அந்த உறவு என்னை உறுத்தி கொண்டே இருக்கும்..! பவதாரணி இறப்பால் உடைந்து போன வனிதா பதிவு
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே அவருடைய உடல்நிலை பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் பவதாரணி காலமானார். இன்று அவருடைய உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட இருக்கிறது.
பாடகி பவதாரணியின் மரண செய்தியை கேட்டு அவருடைய ரசிகர்களும் பிரபலங்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வனிதா பவதாரணி குறித்து உருக்கமான பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதோட தன்னுடைய முதல் பாடலை பவதாரணி தான் பாடினார் என்று நினைவுகளையும் பகிர்ந்து இருக்கிறார்.

மறைந்த பாடகி பவதாரணி எக்கச்சக்கமான பாடல்களை பாடி இருக்கிறார். இரண்டாயிரத்தில் வெளியான பாரதி திரைப்படத்தில் இடம் பெற்ற மயில் போல பொண்ணு என்ற பாடல் இவர் பாடிய சிறந்த பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் பெற்ற இவர் பாடல் பலருடைய ஃபேவரைட் ஆக இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் சிம்பு நடித்த மாநாடு படத்தில் வரும் மெஹரசீலா என்ற பாடலையும் பவதாரணி பாடி இருந்தார்.
இந்த நிலையில் 47 வயதான பவதாரணியின் மறைவு திரை உலகினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். அதில் நடிகையும் பிக் பாஸ் 3 போட்டியாளருமான வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவதாரணியோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமான சில விஷயங்களையும் அதில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் பவதாமா நீ எனக்கு வெறும் தோழி இல்லை, நீ எனக்கு சகோதரி இல்ல, ஆனால் நீ எனக்கு யார் என்பது உனக்கு தெரியும்.... நமக்குள் இருந்த உறவு எப்போதுமே நீடித்திருக்கிறது. நீயும் நானும் ஜீவாமை மிகவும் மிஸ் செய்திருப்போம். அவருக்கு என்னுடைய அன்பை கொடுத்துவிடு, நீ கடவுளின் குழந்தை, நீ இந்த உலகத்தை விட்டு பிரிந்தது என்னை அதிகமாக உலுக்கி இருக்கிறது.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்னுடைய முதல் பாடலை நீ தான் பாடினாய். அதற்குப் பிறகு பல பாடல்கள் பாடியிருக்கிறார். உன்னை மீண்டும் சந்திக்கும் வரை சிறுவயதில் நமக்குள் இருந்த உறவு என்னை உறுத்திக் கொண்டே இருக்கும். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... என்று தன்னுடைய மன கஷ்டத்தை விவரித்து இருக்கிறார். அதோடு வனிதாவும் பவதாரணியும் சிறுவயதில் இருந்தே தோழிகளாக இருந்திருக்கின்றனர். வனிதா வெளியிட்ட பதிவிற்க்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications