நான் யாரையும் பிரிக்கல.. நிக்கோலாய் பொண்ணு எப்படிப்பட்டவங்க தெரியுமா? வரலட்சுமி ஓப்பன் அப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை வரலட்சுமி சமீபத்தில் தன்னை பற்றி நெகட்டிவாக பரவி வரும் கமெண்டுகளுக்கு பதில் அளித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் வரலட்சுமியின் வருங்கால கணவர் நிக்கோலை அவருடைய மனைவியிடம் இருந்து பிரித்தது வரலட்சுமி தானா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு என்ன நடந்தது என்பது குறித்து வரலட்சுமி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதே நேரத்தில் வரலட்சுமியின் வருங்கால கணவருக்கு 15 வயதில் மகள் இருக்கிறார் என்று பரவி வரும் செய்திகளுக்கும் வரலட்சுமி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Actress Varalakshmi has recently spoken in to answer the negative comments

அந்த வகையில் "போடா போடி" என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான வரலட்சுமி நடிகர் சரத்குமாரின் மகள் என்பது எல்லோருக்கும் தெரியும். சரத் குமார்க்கு சாயா என்பவரோடு திருமணம் நடைபெற்ற நிலையில் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் போது சாயாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு சரத்குமார் ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.

சரத்குமார் ராதிகாவை திருமணம் செய்து கொண்ட பிறகு வரலட்சுமி தன்னுடைய தந்தை மற்றும் ராதிகாவோடு நன்றாக தான் பழகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த மாதத்தில் வரலட்சுமிக்கு நிக்கோலாய் என்பவரோடு எங்கேஜ்மென்ட் முடிவடைந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிக்கோலை திருமணம் செய்ய காரணமே இதுதான்! "நார்வே"யில் நடந்த சம்பவம்.. நடிகை வரலட்சுமி ஓப்பன் அப்
அது குறித்து முதல்முறையாக வரலட்சுமி தங்களுடைய காதல் எப்படி ஏற்பட்டது? வீட்டில் எப்படி சம்மதித்தார்கள் என்பது பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் நானும் நிக்கோலையும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பே ஒரு ரெசாட்டில் எதார்த்தமாக சந்தித்தோம். அப்போது எங்களுக்குள் நட்பு மட்டும்தான் இருந்தது. அதற்கு பிறகு சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் மீண்டும் சந்தித்த போது தான் எங்களுக்குள் புரிதல் ஏற்பட்டது.

அப்போது நிக்கோலாய் அவருடைய மனைவியை பிரிந்து தனியாகத்தான் இருந்தார். நான் யாருடைய வாழ்க்கையையும் கெடுக்கவில்லை. யாராக இருந்தாலும் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருந்தால் பிரிவது ஒன்றும் தப்பு கிடையாது. என்னுடைய அப்பா கூட இரண்டாவது திருமண வாழ்க்கையில் தானே இருக்கிறார்... அதுபோல நிக்கோலாய்க்கும் அவருடைய முதல் மனைவிக்கும் செட்டாகவில்லை அவர்கள் பிரிந்து விட்டார்கள்.

ஆனால் நிக்கோலாயின் மகள் மிகவும் திறமைசாலி. அவருக்கு 15 வயது குழந்தைக்கு இருக்கும் அறிவை விட அபரிமிதமாக இருக்கிறது. அதனால் தான் மூன்று நாடுகளில் பல பதக்கங்களையும் வென்று இருக்கிறார். அதுபோல நிக்கோலாயின் மகள் விளையாட்டு வீராங்கனையாக இருக்கிறார். அதுபோல ரொம்பவும் சாப்டான கேரக்டர். பல விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார். என்னிடம் நன்றாகவே பழகிக் கொண்டிருக்கிறார். அவரோட பசங்களுக்காக தான் நாங்கள் கல்யாணம் பண்றோம்.

நிக்கோலாய்க்கு 16 வயது இருக்கும் போது அவருடைய அப்பாவிற்கு ஸ்டோக் வந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட போது அப்பாவின் பிசினஸை கவனிக்க தொடங்கி இருக்கிறார். அதுபோல உடற்பயிற்சி செய்வதிலும் அதிகமான ஆர்வம் காட்டுவார். எங்கள் இருவருக்கும் பல விஷயங்கள் ஒத்து போனது. அவருக்கு என் மீது இருக்கும் அன்பு அரவணைப்பு எல்லாவற்றையும் பார்த்து எனக்கும் பிடித்திருந்தது. அந்த நேரத்தில் என்னுடைய அப்பாவிடம் நேரடியாக வந்து நிக்கோலாய் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி இருக்கிறார்.

அதற்கு பிறகு தான் குடும்பத்தினர் எல்லாருடைய முன்பும் வைத்து நார்வேயில் நாங்கள் சுற்றுப்பயணம் போயிருந்தபோது அவருடைய காதலை சொன்னார். எங்களுடைய காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவித்த பிறகு நிக்கோலாய் என்னிடம் பேசுவதை விட என்னுடைய குடும்பத்திடம் தான் அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறார் என்று சிரித்தபடியே அந்த பேட்டியில் வரலட்சுமி பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+