சிகரெட் பிடிச்சா என்ன தப்பு? நான் ட்ரடிஷனல்னு முத்திரை குத்திக்கவில்லையே? மீரா கிருஷ்ணன் பேட்டி
சென்னை: சன் டிவி உட்பட பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராகவும், தெய்வீக பாடல்கள் பாடும் பாடகி ஆகவும், நடிகையாகவும், பரீட்சையமான மீரா கிருஷ்ணன். இவர் தடம் திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடித்திருப்பார். அந்த காட்சியில் தான் நடித்தது பற்றி பேட்டியில் பேசி இருக்கிறார். அப்போது சிகரெட் பிடிச்சா என்ன தப்பு? என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
டிவி சேனல்களில் செய்தி வாசித்து பிரபலமான மீரா கிருஷ்ணன் அதிலிருந்து சில சீரியல்களில் நடிக்க தொடங்கி இருந்தார். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது சில திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. பொதுவாக ஒரு சில நடிகைகளை பார்க்கும் போதே பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு பந்தம் உருவாகும். அப்படித்தான் நடிகை மீரா கிருஷ்ணனையும் பார்க்கும் பலருக்கும் அவர் பரிச்சயமானவர் போல இருப்பார்.

இவர் நடிகையாக மட்டுமல்லாமல் வீணை வழியாக பல பாடல்களை வாசித்து பலருடைய மனதை எளிமையாக கவர்ந்து விடுவார். இவர் ஐயப்ப பக்தி பாடல்கள் பாடும் ஒரு பாடகரின் மருமகள் தான். மீரா கிருஷ்ணன் அவருடைய வீட்டிலும் சரி அவருடைய கணவர் வீட்டிலும் சரி இசை பின்னணி கொண்ட குடும்பம் என்பதால் பல கல்யாண கச்சேரி, கோவில் திருவிழாக்கள் போன்ற பல இடங்களிலும் வீணை வாசித்து இருக்கிறார். கச்சேரியில் எம் எஸ் வி இளையராஜாவின் பல ஹிட்டான பாடல்களை எடுத்து இவர் வாசித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் எத்தனையோ நடிகர்களுக்கு அம்மாவாக நடித்திருந்தாலும் தனுசுக்கு அம்மாவாக நடித்தது தான் தனக்கு பெயர் அல்லது பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது என்று சொல்லியிருக்கிறார். படிக்காதவன் திரைப்படத்தில் தனுஷின் அம்மாவாக நடித்திருப்பார். அதுபோல வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் அமலாபாலின் அம்மாவாகவும் நடித்திருக்கிறார்.

100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த மீரா கிருஷ்ணனை வீணை மீரா கிருஷ்ணன் என்று என்றுதான் பலர் கூப்பிடுகிறார்கள். ஆனால் அவர் நடித்த ஒரே ஒரு திரைப்பட காட்சி தான் அவரா இவர் என்று ரசிகர்களை வியக்க வைத்தது. அதாவது தடம் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் மீரா கிருஷ்ணன் நடித்திருப்பார்.
மீரா கிருஷ்ணன் புகைபிடிக்கும் காட்சிகள் அந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும். இது குறித்து பேட்டி ஒன்றில் மீரா கிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். நீங்கள் புகை பிடிக்கும் காட்சியில் நடித்தீர்களே இது தப்பில்லையா என்று கேட்க இதில் என்ன தப்பு இருக்கிறது என்று கேட்டிருக்கிறார் அதை தொடர்ந்து நீங்க ட்ரடிஷனலான பெண், இப்படி நடிக்கலாமா என்று கேட்க, நான் அப்படி உங்களிடம் சொன்னேனா? நீங்க தான் ட்ரடிஷனல் என்று முத்திரை குத்திக் கொண்டீர்கள்.
தடம் படத்தில் நான் சிகரெட் பிடித்தபடி அந்த அருண் விஜய் இடம் ஒரு தம் போடலாம் வா என்று கூப்பிடுவேன் அதை பார்த்து அருண் விஜய் பதறிப் போய்விட்டார். ஆனால் அந்த திரைப்படத்தில் என்னை இந்த காட்சியில் எப்படி நடிக்க வைக்க வேண்டும் என்று இயக்குனருக்கு எதனால் தோன்றியது என்று எனக்கே தெரியவில்லை. இது குறித்து நானே இயக்குனரிடம் கேட்டேன் அதற்கு அவர் இந்த கேரக்டருக்கு நீங்கள் தான் பொருத்தமாக இருப்பீங்க என்று எனக்கு தோன்றியது அதனால் உங்களை தேர்வு செய்தேன் என்றார்.
முதலில் எனக்கு புகை பிடித்த அனுபவம் எதுவும் கிடையாது என்பதால் சிரமமாக இருந்தது. என்னுடைய கணவர் தான் எனக்கு வீட்டில் வைத்து சொல்லிக் கொடுத்தார். ஆனால் அவரும் புகை பிடித்தது கிடையாது என்பதால் கொஞ்சம் சிரமப்பட்டோம் ஷூட்டிங் ஸ்பாட்டில் சொல்லி தந்தாங்க அதற்குப் பிறகு சில சிகரெட் கையில் கொடுத்து நீங்கள் வீட்டில் வைத்து இதை ட்ரைனிங் எடுத்து விடுங்கள் என்று சொன்னாங்க. நானும் என்னுடைய கணவரும் மாடிக்கு சென்று புகை பிடிக்கலாம் என்று மாடிக்கு போய்க் கொண்டிருந்தோம்.

அப்போது என்னுடைய மாமா மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். இந்த நேரத்தில் எங்க போறீங்க என்று கேட்டார். அப்போது அவரிடம் நாங்கள் துணி எடுக்கப் போகிறோம் என்று சமாளித்து பிறகு மாடியில் போய் சிகரெட் பிடித்தோம். நான் கற்றுக் கொண்டேன் என்னுடைய கணவர் புகைபிடித்து இறுமி கொண்டு இருந்தார். அந்த அனுபவத்தை மறக்க முடியாது. நாம் நடிக்க வந்து விட்டோம் இதுதான் காட்சி என்று சொல்லிவிட்டால் அதில் நடிக்க வேண்டியது நம்முடைய வேலை.
அதுபோல இந்த புகைப்பிடிக்கும் காட்சி சூட் செய்தது திருச்செந்தூரில் சரவணபவன் ஹோட்டல் முன்புதான் நடந்தது. நான் அப்போதுதான் சரவணப் பவன் கேசட் ஒன்று பாடி இருந்தேன். ஒரு தெய்வீக பாடல் பாடிவிட்டு அந்த இடத்தில் நின்று சிகரெட் பிடித்து நடித்தேன் என்று அந்த பேட்டியில் நடிகை மீரா கிருஷ்ணன் பேசியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications