அப்பா பற்றி அந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் அம்மா பதறிட்டாங்க.. ராமராஜன் மகள் உடைத்த ரகசியம்
சென்னை: நடிகர் ராமராஜன் மற்றும் நளினி காதலித்து திருமணம் செய்து இருந்தாலும் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் நளினி மற்றும் ராமராஜன் பிரிந்த பிறகு அவர்கள் இருவரின் மனநிலை குறித்து ராமராஜனின் மகள் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
திரைதுறையில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்று புதிதல்ல. அது அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை நடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் திரை துறையில் இருக்கும் பிரபலங்கள் திருமணத்திற்கு பிறகு தங்களுடைய திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக பல வருடங்கள் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்களா என்பது கேள்விக்குறி தான்.

பல பேர் ஒரே பீல்டில் திருமணம் செய்து கொண்டால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வார்கள் என்று திருமணம் செய்தாலும் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுகிறார்கள். அந்த மாதிரி பல வருடங்களுக்கு முன்பே பிரிந்தவர்கள் தான் நடிகர் ராமராஜன் மற்றும் நளினி இவர்கள் இருவரும் வீட்டில் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு இரண்டு குழந்தைகள் பிறந்ததும் சில வருடங்களிலேயே பிரிந்து விட்டனர். ஆனாலும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பு இன்னமும் மாறவில்லை என்று பல பேட்டிகளில் இருவரும் வெளிப்படையாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நளினி பற்றி ராமராஜனோ அல்லது ராமராஜன் பற்றி நளினியோ எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்து பேசியதும் கிடையாது. ஆனாலும் இவர்கள் பிரிந்திருக்கிறார்களே என்பதுதான் பலருடைய வருத்தமாகவும் இருக்கிறது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் பிரிவிற்கு பிறகும் தங்களுக்குள் இருக்கும் காதல் குறித்து அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றார். இது பற்றி ராமராஜன் மற்றும் நளினியின் மகளான அருணா சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் அப்பாவுக்கு அம்மா மீது அதிகமான பாசம் உண்டு. அது போல அம்மாவுக்கும் அப்பா மீது அதிகமான பாசம் உண்டு. ஆனாலும் இருவரும் பிரிந்துவிட்டனர்.
ஒருமுறை அப்பாவுக்கு பெரிய விபத்து ஏற்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் அம்மா சூட்டிங் போயிருந்தாங்க. இரவு நேரத்தில் எங்களுக்கு போன் வந்தது அப்போது தம்பி போனை அட்டென்ட் பண்ணவில்லை. ஏதோ பிராங்கால் வருது என்று விட்டுவிட்டார். பிறகு காலையில் எங்க உறவினர் ஒருவர் போன் பண்ணி விஷயத்தை சொன்னாங்க. அம்மா அதைக்கேட்டு ரொம்பவே பதறி போய்ட்டாங்க. அந்த நேரத்தில் எனக்கு எக்ஸாம் இருந்தது. ஆனாலும் அதை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு உங்க அப்பா தான் முக்கியம் நீங்க போய் பாருங்க என்று எங்களை கிளம்பி போக வைத்துட்டாங்க.
அம்மாவால அன்னைக்கு வர முடியாது. அம்மாவுக்கு முக்கியமான ஷூட்டிங் இருந்தது. அதனால் நானும் தம்பியும் தான் அப்பாவோடு இருந்தோம். நாங்க ரெண்டு பேரும் அங்க போயி அப்பாவை போட்டோ எடுத்து அம்மாவுக்கு போட்டோ அனுப்புன பிறகு தான் அம்மா நிம்மதி அடைஞ்சாங்க. அப்புறம் ஒவ்வொரு முறையும் அம்மா அப்பாவின் நிலைமை எப்படி இருக்குன்னு என்கிட்ட கேட்டுட்டு இருப்பாங்க.
அப்பாவை பிரிகிற வரைக்கும் அம்மா தான் அப்பாவின் மருந்து மாத்திரைகள் எல்லாம் சரியா எடுத்து கொடுத்துட்டு இருந்தாங்க. அதற்குப் பிறகு அவருக்கு ஆக்சிடென்ட் ஆனதும் மருத்துவமனைக்கு அம்மாவே போன் போட்டு அது பற்றி பேசி இருந்தாங்க. அதற்குப் பிறகு அப்பா கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைமைக்கு மாறிக்கிட்டு இருக்கிறது தெரிஞ்சு தான் அம்மா சந்தோஷம் அடைஞ்சாங்க என்று அந்த பேட்டியில் ராமராஜன் மற்றும் நளினியின் மகள் அருணா பேசியிருக்கிறார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications