கவுண்டமணி மேல மரியாதை இருக்கு.. ஆனால் அன்னிக்கு ஏன் அப்படி பண்ணுனாருன்னு தெரியல! விசித்ரா வருத்தம்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் பிரபலம் அடைந்த விசித்ரா, "நடிகர் கவுண்டமணி" குறித்தும் அவரோடு நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றியும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அதில் விசித்திரா, நடிகர் கவுண்டமணியோடு "பெரிய குடும்பம்" என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது கவுண்டமணி நடந்து கொண்ட விதம் குறித்து பேசி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகை விசித்திரா காமெடி நடிகர்களோடு ஜோடியாக 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு இரண்டாவது இன்னிங்ஸில் பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக நடிப்பை விட்டு விலகி இருந்த விசித்திரா இப்போது மீண்டும் நடிப்பை தொடங்கி இருக்கிறார்.
அதிலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் மூலமாக தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய விசித்திரா விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நூலிலையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். அதற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்.
அதுவும் இதுவரைக்கும் வயதில் மூத்த போட்டியாளர்கள் யாரும் செய்யாத சாதனையை இந்த சீசனில் விசித்திரா செய்திருந்தார். அதிகமான நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விசித்திரா இருந்த நிலையில் உள்ளே போட்டியாளர்களோடு சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டதும் தன்னுடைய கருத்தை தைரியமாக எடுத்து வைத்ததும் இதுவரைக்கும் இவர் வாங்கி இருந்த பெயரை மொத்தமாக மாற்றி இருந்தது.
இப்படியான நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் கவுண்டமணி குறித்து பேசி இருக்கிறார். அதில் நான் பெரிய குடும்பம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் அந்த திரைப்படத்தின் இயக்குனர் "கே.எஸ் ரவிக்குமார்" என்னிடம் வந்து நீங்க வந்து தயவு செய்து கவுண்டமணிக்கு ஒரு வணக்கம் சொல்லுங்க என்று சொன்னார். நான் எதற்காக இவர் இப்படி சொல்றாருன்னு தெரியலையே என்று குழம்பிக் கொண்டிருந்தேன்.
அவர் நீங்க இப்போ வந்து வணக்கம் சொன்னாதான் இன்னைக்கு ஷூட்டிங் நடக்கும் இல்லன்னா ஷூட்டிங் முடிந்தது அவ்வளவுதான் என்று சொல்ல எனக்கு என்னன்னு புரியல.. பிறகு சரி வேறு வழி இல்லாமல் கவுண்டமணியிடம் போய் வணக்கம் சொன்னேன். அதற்கு அவர், "இப்படித்தான் நீங்க வணக்கம் சொல்லுவீங்களா?" என்று கோபப்பட்டார்.
அன்னிக்கு ஏன் அவர் அப்படி பேசினாருன்னு எனக்கு இப்ப வரைக்கும் தெரியவில்லை. கவுண்டமணி மீது எனக்கு நல்ல மரியாதை இருக்கு. சூட்டிங் ஸ்பாட்டில் கலகலப்பாக இருப்பார். என்னிடம் நல்லாவே பேசுவார். ஆனால் அன்னைக்கு எதற்காக கோபப்பட்டார் என்பது இப்ப வரைக்கும் எனக்கு தெரியாது என்று விசித்திரா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications