ராஜேஷுக்கு “இந்த” மன அழுத்தம் தான் அதிகமாக இருந்தது.. கடைசியாக சொன்ன வார்த்தை.. கதறி அழுத வடிவுக்கரசி
சென்னை: நடிகர் ராஜேஷ் நேற்று காலையில் உடல்நல குறைபாட்டால் காலமானார். அவருடைய நினைவுகள் குறித்து அவருடைய நெருங்கிய நண்பர்கள் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நடிகை வடிவுக்கரசி ராஜேஷுக்கு இருந்த மன அழுத்தம் குறித்து கதறி அழுது பேசியிருக்கிறார்.
நடிகர் ராஜேஷ் நடிகராக 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பல திறமைகள் கொண்டவர். டப்பிங் கலைஞர், சீரியல் நடிகர், ஜோதிடர் என்று பன்முகத் திறமை கொண்டு விளங்கினார். அதுபோல தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தார். இந்த நிலையில் தான் நேற்று மே 29ஆம் தேதி அதிகாலை மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி சினிமா துறையை நிறைய சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ராஜேஷுக்கு பிரபலங்கள் வருத்தம்
ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் ராஜேஷ்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ராஜேஷின் முதல் திரைப்படமான கன்னிப் பருவத்திலே திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை வடிவுக்கரசி அவருடைய உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியிருந்தார். பிறகு அழுதபடியே செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார்.
நடிகர் ராஜேஷ் மறைவு
அப்போது, நான் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பேசுவேன் என கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவே இல்லை. ஒழுக்கமான மனிதர் ராஜேஷ். 46 வருடம் சினிமாவில் இருந்திருக்கிறார். முதல் படத்தில் கதாநாயகியாக நான் நடித்ததில் இருந்து பத்து நாளைக்கு முன்ன பேசும் வரைக்கும் என்கிட்ட எல்லாமே சொல்லுவார். ரொம்ப டிசிப்ளின் ஆனவர். எதையும் பிளான் ஓட தான் பண்ணுவார். ஆனால் இது மட்டும் அவருக்கு எப்படி தெரியாமல் போச்சுன்னு தெரியலையே?
வடிவுக்கரசி பேட்டி
மத்தவங்களுக்கு எல்லாம் அவ்வளவு அட்வைஸ் சொல்லுவாரு. அப்படிப்பட்டவருக்கு இப்படி நடக்கும்னு தெரிஞ்சுக்காம போனாரு என்பதுதான் காலையில் இருந்து எனக்குள் ஓடிக்கிட்டே இருக்கு. இந்த நிமிஷம் வரைக்கும் கூட நம்பிக்கையே இல்லை... நான் எங்கேயுமே மைக் முன்னாடி எல்லாம் பேசவே மாட்டேன். இழந்தவர்களுக்கு தான் அவங்களோட வலி வேதனை தெரியும். ஆனால் இது ரொம்ப வலிக்குது. ரொம்ப வேதனையா இருக்கு.
வடிவுக்கரசியின் கிண்டல்
பத்து நாளைக்கு முன்னாடி என்கிட்ட பேசும்போது கூட நான் கல்யாணம் வைக்க போறேன், இன்விடேஷன் கொண்டு வரேன்னு சொன்னார். நான் கிண்டலுக்காக, "பரவாயில்லையே சார் நீங்க 75 வயசுல இன்னொரு கல்யாணம் பண்ணிக்க போறீங்க" என்று சொன்னேன். அவர் ரொம்ப ஒழுக்கமானவர். போன பிறந்த நாளில் கூட என்னை வாழ்த்தினார். என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளிலும் நான் மறந்தால் கூட அவர் மறக்கவே மாட்டார். அவரிடம் இருந்துதான் எனக்கு முதல் போன் வரும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஃபர்ஸ்ட் டே எப்படி பழகினாரோ அதேபோலத்தான் எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்.
கதறி அழுத வடிவுக்கரசி
நாங்கள் கடைசி ரெண்டு மாசத்துக்கு முன்னாடி திருச்சியில் ஒரு சித்தா ஹாஸ்பிடல் திறந்து வைக்க போன போது கூட சார் இந்த இடம் ஞாபகம் இருக்கான்னு? கேட்டேன். திருச்சி என்று சொன்னா உங்களுக்கு என்ன ஞாபகம் வரும் சொல்லுங்கன்னு சொன்னபோது, "கன்னிப்பருவத்திலே இங்க தானே நாம நடிச்சோம்னு சொன்னாரு" என்று பேசிக் கொண்டிருக்கும்போதே வடிவுக்கரசி அழுதிருந்தார்.
அம்மா சொன்ன வார்த்தை
அதோடு வடிவுக்கரசி மேலும் பேசும் போது, ராஜேஷுக்கு அவருடைய தம்பி மற்றும் மகன் மீதுதான் ரொம்பவும் பயமும், பாசமும் இருந்தது. தன்னுடைய தம்பிக்கும், மகனுக்கும் வெளி உலகமே தெரியல. இவங்க இந்த உலகத்தில் எப்படி வாழ போறாங்கன்னு தெரியலையேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. அவங்க அம்மா இறக்கும்போது தம்பி பற்றி சொல்லிக்கிட்டு இறந்ததா கூட சொல்லி இருக்கிறார்.
குழந்தைகள் மீது பாசம்
நீதான் இவனை நல்லா பாத்துக்கணும், கடைசிவரை விட்டுவிடாதே இவனுக்கு வெளி உலகம் தெரியாதுன்னு எங்க அம்மா சொல்லிட்டு போயிட்டாங்க அதனால என்னுடைய தம்பியை நான் தான் பாத்துட்டு வரேன்னு ராஜேஷ் சொல்லி இருக்காரு. அவருக்கு மகன் மற்றும் மகள் மீது ரொம்பவும் பாசம். ஆனா இப்ப அந்த மகன் கல்யாணத்தை கூட பார்க்காம போயிட்டாரே என்று தான் ரொம்ப வருத்தமா இருக்கு என்று கதறி அழுதப்படியே வடிவுக்கரசி பேசி இருந்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications