ஜோவிகாவின் அப்பா "அவர்"தான்! எக்ஸ் கணவர்களுடன் இன்றும் தொடர்பில் இருக்கேன்.. இன்ஸ்டா லைவில் வனிதா
சென்னை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஜோவிகாவின் தந்தை யார் என்பது குறித்து நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் ஆகாஷ் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

இதையடுத்து ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ராஜன் என்பவரை 2ஆவதாக வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்.
இந்த நிலையில் ஆகாஷ் மூலம் ஸ்ரீஹரி, ஜோவிகா ஆகிய மகனும், மகளும் உள்ளனர். அது போல் இரண்டாவது கணவர் ராஜன் மூலம் ஜெய்னிதா என்ற மகளும் உள்ளனர். ஆக மொத்தம் வனிதாவிற்கு இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர்களில் மகன் விஜய் ஸ்ரீஹரி தன்னுடன் பேசுவதில்லை என வனிதா பல முறை ஏங்கியுள்ளார். அவர் தந்தை ஆகாஷுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.
பிக்பாஸில் போட்டி: ஜோவிகாவும் ஜெய்னிதாவும் மட்டுமே வனிதாவுடன் இருந்து வருகிறார்கள். அவர்களில் ஜெய்னிதாவும் கடந்த சில மாதங்களாக அவருடைய தந்தை ராஜனின் பராமரிப்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார். அங்கு அவர் அடிப்படைக் கல்வி குறித்த விவாதத்தை ஆக்ரோஷமாக முன் வைத்திருந்தார். இதற்கு எதிர்ப்புகளும் ஆதரவும் ஒரு சேர ஜோவிகாவுக்கு கிடைத்தது.

ஜோவிகாவின் தந்தை யார்: இந்த நிலையில் ஜோவிகாவின் தந்தை யார் என்பது குறித்து வனிதா விஜயகுமாரின் இரண்டாவது கணவர் ராஜன் முன்பு பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டார். அப்போது அவருடைய மகள் ஜெய்னிதாவை தன்னுடன் அழைத்து செல்வதில் வனிதாவுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக புகாரின் பேரில் போலீஸார் வனிதாவிடம் பிக்பாஸ் வீட்டிலேயே விசாரித்ததாக சொல்லப்பட்டது.
2ஆவது கணவர் போட்ட குண்டு: அந்த நேரம் பார்த்து ராஜன், வனிதா குறித்து டிவி சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் ராஜன் "ஜோவிகா ஆகாஷுக்கு பிறந்த மகளே இல்லை. வனிதா ஆகாஷை விவாகரத்து செய்த பிறகு அருண் என்பவருடன் தொடர்பில் இருந்ததாகவும் அவர்களுக்கு பிறந்தவர்தான் ஜோவிகா" என்றும் கூறியிருந்தார்.
வனிதா ரிப்ளை: ராஜனின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வரும் நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு வனிதா விஜயகுமார் பதில் அளித்தார். அப்போது வனிதாவிடம் ரசிகர் ஒருவர், ராஜன் சொல்வது உண்மையா, ஜோவிகாவின் தந்தை யார் என்ற கேள்வியை முன் வைத்தார். அதற்கு வனிதா, "ஜோவிகா ஆகாஷின் மகள்தான். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சில குடும்ப சூழல்களால் எனது தந்தையின் பெயரை ஜோவிகாவின் பெயரின் பிற்பகுதியில் சேர்த்துவிட்டேன்.
ஜோவிகாவின் இனிஷியல் இதுதான்: எனினும் அவரது பெயரை இனிஷியலாகத்தான் வைத்திருக்கிறார். ஆனால் ஜோவிகாவின் சான்றிதழ்களில் A.Jovika Vijayakumar D/o Akash என்றுதான் இருக்கும். நான் ஆகாஷின் பெயரை பின்னாடி சேர்க்காததற்கு அவரோ அவருடைய குடும்பத்தினரோ வருந்தியிருக்க மாட்டார்கள் போல! மக்களுக்குத்தான் இது பெரிய கேள்வியாக இருந்தது. அதையும் நான் சொல்லிவிட்டேன். ஜோவிகா பிறக்கும் போதே ஆகாஷ் என்னுடன் இல்லை என கூறிய போது வனிதா கண்கலங்கினார்.
ஆகாஷுடன் தொடர்பில் இருக்கிறீரா: அது போல் இன்னொரு ரசிகர், "நீங்கள் ஆகாஷுடன் இன்னமும் தொடர்பில் இருக்கிறீர்களா" என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு வனிதா பதிலளிக்கையில் "ஆரம்பத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான். ஆனால் தற்போது குழந்தைகளுக்காக நான் எனது முன்னாள் கணவர்கள் ஆகாஷ் , ராஜன் ஆகியோருடன் தொடர்பில்தான் இருக்கிறேன்." இவ்வாறு வனிதா கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications