18 வருடங்களுக்குப் பிறகு நடிக்க வரும் முத்து பட நடிகை.. அதுவும் டாப் சீரியல் நடிகரோடு தானாம்!
சென்னை: திரைப்படங்களிலும் சின்னத்திரையிலும் வில்லியாக மிரட்டி கொண்டிருந்த நடிகை விசித்திரா 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க இருக்கிறாராம்.
ஜீ தமிழில் விரைவில் வெளியாக இருக்கும் கார்த்திகை தீபம் சீரியலில் இவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ரஜினி நடித்த முத்து திரைப்படத்தில் நடித்த விசித்திரா தற்போது சிரியலில் என்ன அவதாரம் எடுக்க இருக்கிறார் என்பது சஸ்பென்சாக இருந்து வருகிறது.

பல மொழி நடிகை
சன் டிவியில் ஒளிபரப்பான வாழ்க்கை என்ற சீரியலில் மூலமாக சின்னதிறையில் அறிமுகமான விசித்திரா பல வருடங்களுக்கு பிறகு ஜீ தமிழ் சீரியலில் நடிக்க இருக்கிறாராம். இவர் மாமி சின்ன மாமி போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் முத்து, ரசிகன் ,சுயம்வரம் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்திருக்கிறார். நகைச்சுவை கேரக்டராகவும், குணச்சித்திர வேடத்திலும், வில்லியாகவும் பல முகங்களில் நடித்திருக்கிறார்.

பத்தாவது படிக்கும் போதே நடிப்பு
விசித்ரா முதல் முதலாக பத்தாவது படிக்கும் போதே போர் கொடி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் வெளியாகவில்லை. அதற்குப் பிறகு ஜாதிமல்லி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து பிரதாப் போத்தனின் ஆத்மா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு இவர் ஆட்டம் போட்டிருக்கிறார். அந்த பாடலின் டான்ஸ் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. அதைத் தொடர்ந்து இவர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முத்து திரைப்படத்தில் செந்தில் ஜோடியாக நடித்திருப்பார்.

நடிப்பு படிப்பு திருமணம்
விசித்ராவை ஒரு நடிகையாக தெரிந்தாலும் இவருடைய தந்தையும் ஒரு நடிகர் தானாம். இவருடைய தந்தையின் பெயர் வில்லியம்ஸ் இவர் மனிதர்களில் இத்தனை நிறங்களா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறாரம். பத்தாவது படிக்கும்போதே நடிப்பிற்கு வந்ததால் இவரால் தொடர்ந்து பள்ளிக்கு சென்று படிக்க முடியவில்லையாம் அதனால் தொலைதூர கல்வி மூலமாக பி.ஏ சைக்காலஜி, எம்எஸ்சி சைக்கோ தெரபி கவுன்சில் ஆகிய படிப்புகளையும் படித்திருக்கிறார். இந்த நிலையில் தான் 2001 இல் ஷாஜி என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து விலகி திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.

மீண்டும் சீரியலுக்கு வருகை
இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு இவர் மீண்டும் ஜீ தமிழில் சீரியலில் நடிக்க இருக்கிறார் என்ற செய்திகள் பரவி வருகிறது. அதற்கு காரணம் இவர் செம்பருத்தி சீரியலில் மூலமாக ஆதி கேரக்டரில் பலருக்கும் பரிச்சயமான கார்த்திக் உடன் எடுத்த புகைப்படம் தான். கார்த்திக் மீண்டும் ஜீ தமிழ் சீரியலில் நடிக்க இருக்கிறார். தற்போது அவரோடு இவரும் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பரவி வருகிறது. கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்தியின் அம்மாவாக இவர் நடிக்க இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளியாக இருக்கும் நிலையில் தற்போது சீரியல் புகைப்படங்களில் இவரும் இருந்து வருகிறார். இது இவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இவர் கலந்து கொள்ளாதது ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மீண்டும் இவரை சீரியலில் எதிர்பார்க்க தொடங்கி இருக்கின்றனர்.
-
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
நடிகர் தியாகராஜனுக்கு கார் ஷோரூமில் நடந்த அவமானம்! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்கலையே! நெகிழ வைத்த தருணம் -
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications