விருப்பமே இல்லாமல் சன் டிவியில் சேர்ந்தேன்.. ஆனால் அங்கு நடந்ததை மறக்க முடியாது! நடிகை உமா ஓப்பன்
சென்னை: சன் டிவியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்த வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உமா தொடர்ச்சியாக பல சீரியல்களிலும், சினிமாக்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சன் டிவியில் தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது? அதற்கு பிறகு தான் எதனால் சன் டிவியில் இருந்து விலகினேன் என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகை உமா ஐயர் சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மத்தியில் தொகுப்பாளராக இடம் பிடித்திருக்கிறார். அதோடு செய்தி வாசிப்பாளராகவும், நடிகையாகவும் இப்ப வரைக்கும் ஜொலித்துக் கொண்டிருக்கும் உமா, சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் தன்னுடைய ஆரம்பகால சன் டிவியில் பயணத்தை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

அதில் உமா பேசுகையில், ஆரம்பத்தில் துர்தர்ஷன் மட்டும்தான் என்டர்டைன்மென்ட் ஆக எல்லோருக்கும் இருந்த நிலையில் சன் டிவி முதல் முதலாக தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில் பொதுமக்களுக்கும் சன் டிவி நிகழ்ச்சகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அப்போது நானும் பொதுமக்கள் போல தான் சன் டிவி நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் சன் டிவியில் பணிபுரிய ஆட்கள் தேவை என்ற விளம்பரம் வந்தது.
ஏற்கனவே நான் பல மேடை நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறேன். எதையும் தைரியமாக பேசி விடுவேன் அதனால் எங்கள் வீட்டில் தான் எல்லோரும் நான் சன் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அந்த நேரத்தில் டிவி சேனல்களில் வருவதெல்லாம் விருப்பம் கிடையாது. ஆனாலும் எங்க வீட்டில் உள்ளவர்கள் அதற்கான ஃபார்ம் வாங்கிட்டு வந்து எல்லாமே அவர்களே நிரப்பி என்னை கட்டாயமாக கையெழுத்து போட சொல்ல வேறு வழியில்லாமல் தான் கையெழுத்து போட்டேன்.
ஆனால் சன் டிவிக்கு போன பிறகுதான் என்னுடைய வாழ்க்கையில் எனக்கே தெரியாமல் செய்த நல்ல விஷயம் இதுதான் என்று தெரிய வந்தது. சன் டிவியில் எனக்கு பல நிகழ்ச்சிகளை தைரியமாக செய்யலாம் என்று அனுமதி கிடைத்திருந்தது. ஒரு சிலருக்கு செய்தி வாசிப்பாளராக மட்டும் இருப்பார்கள். ஒரு சிலர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்கள் ஆனால் நான் எல்லாவற்றிலும் ஒரு ரவுண்ட் அடித்து விடுவேன்.
சன் டிவி தொடங்கி ஆறு மாதத்தில் நான் அங்கு சேர்ந்தேன். அப்போது ஆரம்பத்தில் இப்ப இருக்கிற மாதிரி பிராம்டரை பார்த்து நியூஸ் படிக்க முடியாது. எழுதி வைத்து படிக்க வேண்டும், கேமராவையும் பார்க்க வேண்டும். அதுபோல காம்பியரிங்கிலும் சவாலாகத்தான் இருந்தது. அதிலும் குறிப்பாக 1996 ஆம் ஆண்டு தேர்வு முடிவுகள் லைவாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது மணிலாவில் இருந்து அப்ளிங் செய்யப்பட்டது.
அப்போதெல்லாம் ஒரு பேக்ஸ் மட்டும் தான் வரும். அதில் சிறிய எழுத்தை தவறாக வாசித்தாலும் அவ்வளவுதான். அதில் ரொம்பவே கவனமாக நான் இருப்பேன். அது போல வணக்கம் தமிழகம் நிகழ்ச்சி ஆயிரம் எபிசோடுகளை கடந்து சென்றது. அதில் பல எபிசோடுகள் எனக்கு பிடித்ததாக அமைந்தது. அதுவரைக்கும் அரசியல் பிரமுகர்கள், பாடகர்கள் எல்லோரும் பற்றி மக்களுக்கு யாரேனும் சொல்லியோ அல்லது சம்பந்தப்பட்டவர்களே சொல்லியோ தெரிந்திருக்கும்.
ஆனால் அவர்களுடைய குடும்பத்தில் அவர்களுடைய மனைவி அந்த பிரபலங்கள் குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதை வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியில் பேச வைத்தது பெரிய அளவில் பாராட்டை பெற்றது. அதையெல்லாம் என்னால் மறக்கவே முடியாது. வணக்கம் தமிழகம் நிகழ்ச்சி 1000 எபிசோடுகளை கடந்த பிறகு நான் தான் போர் அடிக்கிறது என்று கலாநிதி மாறனிடம் சொல்லிவிட்டு அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினேன்.
அதற்கு பிறகு பல சீரியல்களிலும் திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். ஆனாலும் சன் டிவியில் நான் பணிபுரிந்த காலங்கள் அவ்வளவு சீக்கிரமாக மறக்க முடியாது என்று அந்த பேட்டியில் உமா பேசியிருக்கிறார். உமா குறித்து ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக் கூட ஒரு காலத்தில் டிவியை திறந்தால் உமாவின் முகத்தை பார்க்காமல் இருக்க முடியாது. ஆப் செய்த பிறகும் டிவியில் உமாவின் முகம் தான் தெரியுது என்று கலாய்த்து இருப்பார். அந்த அளவிற்கு சன் டிவி மட்டுமல்லாமல் விஜய் டிவி, ஜெயா டிவி என்று பல சேனல்களில் உமா மாறி மாறி வேலை பார்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications