புடவையால் வெளிவந்த நடிகை தேவயானி ரகசியம்.. அந்த நேரத்திலே அப்படியாம்.. அடடே சொல்ல வச்சிட்டாங்களே
சென்னை: 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் கதாநாயகி, நடிகை தேவயானி பலருக்கும் பரீட்சையமானவர்தான். இவர் பல திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தற்போது சின்னத்திரைகளிலும் நடித்து வருகிறார்.
அவர் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணமும் செய்திருந்தார். ஆனால் இவர்களுடைய காதல் மலர்ந்தது பலருக்கும் வியப்பான விஷயம் தான்.

அந்த நேரத்தில் நடிகை தேவயானி மற்றும் ராஜகுமாரன் காதல் பெரிய அளவில் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து பல பிரச்சனைகளையும் தாண்டி தேவயானி ராஜகுமாரனை திருமணம் செய்திருந்தார். அவருடைய காதல் கதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இப்போதுள்ள காலகட்டத்தில் சாதாரண மக்களாக இருந்தாலும் சரி பிரபலங்களாக இருந்தாலும் சரி காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுடைய காதல் வாழ்க்கை பல வருடங்கள் தொடர்வதில்லை. சிலர் சின்ன சின்ன பிரச்சனைகளையும் கூட பெரிது பண்ணி வாழ்க்கையை கெடுத்து கொள்கிறார்கள்.
அதிலும் சமீப காலமாக தில நடிகை, நடிகர்கள் தொடர்ச்சியாக குடும்ப வாழ்க்கையை இணையத்தில் ஏலம் இட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தரங்க விஷயங்கள் முதல் அனைத்தையும் போட்டி போட்டு அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.இதற்கு விதிவிலக்காக ஒரு சில நடிகைகள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்களில் ஒருவர்தான் நடிகை தேவயானி. இவர் காதலுக்காக எந்த நடிகையும் எடுக்காத ரிஸ்கை எடுத்து இருக்கிறார். தான் காதலித்து திருமணம் செய்து கொண்டால் தன்னுடைய கேரியர் முடிந்து விடும் என்று தெரிந்தும் தன்னுடைய காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிகை தேவயானி இப்ப வரைக்கும் சந்தோஷமான திருமண வாழ்க்கையை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை தேவயானிக்கும் இயக்குனர் ராஜகுமாரனுக்கும் எப்படி காதல் வந்தது என்ற கதையை பார்க்கலாம். அந்த காலகட்டத்தில் நடிகை தேவயானி விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போது சூரியவம்சம் திரைப்படத்தில் நடிக்கும் போது உதவி இயக்குனராக இருந்த ராஜகுமாரனின் சந்திப்பு கிடைத்திருக்கிறது. அந்த நேரத்தில் இயக்குனர் ராஜகுமாரன் தன் மீது தன்னுடைய அம்மாவை விட அதிகமான அன்பு செலுத்துவதை உணர்ந்து தேவயானி உருகிப் போய் இருக்கிறார்கள்.
அதற்குப் பிறகு ராஜகுமாரனும் தேவயானியும் சொல்லாமலே தங்களுடைய காதலை மறைத்து வைத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில்தான் ராஜகுமாரன் தேவயானிக்கு ஒரு புடவையை வாங்கி கொடுத்திருக்கிறார். பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகைக்கு புடவை வாங்கி கொள்வது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. ஆனால் தேவயானி ராஜகுமாரன் வாங்கி கொடுத்த புடவையை பத்திரமாக வைத்துக் கொண்டாராம்.
பிறகு கொஞ்ச நாள் கழித்து ஒரு திரைப்படத்தின் வெற்றி விழாவில் அந்த புடவையை கட்டிக் கொண்டு வந்து ராஜகுமாரனிடம் இது என்ன புடவை என்று தெரியுதா? என்று கேட்டிருக்கிறார். அப்போதுதான் ராஜகுமாரனுக்கு தேவயானி தன்னை காதலிப்பது புரிந்து இருக்கிறது.
பிறகு இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கிய விஷயம் தேவயானியின் வீட்டிற்கு தெரிய வர, தேவயானி அம்மா தேவயானியை வீட்டிலேயே சிறை வைத்திருக்கிறார்கள். வீட்டு சுவரை ஏறி குதித்து ராஜகுமாரனை திருமணம் செய்து இருக்கிறார். தேவயானியின் திருமணத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தவர் பிறகு குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தொடங்கி இருந்தார்.
இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு சீரியலிலும் நடிக்க தொடங்கி இருந்தார். பல எதிர்ப்புக்கு எதிரே திருமணம் செய்திருந்தாலும் நடிகை தேவயானி தன்னுடைய சினிமா வாழ்க்கையை தன்னுடைய திருமணத்தால் முடிந்து போகும் என்று தெரிந்தும் அதை தைரியமாக எதிர்கொண்டு இப்போது வரைக்கும் தொடர்ச்சியாக தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளோடு வாழ்கிறார்.
அதுமட்டுமல்லாமல் தேவயானி ராஜகுமாரனை திருமணம் செய்திருந்த நேரத்தில் தேவயானியின் அம்மா தேவயானியை அதிகமாக திட்டி இருக்கிறார். அதுவும் சூரிய வம்சம் திரைப்படத்தில் இடம் பெற்றது போன்று "அவன் ஒரு உதவாக்கரை, அவனை தேடி போன நீ ஒரு உதவாக்கரை" என்று அதிகமாக திட்டி அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
-
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications