அம்மா அப்பவே சொன்னாங்க.. நான் தான் கேட்கல, ஏமாத்துறாங்க.. நடிகை வனிதா உருக்கம்
சென்னை: சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை வனிதா தன்னுடைய அம்மா பற்றி மனம் உருகி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் தான். இந்த நிலையில் தன்னுடைய அம்மா மஞ்சுளா மறைவுக்கு பிறகு , அம்மா ஆரம்பத்தில் என்னிடம் சொன்னது இப்போது நடந்து விட்டது என்று பேட்டியில் வனிதா பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் வனிதா தன்னுடைய தந்தை மற்றும் குடும்பத்தினர் பற்றி மீண்டும் பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா வாரிசு குடும்பங்களான மஞ்சுளா விஜயகுமார் தம்பதியும் மூத்த மகள் வனிதா. இவர் 1990 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் 90 கிட்ஸ்களின் ஃபேவரைட் திரைப்படம் தான்.
அதற்குப் பிறகு தமிழ், தெலுங்கு என சில மொழிகளில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பிறகு தன்னோடு நாடகத்தில் நடித்த நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன ஒரு சில வருடங்களுக்குள் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருந்தனர். அதற்குப் பிறகு வனிதா இரண்டு திருமணம் செய்து இருந்தார் அதுவும் அவருக்கு சரியாக அமையவில்லை.
இந்த நிலையில் தனது பெண் குழந்தைகளோடு தனியாகத்தான் இப்போது வசித்து வருகிறார். அதே நேரத்தில் குடும்ப பிரச்சனையில் இருந்த வனிதாவிற்க்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றிருந்தார். இந்த நிலையில் இப்போது அதிகமான திரைப்படங்களிலும் சீரியல் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகை வனிதாவை தவிர அவருடைய குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக தான் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் கூட விஜயகுமார் வீட்டில் அவருடைய பேத்திக்கு எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. அதுபோல விஜயகுமாரின் மகள் தன்னுடைய பிரமாண்டமான வீட்டிற்கு கிரகப்பிரவேசம் வைத்திருந்தார். ஆனால் வனிதா எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் வனிதாவின் தாயான மஞ்சுளா கடந்த 2013 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அப்போது அவர் மரணப்படுக்கையில் இருக்கும் போது வனிதாவிடம் அவருடைய அம்மா பல விஷயங்களை பகிர்ந்து கொண்டாராம். அது பற்றி சமீபத்தில் பேட்டியில் வனிதா பேசியிருக்கிறார். அதாவது குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று மஞ்சுளா விரும்பினாராம். அதுபோல உங்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு அவர்கள் உங்களை ஏமாற்றி விடுவார்கள் நான் இருக்கும் போதே என்னிடம் நீ கேள் என்று அவருடைய அம்மா அப்போது பேசினாராம்.
ஆனால் அதற்கு வனிதா உன்னை விட பெரிய செல்வம் என்னிடம் இல்லை என்று சொன்னாராம். அந்த நேரத்தில் வனிதாவின் அம்மா மஞ்சுளாவின் விருப்பத்திற்கு அப்போது அவருடைய தந்தையும் தலையை அசைத்தாராம். ஆனால் தாயின் மரணத்திற்கு பிறகு என்னை எல்லோரும் கைவிட்டு விட்டார்கள். என் குடும்பத்தை நம்ப வேண்டாம் என்று அம்மா சொன்னார். நான் தான் நம்பினேன் என்று அந்த வீடியோவில் வனிதா பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications