் "என்னுடைய எக்ஸ் தளம் ஹேக் செய்யப்பட்டு விட்டது. கணக்கை மீட்டெடுக்கப்படும் வரை அந்த ஐடியில் இருந்து வெளியாகும் கருத்துக்கள் என்னிடம் இருந்து வந்தவை அல்ல" என்று பதிவிட்டு இருந்தார்.
எக்ஸ் தளம் மீட்கப்பட்டது: இந்த நிலையில் நேற்று காதலர் தினத்தில் தன்னுடைய செல்ல நாய்க்குட்டி இஸியின் மீது தனக்கு இருக்கும் காதலை திரிஷா எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதனால் அவருடைய எக்ஸ் தளம் மீட்டெடுக்கப்பட்டு விட்டது என்று தெரிகிறது. அதே நேரத்தில் திரிஷா அஜித்துடன் நடித்த விடாமுயற்சி திரைப்படம் சமீபத்தில் தான் வெளியானது.
த்ரிஷா, அஜித் ஜோடி: விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷாவின் நடிப்பை பலரும் பாராட்டியும், திட்டியும் வருகிறார்கள். சிலர் திரிஷா அழகாக நடிக்கிறார் என்று கூறினாலும் அவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. த்ரிஷா அஜித்துடன் சேர்ந்து கிரீடம், ஜீ, மங்காத்தா, என்னை அறிந்தால் என பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் எந்த படங்களிலும் இருவரும் திருமணம் செய்வது போன்று காட்டப்படவில்லை.ஆனால் விடாமுயற்சி படத்தில்தான் இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக நடித்திருந்தனர்.

பழி வாங்கிய த்ரிஷா: ஆனாலும் அதில் த்ரிஷாவின் கேரக்டரை ரசிக்க முடியவில்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. அதுபோல அஜித்தை த்ரிஷா பழிவாங்கும் காட்சிகளை பார்க்கும் ரசிகர்கள் இது மங்காத்தா பார்ட் 2 படம் போல் இருக்கிறது, 13 வருடங்கள் கழித்து அஜித்தை ஒரு வழியாக திரிஷா பழி வாங்கி விட்டார் என்று கிண்டல் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது. ஆனாலும் த்ரிஷா அவருடைய காதலரோடு புகைப்படம் வெளியிடுவார் என்று பார்த்தால் அவருடைய செல்ல நாய்க்குட்டியுடன் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது குறித்தும் இணையத்தில் அதிகமானோர் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
