அப்பா நல்லவரு தான்.. “இவங்களால” தான் பிரச்சனையே! அருண் விஜய் கூட அன்னைக்கு! வனிதா ஓப்பன் டாக்
சென்னை: நடிகை வனிதா தன்னுடைய அப்பா மற்றும் அருண் விஜய் குறித்து சில வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் என்னுடைய அப்பா நல்லவர் தான் அவர் சிலருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டுதான் என்னை குடும்பத்தை விட்டு பிரித்து வைத்திருக்கிறார் என்று பேசி இருக்கிறார்.
அதோடு நடிகர் அருண் விஜய் அதாவது வனிதாவின் அண்ணன் பற்றியும் அந்த பேட்டியில் வனிதா வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இரண்டு இடங்களில் தன்னுடைய அண்ணனை பார்த்த போது என்ன நடந்தது என்பதை பற்றி அதில் வனிதா பேசியிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் அதிகமாக விஜயகுமார் வீட்டு செய்தி தான் பரவி வருகிறது. நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிலையில் திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. அதைத்தொடர்ந்து இன்று விஜயகுமாரின் கிராமத்து வீட்டில் அவருடைய பேத்திக்கு ரிசப்ஷனுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.
அது குறித்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த திருமண பங்க்ஷனில் கலந்து கொள்ளாத வனிதா சில வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோ இப்போது ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. அந்த பேட்டியில் வனிதா பேசுகையில் என்னுடைய அப்பாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் என்னுடைய அம்மா இறந்த பிறகு என்னுடைய அப்பாவை சிலர் கைபாவையாக மாற்றிவிட்டார்கள். அதேபோல என்னுடைய ரத்த சொந்தங்கள் மீது எந்த தவறும் இல்லை. வெளியே இருந்து வந்தவர்கள் தான் எங்கள் குடும்பத்தை ஒன்று சேரவிடாமல் பிரித்துக் கொண்டே இருக்கிறார்கள். என்னுடைய அம்மா சாகும்போது கூட என்னைப் பற்றி தான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.
என்னுடைய அப்பாவிடமும் என்னை விட்டு விடக்கூடாது என்று சத்தியம் வாங்கி இருந்தார். ஆனால் அம்மா இறந்த பிறகு என்னுடைய அப்பா அப்படியே மாறிவிட்டார். ஆரம்பத்தில் என்னுடைய அப்பாவும் என் மீது பாசமாக இருந்தார். ஆனால் ஒரு சிலருடைய பேச்சைக் கேட்டு தான் அவர் மாறிவிட்டார். அதுபோல அருண் விஜய் அண்ணனுக்கும் என் மீது அதிகமான பாசம் உண்டு. அருண் விஜய்யின் அம்மா தான் எங்களை வளர்த்தது. அதனால் அவரும் என் மீது பாசமாக தான் இருப்பார். அம்மா இறந்து நான் சண்டை போட்டு தனியாக பிரிந்து வந்த பிறகு அருண் விஜய் அண்ணாவை நான் பாட்டியில் வைத்து பார்த்தேன். அப்போது அவர் என்னை பார்த்து லேசாக சிரித்தார். நான் அவரிடம் எப்படி இருக்கீங்க என்று கேட்டேன். அவரும் நல்லா இருக்கிறேன் நீ எப்படி இருக்க என்று கேட்டார். நானும் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு எத்தனை நாளைக்கு தான் நாம இப்படியே பேசாம சண்டை போட்டுக்கிட்டு இருக்கிறது என்று கேட்டேன். அப்போது அவர் இங்கே வைத்து பேச வேண்டாம். வேறொரு இடத்தில் பேசுவோம் நீ இப்போ உன் பிரண்ட்ஸ்களோடு என்ஜாய் பண்ணு என்று சொல்லி இருந்தார். அதுபோல இன்னொரு இடத்திலும் அருண் விஜய் அண்ணனை பார்த்தேன். அப்போதும் அவர் என்னிடம் பேசினார். ஆனால் அவர் என்னிடம் பேசியது வீட்டிற்கு தெரியாது. இப்படி எங்கள் குடும்பத்தில் ரத்த சொந்தங்கள் எல்லோரும் நல்லவங்க தான். ஆனால் வெளியே இருந்து வந்தவங்களால தான் எங்க குடும்பம் பிரிஞ்சு இருக்கு என்று அந்த பேட்டியில் வனிதா பேசியிருக்கையில் இந்த வீடியோ இப்போது இணையத்தில் பரவி வருகிறது. அதோடு வனிதா குறிப்பிடுவது யாரை என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications