அருண் விஜய் அம்மா எப்படிபட்டவங்க தெரியுமா? அவங்களால்தான் நான் இப்படி மாறினேன்! வனிதா ஓப்பன்
சென்னை: நடிகை வனிதா தன்னுடைய தந்தையான விஜயகுமார் குடும்பத்தை பற்றி சில வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் விஜயகுமாரின் மூத்த மனைவியான முத்து கண்ணு பற்றி வனிதா வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதாவது முத்து கண்ணு நடிகர் அருண் விஜயின் அம்மா தான். அதுபோல வனிதாவை சிறுவயதிலிருந்து வளர்த்ததும் அவர்தானாம். இந்த நிலையில் அருண் விஜயின் அம்மாவை குறித்து வெளிப்படையாக வனிதா பேசியது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய அளவில் பிரச்சனை செய்து பிரபலம் அடைந்த வனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னுடைய சமையல் திறமையின் மூலமாக பலரையும் வியக்க வைத்திருந்தார். ஆனால் இந்த திறமை தனக்கு யாரிடம் இருந்து வந்தது என்பது பற்றி அந்த வீடியோவில் வனிதா பேசியிருக்கிறார்.

நடிகை வனிதாவுக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. நடிகையாக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் பலருக்கும் பரீட்சையமான நபராகத்தான் வனிதா இருந்து வருகிறார். அதிலும் வனிதா சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்திருக்கிறார்.
ஆரம்பத்தில் நடிகையாக பலருக்கும் அறிமுகம் ஆகி இருந்தார் அதற்கு பிறகு திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். அந்த நேரத்தில் தான் வனிதாவிற்கும் அவருடைய அப்பாவிற்கும் குடும்ப சொத்து பிரச்சனை பெரிய அளவில் பூதாகரமாக வெடித்தது. அந்த நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.
அப்போது வனிதாவின் அப்பாவான விஜயகுமார் கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக வனிதாவை பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள்ளே வந்து போலீஸ் விசாரணை செய்திருந்தனர். அதுவும் பெரிய அளவில் பேசப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரையும் வியக்க வைத்திருந்தார். இவருக்குள் இப்படி ஒரு சமையல் திறமை இருக்கிறதா? என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் தெரிந்திருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெரிய அளவில் வியப்பில் ஆழ்த்தி இருந்தார்.
இப்படியான நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் தனக்கு எப்படி சமைக்கும் திறமை வந்தது என்பது பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதற்கு அவரிடம் உங்க வீட்டில் உங்க அம்மா தான் சமைப்பாங்களா? அம்மாவிடம் இருந்து தான் உங்களுக்கு சமைக்கும் திறமை வந்திருக்கிறதா? என்று கேட்க அதற்கு வனிதா அப்படியெல்லாம் இல்லவே இல்ல. எங்க அம்மா ரொம்ப சமைக்க மாட்டாங்க. அவங்க அந்த நேரத்தில் ரொம்ப பிசியாக இருந்தாங்க. ஆனால் எங்களுக்கு விதவிதமாக சமைத்துக் கொடுத்தது அருண் விஜய் அண்ணாவோட அம்மா தான்.
பெரியம்மா நல்லா சமைப்பாங்க அவங்களோட சமையல் அருமையா இருக்கும். நான் அவங்க சமையல் பார்த்து தான் சமைக்க வேண்டும் என்ற ஆர்வமே எனக்கு வந்தது. அதற்கு பிறகு எனக்கு கொஞ்சம் விவரம் தெரிஞ்சு நானும் சமைக்க ஆரம்பித்த பிறகு பெரியம்மா என்னோடு போட்டி போட ஆரம்பிச்சாங்க. ஆரம்பத்தில் பாரம்பரிய சாப்பாடு தான் அவங்க செய்வாங்க. ஆனா நான் சமைக்க ஆரம்பித்த பிறகு பல நிகழ்ச்சிகளை பார்த்து அவங்களும் சமைக்க தொடங்குனாங்க.
ஆனாலும் அவங்க சாப்பாடு அருமையாக இருக்கும் எங்க அம்மா எப்பவாவது ஒருமுறை ஒரு சில சாப்பாடு செஞ்சு இருக்காங்க அவ்வளவுதான்... என்று அந்த பேட்டியில் வனிதா பேசியிருக்கையில் விஜயக்குமாருக்கும் வனிதாவிற்கும் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அவரை வளர்த்தெடுத்த பெரியம்மா மீது வனிதா இவ்வளவு பாசமாய் இருக்கிறாரே அவரைப் பற்றி வெளிப்படையாக பாராட்டுகிறார்.
அதே நேரத்தில் சமீபத்தில் விஜயகுமாரின் பேத்தியின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. அதில் பலர் கலந்து கொண்டு இருந்தனர். ஆனால் வனிதாவிற்கு அழைப்பு கொடுக்கவில்லை. ஆனாலும் வனிதா அதை மறந்து தன்னை வளர்த்த பெரியம்மா குறித்து பேசி இருக்கிறார் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications