“அப்படி” நடிக்கும்போது பாக்யராஜ் உடன் காதல்? நடிகர் ராஜ்கிரண் சொன்ன வார்த்தை..மனம் திறந்த வடிவுக்கரசி
சென்னை: வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை வடிவுக்கரசி தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அப்போது நடிகர் பாக்கியராஜ் உடன் நடிக்கும் போது வடிவுக்கரசியும், பாக்யராஜூம் காதலிக்கிறார்கள் என்று ஒரு வதந்தி பரவி வந்தது என்றும் கூறியிருக்கிறார்.
அப்போது அந்த திரைப்படத்தின் இயக்குனராக இருந்த நடிகர் ராஜ்கிரண் தன்னிடம் பேசிய வார்த்தையால் கோபத்தில் தான் சண்டையிட்டது பற்றி வடிவுக்கரசி அதில் பேசியிருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்னதிரையிலும் இப்போதும் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை வடிவுக்கரசி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பல மொழிகளிலும் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அதே நேரத்தில் நடிகை வடிவுக்கரசி 1979 இல் வெளியான "கன்னிப்பருவத்திலே" என்ற திரைப்படத்தில் நடித்து தான் அறிமுகம் ஆகி இருக்கிறார். அந்த திரைப்படத்தில் வடிவுக்கரசி ஜோடியாக நடிகர் ராஜேஷ் நடித்திருப்பார். ஆரம்ப காலகட்டத்திலேயே கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றால் அந்த அளவிற்கு விருப்பமில்லாமல் இருந்த வடிவுக்கரசிக்கு ஒரு சில திரைப்படங்களில் மட்டும் தான் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அதற்கு காரணம் கதாநாயகி என்றால் டான்ஸ் ஆட வேண்டும், கதாநாயகனோடு ரொமான்ஸ் பண்ண வேண்டும். அது எனக்கு சுத்தமா வராது. அதனால் தான் நான் அந்த மாதிரி கேரக்டரை தவிர்த்து வந்தேன் என்றும் வடிவுக்கரசி கூறி இருக்கிறார். அதோடு அவர் நடிகர் ரஜினி நடித்த அருணாச்சலம் திரைப்படத்தில் பாட்டியாக நடித்து பலரையும் மிரட்டி இருப்பார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி வடிவுக்கரசி பேசி இருக்கிறார். அப்போது நான் கன்னி பருவத்திலே என்ற திரைப்படத்திற்காக 30 நாள் சூட்டிங்க்கு திருச்சிக்கு சென்றிருந்தேன். அப்போ எனக்கு டயலாக் எல்லாமே பாக்யராஜ் தான் சொல்லிக் கொடுத்திருந்தார். அப்போது பிரவீனாவிற்கும் பாக்யராஜுக்கும் காதல் விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் என்னை பார்க்க வருவது போல் பாக்கியராஜ் பிரவீனாவை பார்ப்பார். பாக்யராஜ் யாராவது ஒரு பெண்ணிடம் பேசினால் உடனே நான் பிரவீனாவிற்கு சொல்லிவிடும் வேலையைத்தான் செய்து வந்தேன். அந்த நேரத்தில் எனக்கு மட்டும் அம்பாசிடர் கார் கொடுத்து அனுப்புவார்கள். அப்போது பாக்யராஜ் சாரை காரில் ஏற்றிக் கொண்டு சென்ற போது பிரவீனா பற்றி பேசிக்கொண்டே வருவார். இதை சிலர் ராஜ்கிரண் சாருக்கு கால் செய்து வடிவுக்கரசியும் பாக்யராஜூவும் காதலிக்கிறார்கள் என்று சொல்லிக் கொடுத்திருக்கின்றனர்.

ஒரு நாள் நைட் காட்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது ராஜ்கிரண், "இங்க அவா அவா என் காசுல ஹனிமூன் கொண்டாடுகிறார்கள்" என்று கோபத்தில் சொல்ல, அதைக்கேட்டு கோபமான நான் உடனே அங்கிருந்து சேரை எடுத்து தூக்கி வீசி கத்தியதால் அப்போதைய செய்திகளில் வடிவுக்கரசிக்கு பேய் பிடித்து விட்டது என்றெல்லாம் சொன்னார்கள். அப்போது அந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது என்றும் அந்த பேட்டியில் வடிவுக்கரசி ரகசியங்களை உடைத்திருக்கிறார்.
-
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications