எனக்கு அந்த பிரச்சனை இருக்கு! தூங்க முடியல.. இவங்க எல்லாம் ஏமாத்திட்டாங்க! நடிகை வனிதா எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமண செய்தி இணையத்தில் பரவி வரும் நிலையில் நடிகை வனிதா தனக்கு இருக்கும் வித்தியாசமான நோய்க்குறித்து பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு தன்னை சிலர் ஏமாற்றி விட்டார்கள் என்றும் அந்த பேட்டியில் உருக்கமாக வனிதா பேசியிருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகை வனிதாவிற்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. வெள்ளி திரையில் நடிகர் விஜய்யோடு சந்திரலேகா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும் அதை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகி ஆக நடித்த நேரத்தில் திருமணமாகி திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

actress Vanitha Vijayakumar talking about her strange syndrome

ஆனால் அதற்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய கணவரை பிரிந்த வனிதா சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்து மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பெரிய அளவில் பிரபலமாகி இருந்தார். அதோடு வனிதாவின் குடும்ப பிரச்சனையும் பலருக்கும் தெரிந்ததுதான். அவருடைய அப்பா விஜயகுமார் உடன் ஏற்பட்ட தகராறில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போலீஸ் வந்து வனிதாவை அழைத்துப் போனது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதற்கு பிறகு வனிதாவின் வாழ்க்கை திறந்த புத்தகமாக அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த நிலையில் இப்போது விஜயகுமாரின் பேத்திக்கு திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் அது குறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வரும்போது பலரும் வனிதா இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்படியான நிலையில் வனிதா பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில் என்னுடைய அம்மா ரொம்பவே கோபப்படுவார். நான் இவ்வளவு சத்தம் போடுகிறேன் என்றால் இது என்னுடைய அம்மாவிடமிருந்து கூட எனக்கு வந்து இருக்கலாம். வீட்டில் நான் தான் அதிகமாக அடி வாங்குவேன்.

ஆனால் என்னுடைய தங்கை ஸ்ரீ பாப்பா எந்த தப்பு செஞ்சாலும் அடி வாங்காமல் அழுதே சமாளித்து விடுவாள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது நான் எப்போதும் ஸ்ரீதேவியை ஸ்ரீ பாப்பா என்று கூப்பிடுவதால் சிலர் அது குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். என்ன தான் இருந்தாலும் அவள் எனக்கு தங்கச்சி தானே?

அது எப்போதும் மாறாது என்று பேசி இருக்கும் வனிதா அதை தொடர்ந்து நான் வெளியே தான் ரொம்ப போல்டா பேசுவேன். ஆனால் உள்ளுக்குள் ரொம்பவே பயந்த ஆளு எதையும் யோசித்துக் கொண்டே இருப்பேன். நாளைக்கு சூட்டிங் இருக்கிறது என்றாலோ அல்லது படம் வெளியாக போகுது என்றாலும் கூட என்னால் நிம்மதியாக தூங்க முடியாது. அதுபோல நான் நிறைய உறவுகளால் ஏமாந்து இருக்கிறேன்.

அது நட்பாக இருந்தாலும் சரி வாழ்க்கையில் உள்ள உறவுகளாக இருந்தாலும் சரி அவர்களை நம்பி ஏமாந்து இருக்கிறேன் நான் அவர்களிடம் உண்மையாக இருக்கிறேன். ஆனால் அவர்கள் தான் என்னிடம் உண்மையாக இல்லை. நான் எல்லா விஷயத்தையும் எல்லாரிடமும் சொல்லிவிடுகிறேன் என்று அம்மா உயிரோடு இருக்கிற வரைக்கும் என்னை திட்டிக்கிட்டே இருப்பாங்க.

ஆனால் என்னால் எதையும் மறைத்து வைக்க முடியாது. இப்போ இவ்வளவு நேரம் இங்கே பேசிட்டு இருக்கிறேன் இதைத் தாண்டி கொஞ்ச தூரம் தள்ளி போனதும் இன்னைக்கு என்ன நடந்தது என்று கேட்டால் நான் எல்லா விஷயத்தையும் சொல்லி விடுவேன். அப்படிப்பட்ட ஆள் தான் நான். ஆனால் என்னை சிலர் அவர்களின் சுயநலத்திற்காக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று அந்த பேட்டியில் வனிதா பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+