அதிகாலை ஜாக்கிங்கில் வந்த காதல்.. கிளாமர் நடிகைனு தெரிந்ததும் கணவர் சொன்னது.. விசித்ரா எமோஷனல்
சென்னை: நடிகை விசித்ரா தன்னுடைய குடும்ப வாழ்க்கை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் தனக்கு காதல் எப்படி ஏற்பட்டது என்பது பற்றியும் தன்னை பற்றி தன்னுடைய கணவர் தெரிந்து கொண்டபோது என்ன மாதிரி ரியாக்சன் செய்தார் என்பது பற்றியும் விசித்திரா பகிர்ந்து இருக்கிறார்.

அதே நேரத்தில் காதலித்து திருமணம் செய்து கொள்ளும்போது நடிகை விசித்ராவின் கணவருக்கு அவர் கிளாமர் கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பவர் என்பது தெரியாதாம். அதோடு பல தகவல்களை விசித்திரா பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
நடிகை விசித்ரா ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சியான கேரக்டரிலும், காமெடியான கேரக்டர்களிலும் நடித்து பிரபலமடைந்திருந்தார். அதோடு தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருந்தார். நடிப்பு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் ஒரு பாடல்களுக்கும் டான்ஸ் ஆடி இருக்கிறார்.
குறிப்பாக விசித்ரா பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தில் செந்திலுக்கு ஜோடியாக இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு இருக்கும். அதுபோல சேரன் பாண்டியன் திரைப்படத்திலும் இவர் நடித்திருப்பார். இந்த நிலையில் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த நிலையில் இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 15 வயதிலேயே விசித்திரா சினிமாவில் நுழைந்து விட்டாராம். ஆரம்ப காலகட்டத்தில் துணை நடிகையாக மட்டுமல்லாமல் வில்லி, டான்ஸர் என்று பல கேரக்டரில் நடித்து வந்த இவர் தெலுங்கு படம் ஒன்றுக்காக தான் கேரளாவில் தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தாராம். அப்போ அந்த ஹோட்டலில் தான் தன்னுடைய கணவர் ஷாஜி மேனேஜராக இருந்தாராம்.
அப்போது அதிகாலை நேரத்தில் இவர் ஜாக்கிங் போக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் விசித்ராவின் பாதுகாவலர்கள் மறுத்து விட்டார்களாம். பிறகு ஷாஜியோடு சேர்ந்து விசித்ரா ஜாக்கிங் போயிருக்கிறார். இப்படி இருவரும் ஜாக்கிங் போக துவங்கியதும் இவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. முதலில் நட்பாக பழகி இருக்கிறார்கள். அதற்குப் பிறகு அந்தப் பழக்கம் பல நாட்களாக தொடர்ந்து பிறகு விசித்ராவின் பிறந்த நாளில் ஷாஜி பூங்கொத்து ஒன்றை கொடுத்து நான் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு விசித்திராவும் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

அதுபோல இவர்களுடைய திருமணம் காதல் திருமணம் என்பதால் ஷாஜியின் வீட்டில் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லையாம். அதனால் அவர் அவருடைய குடும்பத்தினர் அனைவரையும் விட்டுவிட்டு விசித்திராவிற்காக சென்றிருக்கிறார். ஆனால் திருமணத்தின் போது அவருடைய கணவருக்கு விசித்திரா ஒரு கிளாமர் நடிகை என்பது தெரியாதாம்.
பிறகு திருமணம் முடிந்ததும் இவர்கள் கொடைக்கானல் ஹனிமூனுக்கு போயிருக்கிறார்கள். அப்போது அங்கு இருந்த ரசிகர் ஒருவர் இவரை அடையாளம் கண்டு கொண்டு இவரிடம் இவர் நடித்த கேரக்டர் குறித்து பேசி இருக்கிறார். அப்போதுதான் விசித்ராவின் கணவருக்கு இவர் என்ன மாதிரி நடித்து இருந்தார் என்பது தெரிய வந்ததாம். ஆனாலும் அவர் விசித்ராவின் மீது வைத்திருக்கும் அன்பால் அன்றிலிருந்து இப்போது வரைக்கும் தன்னை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்வதாக அந்த பேட்டியில் விசித்திரா பேசியிருக்கிறார்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications