எய்ட்ஸை கண்டு பயந்த ஹீரோயின்.. மோகன் ஒரு ஜென்டில்மேன்.. திட்டமிட்டு வீழ்த்த காரணம் இதுதான்: பிரபலம்
சென்னை: மோகனுக்கு மார்க்கெட் இன்று இல்லாவிட்டாலும்கூட, மோகனை அனைவரும் பார்க்ககூடிய பார்வையே வேறு. எவர்கிரீன் ஸ்டார் அவர்.. மோகனுக்கான ரசிகர்கள், ரசிகைகள் இன்றும் இருக்கிறார்கள்.. கோட் படம் காலியானதுக்கு காரணம் மோகன் என்றும் சொல்லலாம். அந்த படத்தில் அவர் நடித்திருக்கக்கூடாது என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கருத்து கூறியிருக்கிறார்.
Realone Media என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "புது ஸ்டைல் வைத்திருந்தார் மோகன்.. கமல்ஹாசனைவிடவும், ரசிகைகளை அதிகம் வைத்திருந்தார் மோகன்.. ரஜினி, கமலுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் மோகன்.. தனக்கான ஒரு லாபியை உருவாக்கியவர் நடிகர் மோகன்..

மோகனை விரும்பிய நடிகைகள்
ஆனால், சினிமாவுக்குள்ளேயே இவருக்கான பிணைப்புகள் மிகவும் குறைவாகும்.. மதன்லால் பிக்சர்ஸ் கோவை தம்பி எடுத்த படங்களுக்காகவே நிறைய வாய்ப்புகளை தந்தார் மோகன்.. குறிப்பிட்ட அந்த தயாரிப்பாளருக்கே அக்ரிமென்ட்களை போட்டு படங்களை தொடர்ச்சியாக தந்தது மோகனுக்கு மைனஸாகிவிட்டது.
நடிகை பூர்ணிமாவுடன் காதல் இருந்ததாகவும், ஆனால், அந்த காதலை மோகன் தவிர்த்துவிட்டதாகவும் அந்த காலத்தில் நிறைய கிசுகிசு இருந்தது.. ஆனால், உண்மையிலேயே மோகனை பல நடிகைகள் அப்போது விரும்பியிருக்கிறார்கள்.. ஆனால், யாரையும் திருமணம் செய்ய அவர் நினைக்கவில்லை,
மோகன் மீது பொறாமை - எரிச்சல்
அதேபோல, வேறு தயாரிப்பாளர்களை நாடி மோகன் செல்லாதது என இப்படி பல விஷயங்கள் பலருக்கும் மோகன் மீது பொறாமை, எரிச்சலை உண்டுபண்ணியிருந்தது. பெண்கள் விரும்பக்கூடியவராக இருந்ததும், பலருக்கும் பொறாமையை உண்டுபண்ணியது.
இதன் தொடர்ச்சியாகத்தான் மோகனுக்கு எய்ட்ஸ் இருப்பதாகவும் வதந்தி பரவியது. இது திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தியாகும்.. 90கள் காலகட்டத்தில் எய்ட்ஸ் என்பது மிகப்பெரிய பீதியை மக்களுக்கு தந்திருந்தது. எனவே, மோகனை வீழ்த்தவே பலரும் அப்போது இந்த நோயை பயன்படுத்தி கொண்டார்கள்.. அதற்கேற்றவாறு, இப்படியொரு வதந்தி பரவவும், அதை இல்லை என்று சொல்லி நிரூபிக்கவும் மோகனால் முடியவில்லை.
மார்க்கெட் சரிந்தது
காரணம், எய்ட்ஸ் என்றால் என்னவென்றே புரியாத காலகட்டம்.. அது நோயா? எந்த மாதிரி பரவும்? என்ற முழுமையாக தெரியாது.. ஆனால், ஊசி மூலமாக எய்ட்ஸ் பரவும், ரத்தம் செலுத்துதன் மூலமாக எய்ட்ஸ் பரவும், உடலுறவு மூலமாக பரவும் என்பது மட்டுமே அப்போதைய காலகட்டத்தில் தெரிந்திருந்தது. எனவே, சினிமாவிலும் மோகனை ஒதுக்க ஆரம்பித்தார்கள். நடிகைகளும் மோகனுடன் நடிக்க பயந்தார்கள்..
இந்த நோய் மோகனுக்கு இருப்பதாக பொய்யான தகவலை பரப்பியதே அவரது வீழ்ச்சிக்கு காரணமாகிவிட்டது.. மோகனுக்கு அப்படியான எந்த நோயும் இல்லை என்றாலும், நாலு சுவருக்குள்ளேயே அவர் அடைபடும்படி ஆகிவிட்டது. திட்டமிட்டபடி அவரது மார்க்கெட்டையும் இழக்க வைத்துவிட்டார்கள்.
எய்ட்ஸ் - நடிகைகள்
அன்று சில நடிகைகளும் எய்ட்ஸை கண்டே பயந்தார்கள்.. அந்த லிஸ்ட் பெரிதாக உள்ளது. ஆனால், மோகன் சினிமாவில் ஒரு ஜென்டில்மேன் என்றே சொல்ல வேண்டும்.. கிசுகிசு வந்ததே தவிர, சர்ச்சைகளில் சிக்கியது கிடையாது..
மிகப்பெரிய வீழ்ச்சிக்கு பிறகு தன்னை நிலைநிறுத்தி கொள்ள பல முயற்சிகளை மோகன் செய்தார் என்றாலும் அது பலன் தரவில்லை.. அதேபோல, கோட் படத்தில் விஜய்யுடன் மோகன் நடித்திருக்கக்கூடாது.. யாருமே அதை விரும்பவில்லை.. கோட் படம் காலியானதுக்கு காரணம் மோகன் என்றும் சொல்லலாம்.
மோகனுக்கான ரசிகைகள் ஏராளம்
மோகனுக்கு மார்க்கெட் இன்று இல்லாவிட்டாலும்கூட, மோகனை அனைவரும் பார்க்கக்கூடிய பார்வையே வேறு. எவர்கிரீன் ஸ்டார் அவர்.. மோகனுக்கான ரசிகர்கள், ரசிகைகள் இன்றும் இருக்கிறார்கள்..
அதுபோலவே பிரசாந்த்துக்கும், சிம்புக்கும் படம் ஓடுதோ, ஓடலையோ, ஆனால், அவர்களின் ரசிகர்கள், ரசிகைகள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். அதுபோல மோகனுக்கும் ரசிகைகள் உண்டு.. பெண்களை கவரும் மோகன், சீரியல் பக்கம் சென்றால் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு தரும்.. அந்த அளவுக்கு மோகனை மக்கள் அன்றும் கொண்டாடினார்கள், இன்றும் கொண்டாடுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு மோகன் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அதில், "90-களில் எனக்கு எய்ட்ஸ் நோய் வந்து நான் இறந்துவிட்டதாக சொன்னார்கள். அந்த செய்தி கேட்டு என்னுடைய ரசிகர்கள் பதறியடித்து என் வீட்டிற்கு வந்தார்கள். எனக்கு மட்டுமில்ல என்னுடைய குடும்பத்தினருக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது.
பின்னர் என்னை பேட்டி எடுக்க வந்தவர், எய்ட்ஸ் இல்லைனு சொல்லுங்க சார்னு சொல்ல சொன்னாங்க. டேய் இது போங்கா இருக்கேடானு சொன்னேன். ஏனென்றால், நீங்களே இருக்குனு சொல்வீங்க, இல்லைனு நான் சொல்லனுமானு கேட்டேன்.
அப்புறமா நண்பர்களிடம் சொன்னேன், இதுலயும் நான் தான் ஒரு டிரெண்ட் செட்டரா இருந்திருக்கேன். உண்மை என்னனு எனக்கு தெரியும், என் நண்பர்களுக்கு தெரியும், என் குடும்பத்தினருக்கு தெரியும். அது உண்மையா இருந்தா தான் ஃபீல் பண்ண முடியும். அதுனால எனக்கு எந்த ஃபீலிங்கும் இல்லை" என தெரிவித்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications