எங்க வீட்டில் விசேஷம்.. கணவர் புகைப்படத்தோடு உருக்கமாக போஸ்ட் போட்ட வரலட்சுமி! குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார். வரலட்சுமியின் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் அடி எடுத்து வைக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டும்தான் பெற்றோரைப் போல வெற்றிபெற முடிகிறது. ஒரு சிலருக்கு என்னதான் திறமையும் உழைப்பும் இருந்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தான் இருக்கிறது. அதுபோல நடிகை வரலட்சுமி போடா போடி திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார்.

அதற்குப் பிறகு ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் சரத்குமார் அளவிற்கு வரலட்சுமியால் தமிழில் ஜெயிக்க முடியவில்லை. ஆனால் மற்ற மொழிகளில் வரலட்சுமிக்கு அதிகமான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியிலும் வரலட்சுமி நடுவராக களம் இறங்கி இருந்தார்.
இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு வரலட்சுமிக்கு நிக்கோலாய் சாச்தேவ் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. நிக்கோலாக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தாலும் அவர் விவாகரத்து செய்த பிறகு வரலட்சுமியை திருமணம் செய்திருக்கிறார். நிக்கோலாய்க்கு ஏற்கனவே தோளுக்கு மேல் வளர்ந்த ஒரு மகள் இருக்கிறார். அந்த மகளுடன் கூட வரலட்சுமி பல நேரங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார்.
தான் திருமணத்திற்கு பிறகு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அதற்கு காரணம் தன்னுடைய கணவர்தான் என்று வரலட்சுமி சொல்லி இருக்கிறார். அதோடு வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் வரலட்சுமியின் பெயரை தன் பெயருக்கு பின்னால் சேர்த்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார். பொதுவாக கணவன் பெயரை மனைவிகள் தான் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் நிக்கோலாய் தன்னுடைய மனைவியின் பெயரை தன் பெயருக்கு பின்னால் சேர்த்து இருக்கிறார்.
இந்த நிலையில் வரலட்சுமி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில், என்னை சிரிக்க வைக்கும்.. நான் அழும்போது என்னை தாங்கும்.. ஒரு ராணியை போல நடத்தும் ஒவ்வொரு அடியிலும் என்னை காத்துக் கொள்ளும் மனிதனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ எனக்கு எவ்வளவு அர்த்தம் தருகிறாய் அல்லது நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
நீயாக இருப்பதற்கு நன்றி. நீ செய்யும் உதவி எண்ணிக்கை ஒரு உத்வேகம் கொடுக்கிறது. என் வாழ்க்கையில் உன்னை பெற்றதில் நான் உண்மையிலே பாக்கியவானாக இருக்கிறேன். உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் கணவர் பிறப்பு உண்மையிலே கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. நீ என் ராஜா.. நான் உன்னை நேசிக்கிறேன் என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த பதிவிற்கு நடிகை ராதிகா சரத்குமார்" எப்பவும் ஒரு சூப்பர் மேன்" என்று நிக்கோலாயை புகழ்ந்து இருக்கிறார். அதுபோல இந்த பதிவை நடிகர் சரத்குமாரும் லைக் செய்து இருக்கிறார். ரசிகர்கள் பலரும் நிக்கோலாய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications