என் பிரார்த்தனை வீண் போகல.. எனக்கு கண்ணீர் வருகிறது.. மகன் குறித்து திடீர் பதிவு போட்ட வனிதா
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய மகன் விஜய் ஸ்ரீ ஹரி குறித்து தன்னுடைய twitter மற்றும் insta பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தன்னுடைய மகன் முதல் திரைப்படத்தில் கமிட் ஆகி இருக்கும் நிலையில் தான் செய்த பிரார்த்தனை வீண் போகவில்லை, தன்னுடைய மகனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று கண்ணீரோடு அந்த போஸ்டில் அவர் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நட்சத்திர குடும்பமாக விஜயகுமாரின் குடும்பம் இருந்து வருகிறது. விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதில் இரண்டாவது மனைவியான நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவருக்கும் கடந்த ஆகாஷ் என்பவருக்கும் கடந்த 2000 ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆகாஷ் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் வனிதாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007ஆம் ஆண்டு இவர்களுக்குள் விவாகரத்து ஆனது. இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற ஒரு மகன் இருக்கிறார். விவாகரத்துக்கு பிறகு குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை காரணமாக மகன் ஸ்ரீஹரியை வனிதா பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஸ்ரீஹரி இப்போது அப்பாவின் அரவணைப்பிலும் தாத்தாவின் கண்காணிப்பிலும் இருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு ஒரு ரசிகர் நீங்கள் வனிதாவின் மகன் தானே என்று கேட்ட கேள்விக்கு நான் ஆகாஷின் மகன் என்று பதில் கொடுத்திருந்தார். வனிதா மீது அவருக்கு இருக்கும் கோபத்தை அந்த கருத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பிரபு சாலமன் இயக்கத்தில் புதிய படத்தில் ஸ்ரீஹரி நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே சினிமா பற்றிய படிப்பை லண்டனில் ஸ்ரீஹரி முடித்து இருக்கும் நிலையில் அடுத்ததாக நடிக்கலாமா? அல்லது திரைப்படத்தை இயக்கவா? தயாரிக்கவா? என்ற குழப்பத்தில் இருந்திருக்கிறார். இது பற்றி விஜயகுமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் நான் எப்போதும் குழப்பமாக இருக்கும்போது ரஜினிகாந்த் இடம் தான் ஆலோசனை கேட்பேன். அந்த மாதிரி தான் தன் பேரன் விஷயத்திலும் என்ன பண்ணலாம் என்று கேட்டேன் என்று கூறியிருக்கிறார்.
அப்போது ரஜினியும் ஸ்ரீஹரியை அழைத்து அவருடைய ஆசையை கேட்டார். அப்போது தன்னுடைய மகனுக்காக பிரபுசாலமனுடன் ஆகாஷ் ஏற்கனவே பேசி இருக்கிறார். அவரிடம் ஒரு கதை இருப்பதாகவும் விஜயகுமார் ரஜினி இடம் சொல்லி இருக்கிறார். அதற்கு ரஜினிகாந்த் பிரபு சாலமன் இயக்கம் என்றால் அருமையாக இருக்கும் கதை என்ன என்று கேட்க விஜயகுமாருக்கு கதை என்ன என்பது பற்றி தெரியாததால் பிரபு சாலமனை ரஜினிகாந்திடம் கதை சொல்ல சொல்லியிருக்கிறார்.
ரஜினிகாந்த் போனிலேயே வனிதாவின் மகனுக்காக கதை கேட்டிருக்கிறார். பிறகு கதை பிடித்து போய் இருக்கிறது. ஒரு சிங்கமும்... ஒரு ஹீரோவும்.. நல்ல கதை. இதை பண்ணு என்று கூறினார் என்று சமீபத்தில் விஜயகுமார் இது பற்றி பேசி இருக்கிறார். இதை தெரிந்து கொண்ட வனிதா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய மகன் குறித்து பாராட்டி ஒரு பதிவு போட்டு இருக்கிறார்.
அதில் நான் செய்த பிரார்த்தனை வீண் போகவில்லை என்னுடைய மூத்த மகன் நடிகனாக மாறி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள் என்று விஜய் ஸ்ரீஹரியை டேக் செய்து இருக்கிறார். அதோடு என்னுடைய மகனுக்காக கதை கேட்டு ஆசிர்வாதம் செய்த ரஜினி அங்கிளுக்கு ரொம்பவும் நன்றி. என்னுடைய மகனின் வளர்ச்சியை பார்க்கும் போது எனக்கு கண்ணீர் வருகிறது. அவன் இன்னும் மேலும் அதிகமாக வளர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதுபோல இன்னொரு பதிவில் என்னுடைய மகன் கதாநாயகனாக மாறியிருக்கிறார் எனக்கு இதுவரைக்கும் ஆதரவு தந்த செய்தி சேனல்களும், ஊடகங்களும், ரசிகர்களும், என்னுடைய தம்பி தங்கைகளும் என்னுடைய மகனுக்கும் அதுபோல ஆதரவு தர வேண்டும் என்று அந்த பதிவில் கூறி இருக்கிறார். இதற்கு பலரும் வனிதாவை பாராட்டி அவருடைய மகனுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications