“நாயகி” சீரியல் நடிகை இப்போ அமெரிக்காவில் மருத்துவர்.. திடீரென வெளியிட்ட போஸ்ட்.. குவியும் வாழ்த்து
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை வித்யா பிரதீப் அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றி வரும் நிலையில் தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதை இணையத்தில் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.
சில நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரையில் காலடி எடுத்து வைத்து இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் வெள்ளி திறையில் நன்றாக நடித்து கலக்கி விட்டு வயதான பிறகு சின்னத்திரைக்கு வருகிறார்கள். ஆனால் வித்யா பிரதீப் வெள்ளித்திறையில் நடித்துக் கொண்டிருக்கும் போது சின்னத்திரையில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். அதிலும் அவர் டாக்டர் மற்றும் ஆராய்ச்சியாளராகவும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

வித்யா கேரளாவில் பிறந்திருந்தாலும் இவருடைய ஒரு தந்தை மிலிட்டரி மேன் என்பதால் பல இடங்களுக்கு சென்று வந்திருக்கிறார். இதனால் அவர் மலையாளம் மட்டுமல்ல தமிழும் மிக அழகாகவே பேசுகிறார். இவருடைய நடிப்பை முதலில் இவருடைய வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் கல்லூரி முடிக்கும் வரை மாடலிங் மற்றும் நடிக்க கூடாது என்று வீட்டில் கண்டிப்பாக சொல்லி இருக்கிறார்கள்.
பிறகு காலேஜ் படித்து முடித்ததும் தான் இவர் ஆசையாக மாடலிங்கில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். டாக்டராகவும் ஆராய்ச்சியாளராகவும் பிசியாக இருக்கும் நேரத்திலும் மாடல்ங்கில் விதவிதமான புகைப்படங்களை எடுத்து குவித்திருக்கிறார். அதிலும் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே வித்யா 200க்கும் மேற்பட்ட நகை விளம்பரங்களிலும், புடவை விளம்பரங்களிலும் விதவிதமாக நடித்திருக்கிறார்.

அதிலிருந்து தான் இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் கிடைத்து இருக்கிறது. முதல் முதலில் ஜெய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அந்த படம் அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு சைவம் படத்தில் இவர் ஒரு குட்டி பாப்பாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு பல படங்களில் நடித்திருக்கிறார்.

அதிலும் அருண் விஜய், கிருஷ்ணா, ஜெய், சமுத்திரக்கனி போன்ற பல ஹீரோக்களுடன் இவர் நடித்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் இவர் ஆனந்தி கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் சீரியலில் அதிகமான நாட்கள் இவர் நடிக்கவில்லை. இவர் அந்த சீரியலில் இருந்து விலகியதும் அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது. இந்த நிலையில் நாயகி சீரியலுக்கு பிறகும் வழக்கம் போல சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். அதில் தனக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆகிவிட்டது என்று அவர் அறிவித்திருந்த நிலையில் அது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தது. இதுவரைக்கும் இவருக்கு திருமணமான செய்தி பலருக்கு தெரியாமல் இருந்த நிலையில் முதல் முறையாக தன்னுடைய கணவர் குறித்து வித்யா பிரதீப் போஸ்ட் வெளியிட்டு இருந்தார்.
சமீபத்தில் வெளியான கண்ணகி திரைப்படத்தில் வித்யா, முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் இப்போது அவர் அமெரிக்காவில் டாக்டர் ஆக வேலை செய்து கொண்டு இருக்கிறார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் வேலையிலும் பிசியாக இருக்கும் வித்யா அமெரிக்காவில் வேலை பார்த்தபடியே தனக்கு சூட்டிங் இருந்தால் மட்டும்தான் அதில் கலந்து கொள்கிறாராம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications