என் மகள் காதலிச்சிருந்தா இந்த பிரச்சனையே இல்லை.. வருத்தப்படும் நடிகை வனிதா.. இனி இதுதான் நடக்குமாம்!
சென்னை: நடிகை வனிதா பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர் என்று சொல்லும் அளவிற்கு அடிக்கடி ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொண்டே இருக்கிறார்.
இணையத்தில் எப்போதும் நடிகை வனிதாவுடைய பெயர் அடிபட்டுக் கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு ஏதாவது ஒரு விஷயத்தை அவர் அடிக்கடி செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய மகள் கண்டிப்பாக சீக்கிரம் காதலில் விழுவாள் என்று அடித்து கூறி மேலும் பல விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறார். அதைக் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நடிகை வனிதா வெள்ளி திரையில் பல முன்னணி கதாநாயகர்களோடு ஜோடியாக நடித்து புகழின் உச்சத்தில் இருக்கும்போது திடீரென்று திருமணத்தை செய்து சினிமாவை விட்டு விலகி இருந்தார். திருமண வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த ஏமாற்றங்கள் மற்றும் பிரச்சனை காரணமாக அடுத்தடுத்து திருமணங்களை செய்து கொண்டு சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டிருந்தார்.
நடிகை வனிதாவின் திருமணம், காதல் பற்றிய பிரச்சனைகள் ஒரு பக்கம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நடிகை வனிதாவிற்கு அப்பாவோடு ஏற்பட்ட பிரச்சனைகள் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் சென்றது. அனைவருக்கும் தெரிந்ததுதான். எத்தனையோ பிரச்சனைகள் தனக்கு இருந்தாலும் தன்னுடைய மகள்களோடு துணிச்சலாக தனியாக வாழ்ந்து வரும் வனிதா இப்போது சினிமாக்களிலும், சீரியல்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை வனிதாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கும் நிலையில் மகன் அவருடைய அப்பாவிடம் இன்னொரு மகள் அவருடைய அப்பாவுடனும் ஒரு மகள் மட்டும் நடிகை வனிதாவோடு இருக்கிறார். இந்த நிலையில் நடிகை வனிதா இப்போது பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான நிகழ்வுகளை பற்றி பேசி இருக்கிறார். அப்போது தன்னுடைய மகளுடைய கேரக்டர் பற்றியும் பேசி இருக்கிறார்.

அதில் என்னுடைய மகள் என்னை மாதிரி வீக்கான ஆள் கிடையாது. அவ ரொம்பவே ஸ்ட்ராங்கானவள். காதல் விஷயத்தில் ரொம்பவே போல்டாக இருக்கிறவள். அவளுக்கு இதுவரைக்கும் ஒரு பாய் பிரண்ட் கூட கிடையாது. ஒரு பாய் பிரண்ட் வச்சுக்கிட்டா நல்லது என்று சொன்னா கூட என்ன பார்த்து முறைக்கிறா..! எங்கே போனாலும் ஆட்டோவில் அவளா போயிட்டு, ஆட்டோவில் லொங்கு லொங்கு வென்று வீட்டிற்கு வந்து சேருகிறார். அதுவே ஒரு பாய் ஃப்ரெண்ட் இருந்தால் ஜாலியா பைக்கில் போயிட்டு வந்துரலாம்.
துணிகளை எல்லாம் அவனே மடிச்சு தந்துருவான் என்று சொன்னால், நம்ம பார்த்து முறைக்குறா என்று ஜாலியாக அந்த பேட்டியில் வனிதா பேசியிருக்கிறார். மேலும் இப்ப வரைக்கும் இவ்வளவு போல்டாக இருக்கும் இவள் சீக்கிரமாக காதலில் விழுவாள் அதுவும் ரொம்பவே சின்சியராக காதலில் விழுவாள். அது எனக்கு கான்ஃபிடண்டா தெரியும் என்று சொல்ல, அப்போதும் பக்கத்தில் இருக்கும் அவருடைய மகள் அவரைப் பார்த்து முறைத்துக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் பலர் வனிதாவிற்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications