என் வாழ்நாளில் நான் எதிர்பார்க்காதது.. எங்கேஜ்மென்ட்க்கு பிறகு விஜய் டிவி நடிகையின் உருக்கமான பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வைஷ்ணவி சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக முத்து கேரக்டரில் நடிக்கும் நடிகர் வெற்றி வசந்துடன் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. அதற்கு பிறகு வைஷ்ணவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெகழ்ச்சியான பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதற்கு பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த வைஷ்ணவி அந்த சீரியல் முடிவடைந்ததும் விஜய் டிவியில் பொன்னி என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த சீரியலில் ஏழை குடும்ப பெண்ணாக நடித்துக் கொண்டிருக்கும் வைஷ்ணவிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் வெற்றி வசந்த்க்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை எங்கேஜ்மென்ட் நடைபெற்றது.

எங்கேஜ்மென்ட்க்கு பிறகு வைஷ்ணவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெற்றி வசந்தோடு எடுத்த வீடியோவை பகிர்ந்து ஒரு நெகிழ்ச்சியான கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதில் என் வாழ்நாளில் நான் எதிர்பார்க்காத ஒன்று நீங்கள். ஆனால் கடவுளின் கிருபையால் உங்களை ஒருபோதும் மாற்ற முடியாத ஒருவராக நான் பெற்றுள்ளேன். என் வாழ்க்கையை இவ்வளவு ஆழமாகத் தொடும் ஒருவரை நான் கண்டுபிடிப்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

மேலும் எனக்கு சுவாசிக்க ஒரு புது காரணத்தை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். உங்களுக்காக போராடவும், உனக்காக சமரசம் செய்யவும்... தேவைப்பட்டால் உனக்காக என்னையே தியாகம் செய்யவும் நான் உன்னை நேசிக்கிறேன். நான் உங்களுக்கு சிறந்த மனிதனாக இருப்பேன் என்று இந்த செய்தி மூலம் உங்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் நான் உன்னை காதலிக்க போகிறேன்.

மேலும் நீங்கள் செய்யும் அனைத்திற்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். உங்கள் புரிதல் விருப்பமும் எனக்காகவே இருக்கு. முதல் அன்பு என் வாழ்க்கையில் ஓர் உண்மையான பரிசு. நான் அதற்கு மிகவும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். இத்தகைய அற்புதமான நண்பராக இருப்பதற்கும் உங்கள் அசைக்க முடியாத ஆதரவிற்கும் எப்போதும் நான் உங்களுக்காக இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

அதோடு தனக்கு வாழ்த்து கூறிய ரசிகர்கள் அனைவருக்கும், நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார். இந்த பதிவுக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை பிரபலங்கள் பலரும் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவியின் எங்கேஜ்மென்ட்க்கு வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்கள். வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி கடந்த இரண்டு மாதங்களாகத்தான் காதலித்து வருகிறார்களாம்.

இவர்களின் காதலுக்கு வீட்டில் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எங்கேஜ்மென்ட் நடைபெற்று இருக்கிறது. இவர்களுடைய எங்கேஜ்மெண்டில் சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர் மற்றும் ராஜா ராணி சீரியல், பொன்னி சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஆனால் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து அதாவது வெற்றிவசத்துக்கு ஜோடியாக நடிக்கும் கோமதி பிரியா மட்டும் கலந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. எந்த புகைப்படங்களிலும் கோமதி பிரியாவை காணவில்லை என்பதால் ரசிகர்கள் அவரைத் தேடி வருகிறார்கள். அதுபோல சீரியலில் நான் பார்லர் அம்மா என்று முத்து அடிக்கடி திட்டி கொண்டு இருக்கும் ரோகிணியும் இவருடைய எங்கேஜ்மென்ட் பங்க்ஷனில் கலந்து கொண்டு இவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications