ஜெய் உடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பா!? நான் கஷ்டப்பட்டு வாங்கியது..என்னை பார்த்து? வாணி போஜன் வருத்தம்
சென்னை: நடிகை வாணி போஜன் தான் நடிகர் ஜெய் உடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாக பரவி தரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
எதற்காக இப்படி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை ஒன்றாக நடித்தால் இப்படி எல்லாம் பேசுவார்களா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த வீட்டில் தான் இருக்கிறேன் என்று வாணி போஜன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சின்னத்திரை நயன்தாரா
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலின் மூலமாக சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்கள் இவரை செல்லமாக அழைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு இவரிடம் நடிகை நயன்தாராவின் சாயல் சின்னத்திரையில் தெரிந்து வருவதாகவே ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதனாலேயே இப்போது இவருக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

வதந்திகளுக்கு பஞ்சமில்லை
ஒரு நபர் பிரபலமாக இருந்து விட்டாலே அவர்களைப் பற்றிய சர்ச்சைகளும் வதந்திகளும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி விடும். அந்த மாதிரி தான் தற்போது கூட வாணி போஜன் பற்றி சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வதந்திகள் வந்த வண்ணமாக இருக்கிறது. அதில் நடிகர் ஜெய் உடன் வாணி போஜன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாக பலரும் கூறி வருகின்றனர். அதற்கு முதல் முறையாக வாணி போஜன் பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

வாணி போஜன் பதிலடி
அதில் ஒருவர் ஒன்றாக நடித்து விட்டால் இப்படி எல்லாமா பேசுவாங்க? எதற்காக இப்படி பேசுறாங்கன்னு தெரியலையே? நான் என்னுடைய சொந்த உழைப்பில் வாங்கிய வீட்டில் தான் நான் இருந்து வருகிறேன். வேறு எங்கேயும் இல்லை. ஆனால் என்னைப் பற்றி எப்படி எல்லாமோ சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் நடிக்க வந்துவிட்டால் பிரைவேசி என்று ஒன்று இருக்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். ஒருத்தங்களை பற்றி பேசுவதால் அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அதனால் அவர்களுடைய குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும் என்று நினைக்கவே மாட்டாங்களா? என்று கேட்டிருக்கிறார்

இனி மாற்றம் வருமா
நான் வெளியே என்னுடைய நண்பர்களோடு சென்றால் கூட அது வேறு விதமாக பேசப்பட்டு வருகிறது. எதற்காகத்தான் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இதைப்பற்றி நான் கவலைப்பட போவது இல்லை. எனக்கு அடுத்தடுத்த வேலைகள் இருந்து கொண்டே இருக்கிறது. அதில் தான் என்னுடைய கவலைகள் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சிலர் அசோக் செல்வனோடு என்னை இணைத்து பேசி வருகிறார்கள். அசோக் செல்வன் எனக்கு ஒரு தம்பி மாதிரி தான். திரைப்படத்தில் தான் நாங்கள் ஒன்றாக நடிக்கிறோம் ஆனால் வெளியே இதுவும் வேற விதமாக பேசி வருகிறார்கள் என்று தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications