கதாநாயகியாகும் வனிதா.. ஜோடி பிக் பாஸ் பிரபலம்! ஒரே படத்தில் ஷகிலா முதல் ஜோவிகா வரை இத்தனை பேரா?
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார், பிக் பாஸ் பிரபலமான ராபர்ட் மாஸ்டருடன் புதிய திரைப்படத்தில் ஜோடியாக நடிக்கிறார்களாம். அதோடு அந்த திரைப்படத்தில் வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் தான் கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கிறார்களாம். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான சூட்டிங் பாங்காங்கில் தொடங்கி இருக்கிறது. அங்குள்ள மாரியம்மன் கோயிலில் சில தினங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்படுகிறது.

அதோடு படத்தின் பெயர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா இருவரும் சில வருடங்களாக சேர்ந்து வாழ்ந்தது குறித்து வனிதா பல இன்டர்வியூவில் பேசி இருக்கிறார்.
அதுபோல ராபர்ட் மாஸ்டரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு வாங்கி தந்தது வனிதா தான் என்று வெளிப்படையாக பேசியிருந்தார். வனிதாவை நான் இப்போது பிரிந்து இருந்தாலும் வனிதா எனக்கு பல விஷயங்களில் அறிவுரை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். எது சரி எது தவறு என்று எனக்கு எடுத்து சொல்லுவார் என்று பிக் பாஸில் ராபர்ட் மாஸ்டர் பேசியிருந்தார்.
அதுபோல ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ரச்சிதாவோடு பழகி வந்தது குறித்து உரிமையோடு வனிதா இன்டர்வியூவில் ராபர்ட் மாஸ்டரை திட்டி இருந்தார். அவர் எதற்காக உள்ளே போக வேண்டும் என்று என்னிடம் கேட்டாரோ அதை செய்யாமல் உள்ளே வேற வேலை செய்து கொண்டிருக்கிறார். என்றெல்லாம் வனிதா கூறி இருந்தார்.

அதுபோல சமூக வலைத்தளத்தை பொருத்தவரையிலும் வனிதா எப்போதுமே ட்ரெண்டிங்கில் தான் இருக்கிறார். அவரைப் பற்றிய செய்திகள் அடிக்கடி டிரெண்டாகி விடுகிறது. அந்த வகையில் இப்போது ராபர்ட் மாஸ்டரோடு வனிதா நடிக்கிறார். அதுவும் கதாநாயகியாக மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார் என்று செய்திகள் இப்போது இணையத்தில் ஹார்ட் டாபிக்காக இருக்கிறது.
காலில் அடிபட்டு நடக்க முடியாமல் இருக்கும் நடிகை ராதிகா.. ஓடோடி வந்து சிவகுமார் செய்த செயல்
ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து கொண்டிருந்த நேரத்தில் திருமண வாழ்க்கையில் இணைந்து விட்டார். அதற்கு பிறகு அவருடைய திருமண வாழ்க்கை அடுத்தடுத்து தோல்விகள் அடைய பிக் பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளுக்கு பிறகு இப்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் முக்கிய கேரக்டரிலேயே வனிதா நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் வனிதா கதாநாயகியாக நடிக்க இருப்பது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறதாம்.
அதோடு இந்த திரைப்படத்தில் வனிதாவின் அப்பாவாக நடிகர் ரவி காந்த், அம்மாவாக ஷகிலாவும் நடிக்கிறார்களாம். அவர்களோடு பிரேம்ஜி மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் போன்ற பலரும் நடிக்கிறார்களாம். வனிதா தன்னுடைய மகளை கதாநாயகி ஆக்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் இப்போது அவர் மீண்டும் கதாநாயகி ஆகி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்திலும் ஜோவிகா இருக்கிறாராம். ஆனால் ஜோவிகா நடிகையாக அல்லாமல் தயாரிப்பு பணியில் தான் இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications