வரலட்சுமியின் மெஹந்தி பங்க்ஷன்.. மருதாணி போட்ட சரத்குமார்.. ராதிகா ரியாக்சன்.. லீக்கான புகைப்படம்
சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி திருமணம் இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று அவருடைய மெஹந்தி பங்க்ஷன் தொடங்கி இருக்கிறது. அதில் எடுத்த புகைப்படங்களை ராதிகாவின் மகள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
நடிகர் சரத்குமார் பல வருடங்களாக சினிமாவில் ஜொலித்து வருகிறார். 90ஸ் காலகட்டத்தில் முன்னணி கதாநாயகனாக நடிப்பை தொடங்கிய சரத்குமார் இப்ப வரைக்கும் கதாநாயகனாகவும் முன்னணி நடிகராகவும் தன்னுடைய நடிப்பை தொடர்ந்து வருகிறார். சரத்குமார் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். வரலட்சுமி நடிகர் சிம்பு நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி இப்போது அதிகமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிக்கும் கேரக்டர்கள் கம்பீரமான கேரக்டராகவே வரலட்சுமி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அதே நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு மும்பையை சார்ந்த நிக்கோலாய் சச்சிதேவ் என்பவரோடு என்கேஜ்மென்ட் முடிவடைந்தது. அதுவரைக்கும் வரலட்சுமி காதல் விஷயம் வெளியே தெரியாமல் இருந்த நிலையில் அவருடைய திடீர் என்கேஜ்மென்ட் புகைப்படங்கள் இணையத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. வரலட்சுமி யாரை திருமணம் செய்ய போகிறார் என்ற கேள்விகள் மக்கள் மனதில் அதிகமாக இருந்தது.

அதிலும் சரத்குமார் போலவே கட்டு மஸ்தான உடல் அமைப்போடு நிக்கோலாய் இருப்பது குறித்து பலரும் விமர்சித்து வந்தனர். ஆனாலும் அதையெல்லாம் வரலட்சுமி கண்டு கொள்ளாமல் நிக்கோலாயுடன் அடிக்கடி சுற்றுலா சென்று அங்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு இருந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே வரலட்சுமியின் திருமண வேலைகளை சரத்குமார் குடும்பம் தீவிரமாக பார்க்கத் தொடங்கி விட்டது. தேர்தல் முடிவுகள் ராதிகா சரத்குமாருக்கு சாதகமாக வரவில்லை என்றாலும் அதை கண்டு கொள்ளாமல் அடுத்தடுத்து திருமண வேலைகளில் பிஸியாக இருக்கிறார்கள்.

நடிகர், நடிகைகளில் தொடங்கி முதலமைச்சர், பிரதமர் என்று பல பிரபலங்களுக்கும் திருமண அழைப்பிதழ் குடும்பத்தோடு சென்று கொடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று வரலட்சுமியின் மெஹந்தி பங்க்ஷன் நடைபெற்று இருக்கிறது. அப்போது சரத்குமார் தன்னுடைய கைகளில் மருதாணி போட்டிருக்கிறார்.
அதோடு சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் ஜோடியாக சில புகைப்படங்களையும் எடுத்து இருக்கிறார்கள். வரலட்சுமி மற்றும் அவருடைய கணவர் புகைப்படங்கள் போன்ற சிலவற்றை ராதிகாவின் மகள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வரலட்சுமி தன் வீட்டு பங்க்ஷன் புகைப்படங்களை உடனுக்குடன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு விடுவார். ஆனால் தன்னுடைய மெஹந்தி பங்க்ஷன் புகைப்படங்களை இப்ப வரைக்கும் அவர் பதிவிடவில்லை. இந்த நிலையில் புகைப்படங்கள் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் வரலட்சுமியின் மற்ற பதிவுகளில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications