இன்ஸ்டாகிராமில் "அந்த பொண்ணு” அனுப்புன மெசேஜ்..!பிரேக்கப்.. ரகசியத்தை பகிர்ந்த kpy தீனா மனைவி
சென்னை: நடிகர் தீனாவிற்கும் பிரகதி என்ற பெண்ணிற்கும் சில தினங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.
திருமணம் சிம்பிளாக நடைபெற்ற நிலையில் ரிசப்ஷனை தீனா சென்னையில் பிரமாண்டமாக வைத்திருந்தார். அவருடைய ரிசப்ஷனுக்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு தீனா பற்றி பிரகதி youtube சேனல் ஒன்றுக்கு பேசுகையில் பல ரகசியங்களை கூறியிருக்கிறார்.

விஜய் டிவி தீனா என்று சொன்னால் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவோர் பலருக்கும் தெரிந்தவர் தான். சின்னத்திரையில் இவருடைய அட்ராசிட்டி பார்த்து பல பிரபலங்கள் இவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கே பயப்பட்டு இருக்கிறார்கள். அந்த அளவிற்கு போன் போட்டு பலரையும் கலாய்த்து பிராங்க் செய்வதுதான் தீனாவின் தனி சிறப்பு.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கேமராவுக்கு பின்னாடி ஒரு துணை இயக்குனராக பணியாற்றி வந்த தீனா பிறகு தனக்கு இருக்கும் திறமையை பார்த்து பலரும் இவரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சொன்ன பிறகுதான் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் தீனா இல்லாத நிகழ்ச்சியை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய பிராங்கால் திடீர் விசிட் அடித்து விடுவார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக செல்லாமல் போட்டியாளராக அங்கு மிரட்டி கொண்டிருப்பவர்களையும் திடீரென்று போய் மிரட்டி விட்டு வந்திருக்கிறார். இந்த அளவிற்கு பலரையும் பாடாய் படுத்தி எடுத்த தீனா இப்போ வெள்ளிதிரையிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் சொந்தமாக புது வீடு கட்டிய கிரகப்பிரவேசம் வைத்த தீனா அதைத்தொடர்ந்து திருமணமும் செய்து இருக்கிறார். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவியோடு பிரபல youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது அவருடைய மனைவி தீனா பற்றி பல ரகசியங்களை போட்டு உடைத்து இருக்கிறார். அது வைரலாகி வருகிறது.

அது வேற ஒன்றும் இல்லை. திருமணத்திற்கு பின் முன்பு தீனாவிற்கு ஒரு பெண் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்திருந்தாராம். அதுவும் நீண்ட லவ் மெசேஜ். இதுவரைக்கும் நான் கூட அப்படி தீனாவுக்கு மெசேஜ் செய்யவில்லை. அந்த மாதிரி செஞ்சி இருந்தாங்க. ஆனா அதற்கு தீனா ஒரு பதிலும் கொடுக்கவில்லை. அப்படி இல்லாம மட்டும் அவர் அதுக்கு பதில் கொடுத்து இருந்தாருன்னா நான் அப்பவே பிரேக்கப் பண்ணி இருப்பேன்னு பேசியிருக்கிறார்.
இதை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த தீனாவை பார்த்து, இதுவரைக்கும் எத்தனையோ பேரை பிராங்க் செய்த அலற விட்டிருந்தாலும் பொண்டாட்டி பேசிய பேச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் பம்மி கொண்டிருக்கிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றார்கள்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications