மகள் மற்றும் மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை வனிதா.. உருக்கமாக வெளியிட்ட பதிவு.. குவியும் ஆறுதல்கள்
சென்னை: நடிகை வனிதா தன்னுடைய இரண்டு மகள்கள் மற்றும் மகனுடைய சிறு வயது புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதிலும் தன்னுடைய அம்மா மஞ்சுளாவின் மடியில் தன்னுடைய குழந்தைகள் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்து இருக்கும் நிலையில் அதிகமான ரசிகர்கள் வனிதாவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் தன்னுடைய குழந்தைகள் பற்றி சில உருக்கமான வார்த்தைகளையும் வனிதா கேப்ஷனாக கொடுத்து இருக்கிறார்.

வெள்ளி திரையில் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்த நடிகை வனிதா ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு பிறகு சினிமாவை விட்டு காணாமல் போய் இருந்தார். சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் நடிகை வனிதாவின் குடும்ப பிரச்சனை மூலமாக செய்தி சேனல்களிலும், இணையத்திலும் இவருடைய பெயர் அடிக்கடி அடிபட்டுக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் தான் நடிகை வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் உள்ளிருந்த போட்டியாளர்களிடம் இவர் செய்த வாக்குவாதங்கள் பிரச்சனைகள் பலருக்கும் இவரா இப்படி என்று சொல்லும் அளவிற்கு அதிர்ச்சியை கொடுத்தது.
இதுபோல அந்த நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது கூட இவருடைய குடும்ப பிரச்சனை காரணமாக வனிதாவை தேடி போலீஸ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தது என அடுத்தடுத்த சர்ச்சைகளில் பரபரப்பாக பேசப்பட்டிருந்த வனிதாவிற்கு பெரிய அளவில் திருப்புமுனையை கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
அதுவரைக்கும் டெரராக பார்த்துக் கொண்டிருந்த நடிகை வனிதா முதல் முறையாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையை காட்டி பலரையும் வியக்க வைத்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தொடர்ச்சியாக சீரியல்கள் சினிமா என பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகை வனிதா அவருடைய குடும்பத்தினர் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனியாக தன்னுடைய இரண்டு மகள்களோடு வசித்து வருகிறார். வனிதாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் வனிதாவிற்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் மகள்கள் மட்டும்தான் வனிதாவோடு இருக்கின்றனர். மகன் அவருடைய தந்தையோடு தான் இருந்து வருகிறார்.
வனிதாவோடு அவர் பேசாவிட்டாலும் மகன் மீதான பாசத்தை அவ்வப்போது வனிதா தான் வெளிப்படுத்தி வருகிறார். தன் மகன் எப்படியாவது தன்னுடன் இணைந்து விடுவார் என்று காத்திருப்பதாக பல்வேறு பேட்டிகளிலும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரது மகன் வனிதாவுடன் சேரும் மனநிலையில் இல்லை என்றும் வனிதாவின் மகன் நான் அல்ல ஆகாஷின் மகன் என்று வெளிப்படையாகவே சமூக வலைத்தளத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தன்னுடைய இரண்டு மகள்கள் மற்றும் மகனின் சிறு வயது புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "சில நினைவுகள் என்றும் மறையாது. காலம் பறந்து செல்கிறது. குழந்தைகள் மிக விரைவாக வளர்ந்து உங்களுக்கு சமமானவர்களாக மாறிவிடுகிறார்கள். என் மகள்கள் என் வாழ்க்கையில் சிறந்த நண்பர்கள் மற்றும் அவர்கள் இருக்க வேண்டிய அனைத்து குணங்களுடன் அழகான மனிதர்களாக வளர்ந்து வருகிறார்கள். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்" என்று கூறி இருக்கிறார்.
புகைப்படங்களில் மகள்கள் மட்டுமல்லாமல் மகனும் இருக்கிறார். அதுபோல வனிதாவின் அம்மாவான நடிகை மஞ்சுளாவும் அந்த புகைப்படங்களில் இருக்கிறார். அது குறித்து அதிகமான ரசிகர்கள் வனிதாவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்த அழகிய குடும்பம் மீண்டும் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பலர் ஆசீர்வாதங்களையும் கமெண்டுகளில் கொடுக்கின்றனர்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications