நடிகை வரலட்சுமி பிறந்தநாளுக்கு கணவர் கொடுத்த மிகப்பெரிய பரிசு.. சந்தோஷத்தில் நெகிழ்ச்சி பதிவு
சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமாருக்கு கடந்த வருடத்தில் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் திருமணம் முடிந்தது. இந்த நிலையில் வரலட்சுமி கணவர் அவருடைய பிறந்தநாளுக்கு போர்ஷோ கார் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார். இது குறித்து வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வரலட்சுமி சரத்குமார் சினிமாவில் நடிக்க வருகிறேன் என்று சொன்னதும் முதலில் சரத்குமார் யோசித்து பிறகு சரி என்று சொல்லி இருக்கிறார். தன்னுடைய குடும்பத்தின் சம்மதம் பெற்று போடா போடி திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதற்குப் பிறகு தாரை தப்பட்டை, மதகஜராஜா, சர்கார் உட்பட தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அப்பாவை போல வில்லியாகவும் கதாநாயகியாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துவரும் வரலட்சுமிக்கு தமிழை விடவும் மற்ற மொழிகளில் நல்ல வரவேற்போம் வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அதனாலயே பிற மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்து கொண்டார்.
முதல்முறையாக சின்னத்திரையில் வரலட்சுமி கலந்து கொண்ட நிகழ்ச்சி அவருக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் நல்ல அடையாளத்தை பெற்று தந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்களுக்கு வரலட்சுமி உதவி செய்திருக்கிறார் அதிலும் பஞ்சமி என்ற போட்டியாளர்கள் பினாலே மேடையில் சொந்த வீடு கட்டுவதற்காக இடம் வாங்கி கொடுத்திருக்கிறார் அதுபோல அவருடைய பிள்ளைகளின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் வரலட்சுமி பிறந்தநாளுக்கு அவருடைய கணவர் பிரம்மாண்டமான பரிசு கொடுத்திருக்கிறார். அதாவது வரலட்சுமியின் கணவரான நிக்கோலாய் பிங்க் நிறத்தில் ஸ்டைலான போர்ஷோ கார் ஒன்றை வாங்கி கொடுத்து இருக்கிறார். வரலட்சுமி சரத்குமாருக்கு கடந்த வருடம் ஜூலை மாதம் தான் நிக்கோல்லாயுடன் திருமணம் நடந்தது.
நிக்கோலாய்க்கு ஏற்கனவே கல்யாணம் முடிந்து தோளுக்கு மேல் வளர்ந்த மகள் இருக்கிறார். ஆனால் முதல் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்து விட வரலட்சுமிையை சில வருடங்களாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து இருக்கிறார். வரலட்சுமியின் எங்கேஜ்மென்ட் புகைப்படங்கள் வெளியான போது அது பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் சரத்குமாரை போலவே உருவத்தில் இருக்கும் நிக்கோல்லாய்யை வரலட்சுமி திருமணம் செய்த பிறகு கணவரோடு அடிக்கடி போட்டோ சூட் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications