வனிதாவின் மகன் மட்டுமல்ல மகளும் நடிகை ஆகியாச்சி.. அவரே வெளியிட்ட போஸ்டர்.. ஆனால் டுவிஸ்ட் இருக்கு
சென்னை:நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்திருந்தார். இந்த நிலையில் அவர் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடிக்கும் "டீன்ஸ்" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகிறார் என்பதை வனிதா தெரியப்படுத்தி இருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு நடிகை வனிதாவின் மகன் ஸ்ரீஹரி கதாநாயகனாக நடிக்க இருக்கும் தகவல் இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது, இந்த நிலையில் வனிதாவின் மகளும் இப்போது கதாநாயகியாக மாறி இருக்கிறார்.

அந்த வகையில் இயக்குனர் பார்த்திபன் இயக்கி உருவாக்கி உள்ள "டீன்ஸ்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று இருக்கிறது. அதற்கான போஸ்டரை வனிதா தன்னுடைய இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் ஜோவிகா முக்கிய கேரக்டரில் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஜோவிகா இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக தான் வேலை பார்த்து வருவதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

அதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு கூட வனிதா விஜயகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் பார்த்திபன் இயக்கிக் கொண்டிருக்கும் சூட்டிங்கை மெய்மறந்து பார்த்தபடி நினைத்துக் கொண்டிருந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். அது ஜோவிகா நடித்த காட்சிகள் தான் என்று இப்போது தெரியவந்திருக்கிறது. இந்தத் திரைப்படம் பயாஸ்கோப் ட்ரீம்ஸ், அகிலா புரொடக்க்ஷன் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கி நடித்த "இரவின் நிழல்" திரைப்படம் சிங்கிள் ஷாட்டில் நான் லீனியராக உருவானது. அதற்கு அடுத்ததாக டீன்ஸ் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் முதல் ஷார்ட்டில், 500 வருடத்தில் உள்ள பேய் குறித்தும் அதனை எழுப்புவது குறித்த வசனத்தோடும் தொடங்குகிறது. குழந்தைகளை மையமாக கொண்டு உருவாகிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் திரில்லர் ஜானர் என்பது தெரிகிறது.
அதுபோல இந்த திரைப்படத்தின் கதைக்கானது கிராம பகுதியில் மற்றும் நகரப் பகுதிகளில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சில தினங்களாக நடிகை வனிதாவின் மகன் நடிகராக மாறிவிட்டார். ஆனால் மகள் இன்னும் நடிகையாக மாறவில்லையே என்று எழுந்து வந்த கேள்விகளுக்கு இப்போது வனிதா புகைப்படத்தை வெளியிட்டு பதில் கொடுத்து இருக்கிறார்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications