அர்ஜுன் மகள் ரிசப்ஷனில் பிரபலங்களின் வருகை.. வெண்ணிற ஆடை மூர்த்தி முதல் யாரெல்லாம்னு பாருங்க
சென்னை: நடிகர் அர்ஜுன் மகளான ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி திருமணம் நடைபெற்று இருந்த நிலையில் அவர்களுடைய ரிசெப்ஷன் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. அதில் அரசியல் பிரமுகர்களும், பல நடிகர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவின் என்கேஜ்மெண்டை அர்ஜுன் தான் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் எளிமையாக நடத்தி முடித்து இருந்த நிலையில் அதை தொடர்ந்து கடந்த ஜூன் 10ஆம் தேதி ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து திருமணமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களுக்காக லீலா பேலன்ஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஜூன் 14ஆம் தேதியான நேற்று இரவு நடைபெற்றிருக்கிறது.

இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதல் பாஜக பிரமுகர் அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ், சீமான் என்று பல அரசியல் பிரபலங்களும் நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உட்பட பல இயக்குனர்களும் நடிகர்களும் ரிசப்ஷனில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதோடு இந்த பங்க்ஷனில் கலந்து கொண்ட பல பிரபலங்களும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வரிசையில் சீரியல் நடிகரான ராஜ் கமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உமாபதி மற்றும் ஐஸ்வர்யாவின் ரிசப்ஷனில் தான் ஓடி ஓடி வேலை பார்த்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில் மேடையில் மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணோடு புகைப்படம் எடுத்த ராஜ்கமல் அதைத் தொடர்ந்து அர்ஜுன் மற்றும் தம்பி ராமையாவிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் வந்திருந்த நிலையில் அவரை வரவேற்று அவரோடு புகைப்படங்களை எடுத்துருக்கிறார். அதைத் தொடர்ந்து நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி இடம் ஆசிர்வாதம் வாங்கி அவரிடமும் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து ரஜினிகாந்த், ஐஸ்வர்யா, அன்புமணி ராமதாஸ், சீமான், பாரதிராஜா, டி ராஜேந்திரன், சசிகுமார், விஜய் சேதுபதி, சத்யராஜ், பிரபு, வடிவேல், சினேகா மற்றும் பிரசன்னா, பிரபுதேவா போன்ற பலரோடு புகைப்படங்களை எடுத்து இருக்கிறார்.
அதோடு இந்த வீடியோவிற்கு நீங்கள் தான் மாப்பிள்ளை போல ஓடி ஓடி வேலை செஞ்சு கொண்டிருக்கிறீங்களே என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இது என்னுடைய தம்பியின் கல்யாணம் நான் தானே வேலை பார்க்கணும் என்று பதில் கொடுத்திருக்கிறார் இந்த இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் அர்ஜுன் சின்னதிரையில் முதல் முதலாக ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த உமாபதி அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் காதல் ஏற்பட்டு இருந்த நிலையில் இருவருடைய காதலுக்கும் இரண்டு வீட்டிலும் சம்மதம் தெரிவித்து இருந்த நிலையில் இப்போது இவர்களுக்கு திருமணமும் முடிவடைந்து இருக்கிறது.

தன்னுடைய மகளின் திருமணத்தில் அர்ஜுன் உமாபதியின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்தது பலருடைய பாராட்டுகளை பெற்றது. அதுபோல ரிசப்ஷனில் அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா இருவரும் ஒரே கலரில் கோட் சூட் அணிந்திருக்கிறார்கள். அதுபோல புதுமண தம்பதிகளான ஐஸ்வர்யா மற்றும் உமாபதிக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications