காதலை அறிவித்த விஜய் டிவி சீரியல் நடிகை சங்கீதா.. காதலர் “அந்த” நடிகர் தான்.. விரைவில் திருமணம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசு கேரக்டரில் நடித்து பிரபலமடைந்த நடிகை விஜே சங்கீதா, நடிகர் அரவிந்த் சேஜுவை காதலிப்பதை அறிவித்திருக்கிறார்.
ஒன்றாக சீரியல்களிலும் சினிமாவிலும் நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. பல தம்பதிகள் இந்த வரிசையில் இருக்கிறார்கள். அதிலும் சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் ஒன்றாக நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது சங்கீதா மற்றும் அரவிந்த் சேஜு இணைந்து இருக்கிறார்கள்.

விஜே சங்கீதா ஆரம்பத்தில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் குறிப்பாக சன் டிவியில் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் இவருடைய கலகலப்பான பேச்சு பலரையும் கவர்ந்திருக்கும். அதுபோல சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார்.
தொகுப்பாளராக பரீட்சையமான இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியல் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. அந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் பாசிட்டிவ் ஆக நடித்த சங்கீதா பிறகு வில்லியாக கூட மாறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் மலர் கேரக்டரில் சங்கீதா நடித்திருந்தார். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் அந்த சீரியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்டு விட்டு திடீரென்று விலகி இருந்தார்.

அவருக்கு பதிலாக அடுத்த இரண்டாவது சீசனில் வேறொருவர் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல விஜய் டிவியில் சமீபத்தில் முடிவு அடைந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசு கேரக்டரில் சங்கீதா நடித்திருந்தார். அழகு சீரியலில் வில்லியாக பார்த்த இவர் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சரஸ்வதிக்கு நல்ல தோழியாகவும் சிறந்த சகோதரியாகவும் இருந்ததை பலரும் பாராட்டி இருந்தனர்.

அதோடு இவருக்கு நெகடிவை விடவும் பாசிடிவ் அழகாக இருக்கிறது என்றும் பல பாராட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு பிறகு பெரியதாக இவர் எந்த சீரியலிலும் தலைகாட்டவில்லை. இந்த நிலையில் கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் கலை கேரக்டரில் நடித்திருந்த அரவிந்த் சேஜுவை தான் காதலிப்பதாக அறிவித்திருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்த ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அரவிந்த் கனா காணும் காலங்கள் சீரியல் மட்டுமல்லாமல் youtubeலும் பல வீடியோக்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications