ரஜினிகாந்த் என் பையனுக்காக ஹெல்ப் பண்ண காரணம் இதுதான்.. எங்க அப்பாவுக்காக இல்லை.. வனிதா பளிச்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய மகனுக்காக நடிகர் ரஜினிகாந்த் கதை கேட்டு ஓகே செய்தது பற்றி வெளிப்படையாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் ரஜினிகாந்த் என்னுடைய அப்பாவிற்காக என்னுடைய மகனுக்கு உதவி செய்யல, அதற்கு வேறு ஒரு காரணம் இருக்கு என்று அந்த பேட்டியில் வனிதா பேசியிருக்கும் நிலையில் அது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் மூத்த மகளான வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரி, இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் மாம்போ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த திரைப்பட அறிமுக விழாவில் கலந்துகொண்ட விஜயகுமார் தன்னுடைய பேரனுக்காக நடிகர் ரஜினிகாந்த் தான் கதை கேட்டார் என்று கூறியிருந்தார்.

நான் தன்னுடைய பேரன் வெளிநாட்டில் சினிமா படிப்பு முடித்திருக்கிறார். அடுத்து என்ன செய்யலாம் என்று குழப்பத்தில் இருக்கிறார், நடிகராகவா அல்லது திரைப்படத்தை இயக்கலாமா என்று குழப்பத்தில் அவர் இருக்கிறார் என்று நான் சொன்னதும் ரஜினிகாந்த் நல்ல ஒரு இயக்குனரிடம் கதை சொல்லி முதலில் நடிக்க சொல்லுங்கள் என்று சொல்லி இருந்தார். அப்போது விஜய் ஸ்ரீஹரியின் அப்பா (வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ்) ஏற்கனவே இயக்குனர் பிரபு சாலமன் இடம் பேசி இருப்பதாகவும் அவர் ஒரு கதை சொல்லி இருப்பதாகவும் ரஜினியிடம் சொன்னேன்.
உடனே அவர் என்ன கதை என்று கேட்க பிரபு சாலமனே ரஜினியிடம் கதை சொன்னார். அவர் ஓகே செய்ததும் என்னுடைய பேரன் நல்ல படத்தில் நடிக்க தொடங்கி விட்டார் என்று பேசி இருந்தார். ஏற்கனவே வனிதா தன்னுடைய குடும்ப பிரச்சனையின் காரணமாக அவருடைய மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரியை பிரிந்து தான் இருக்கிறார்கள். விஜய் ஸ்ரீஹரி அவருடைய அப்பா ஆகாசுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய மகன் கதாநாயகனாகுவது தனக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்று வனிதா கண்கலங்கி பேட்டிகளில் பேசியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் வனிதா பேசுகையில், ரஜினிகாந்த் அங்கிள் எனக்காக செய்த உதவி பெரியது. அவர் இப்ப என்னுடைய மகனுக்காக மட்டுமல்ல ஏற்கனவே எனக்கு பல உதவிகள் செய்திருக்கிறார். ஆனால் இப்போது என்னுடைய மகனுக்கு ரஜினிகாந்த் உதவி செய்வதற்கு காரணம் என்னுடைய அப்பா கிடையாது.
என்னுடைய அப்பாவிற்கும் ரஜினி அங்கிளுக்கும் ஆரம்பத்தில் நல்ல ஒரு நட்பு இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு சில பிரச்சனைகள் ஏற்பட்டு அதில் விரிசல் ஏற்பட்டிருந்தது. எனக்கும் என்னுடைய அப்பாவிற்கும் பிரச்சனை வந்தபோது கூட ரஜினி சார் எனக்கு சப்போர்ட்டாக இருந்தார். எனக்காக அப்பா மற்றும் குடும்பத்தினரிடம் பேசிய போது அவருக்கு சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. அது பற்றி அவரே என்னிடம் பீல் பண்ணி சொல்லி இருக்கிறார்.
அப்படி இருக்கையில் இப்போது என்னுடைய மகனுக்கு ரஜினி சார் அப்பாவிற்காக உதவி செய்திருக்க மாட்டார். அவர் எனக்காக தான் இந்த உதவி செய்தார் என்று நான் அடித்து சொல்வேன். இதே போல ரஜினி சார் எப்போதுமே ப்ரீத்தாவிற்கோ அல்லது ஸ்ரீ பாப்பாவிற்கோ ரஜினி இப்படி ஹெல்ப் பண்ணியது கிடையாது. அவருக்கு என் மீது அதிக பாசம் உண்டு. அதற்காகத்தான் என்னுடைய மகனுக்கு உதவி செய்தார் என்று அந்த பேட்டியில் வனிதா பேசியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications