இன்ஸ்டா 1 minute saree நாகலட்சுமி மரணத்திற்கு பிறகு.. மகன்களின் நிலைமை பரிதாபம்! பிரபலம் உருக்கம்
சென்னை: சென்னை நங்கநல்லூரில் நடந்த நாகலட்சுமி கொலை சம்பவம், சாதாரண குற்றச் செய்தியாக மட்டும் இல்லாமல், சமூகத்தையே சிந்திக்க வைக்கும் ஒரு வேதனையான நிகழ்வாக மாறியுள்ளது. உழைப்பால் உயர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை இவ்வாறு முடிவடைந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், நடிகையும் மாடலுமான நான்சி, நாகலட்சுமியைப் பற்றி பகிர்ந்துள்ள நினைவுகள் இந்த சம்பவத்தை இன்னும் மனதை உருக்கும் வகையில் மாற்றியுள்ளது.

உழைப்பாளி
நான்சி அளித்த பேட்டியில், நாகலட்சுமியுடன் தனது நெருக்கமான தொடர்பைப் பற்றி விரிவாக பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, "நாகலட்சுமி எனக்கு சுமார் நான்கு வருடங்களாக தெரியும். அவங்க வேலையில ரொம்ப டெடிகேஷன். எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறணும் என்பதுதான் அவங்க ஆசை. அதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு உழைப்பாங்க." அவர் ஒரு சாதாரண வியாபாரி அல்ல, தனது முயற்சியால் வாழ்க்கையை கட்டி எழுப்பிய ஒருவர் என்று கூறியிருக்கிறார்.
குழந்தைகளுக்காகவே வாழ்ந்தவர்
நாகலட்சுமியின் குடும்ப வாழ்க்கை குறித்தும் நான்சி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். "அவங்களுக்கு குழந்தைகள் மேல ரொம்ப பாசம். அவர்களுக்காகத்தான் அவங்க இவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சாங்க." நாகலட்சுமியின் இரண்டு மகன்களில், ஒருவர் ரஷ்யாவில் மருத்துவம் படித்து வருகிறார். மற்றொரு பையன் சென்னையில் மருத்துவம் பயின்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகனின் உருக்கமான வார்த்தைகள்
நாகலட்சுமியை அவருடைய கணவரே கொலை செய்து விட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்ட பிறகு நடந்த ஒரு மனதை உடைக்கும் தருணத்தையும் நான்சி பகிர்ந்துள்ளார்.
நாகலட்சுமி மறைந்த பிறகு, அவரது மகன் தனக்கும் நாகலட்சுமிக்கும் பொதுவான நண்பர் வீட்டிற்கு சென்றபோது, ரொம்பவே உடைந்து போய் இருந்தாராம், "என் அம்மா இருந்த அந்த நிலையை நான் பார்த்தது மறக்கவே முடியல... எங்க அம்மா ரொம்ப நல்லவங்க... தைரியமானவங்க... ஆனா அவங்களுக்கு இப்படி ஒரு நிலை வரக்கூடாது... என அவருடைய மகன் இதை கூறும்போது மிகவும் உடைந்து போய் பேசியதாகவும், அந்த தருணம் மறக்க முடியாததாக இருந்ததாகவும் நான்சி தெரிவித்துள்ளார்.
படிக்கணும் என்ற ஆசை
மேலும் நாகலட்சுமி இறந்த அடுத்த நாள் எக்ஸாமை அவருடைய மகன் எழுதி இருந்தாராம் அது பற்றி சொல்லும் போது "அம்மா நாங்க நல்லா படிக்கணும் என்று ரொம்ப ஆசைப்பட்டாங்க... எனக்காக தான் கஷ்டப்பட்டு படிப்பு செலவுகள் எல்லாம் பார்த்தாங்க... அதனால தான் அம்மா இறந்த பிறகும் நான் எக்ஸாம் எழுத போனேன் என்று கண்கலங்கி பேசினாராம். நாகலட்சுமியின் மரணத்திற்கு பிறகு, "எங்களால வீட்டுக்குள்ள இருக்கவே முடியல... ரொம்ப கஷ்டமா இருக்கு..." என்று அவருடைய மகன் கூறினாராம்.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications