பல வருடம் கழித்து விளம்பரத்தில் நடித்த அஜித்.. வலுக்கும் எதிர்ப்புகள், ரசிகர்களே இப்படி சொல்றாங்க
சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமாருக்கு கிடைத்த ரசிகர் அந்தஸ்து ரொம்பவே தனிச்சிறப்பு வாய்ந்தது. ஆரம்ப காலங்களில் "காதல் மன்னன்", "அல்டிமேட் ஸ்டார்" என்ற அடைமொழிகளுடன் கொண்டாடப்பட்ட அஜித், தீனா படத்துக்கு பிறகு "தல" என்ற பெயரிலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஒரு கட்டத்தில் ரசிகர் மன்றங்கள், கோஷங்கள், பால் அபிஷேகம் எல்லாம் அதிகரிக்க, அஜித்தே நேரடியாக வந்து "இதெல்லாம் வேண்டாம்" என்று சொல்லி ரசிகர் மன்றங்களையும் கலைத்தார். அதுமட்டுமல்ல, "தலன்னு கூட என்னை அழைக்க வேண்டாம்" என்று பல முறை அவர் சொல்லியும் இருக்கிறார்.
அஜித்தின் இன்னொரு முக்கியமான குணம் என்னவென்றால் - பட புரமோஷன். 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' போன்ற படங்களுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேலான சம்பளம் வாங்கினாலும், எந்த ஆடியோ லான்ச்சுக்கும் வரவில்லை. எந்த ஸ்டேஜிலும் பேசவில்லை. ரசிகர்களை நேரில் சந்திப்பது கூட அரிது.

அந்த பக்கம் பார்த்தால், விஜய் 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் ஆகும் முன்பே ஆடியோ லான்ச் வைத்து தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய வருமானம் ஈட்டிக் கொடுத்தார் என்கிற பேச்சும் ஓடுகிறது. இதையெல்லாம் பார்த்து "அஜித் இப்படியேதான்" என்று ரசிகர்கள் பழகி போயிருந்தார்கள்.
ஆனால், பல வருடங்களாக "விளம்பரம் இல்லை", "புரமோஷன் இல்லை" என்று கண்டிப்பாக இருந்த அஜித், திடீரென ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'கேம்பா எனர்ஜி' (Campa Energy) எனர்ஜி டிரிங் விளம்பரத்தில் நடித்தது தான் இப்போ பெரிய சர்ச்சையாக மாறி இருக்கிறது.
அஜித் அந்த பானத்தை அருந்துவது போல வெளியான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ, அதைவிட வேகமாக விமர்சனங்களும் குவிந்தன.
ரசிகர்களே எதிர்க்கும் அரிய காட்சி
வழக்கமாக அஜித்தை யாராவது கிண்டல் செய்தால், உடனே அரணாக நின்று பாதுகாக்கும் அவரது ரசிகர்களே இப்போது "இது தப்பு தான்" என்று வெளிப்படையாக பேச ஆரம்பித்திருப்பது தான் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
"தயாரிப்பாளர்கள் காசு போட்டுப் படம் எடுக்கிறப்போ ஒரு ஸ்டேஜ்க்கு கூட வராத நீங்க, உங்க சொந்த ரேசிங் கம்பெனிக்காக இப்படி ஒரு குளிர்பான விளம்பரமா?" "இளைய ரசிகர்களை நலம் வாழ ஊக்குவிக்கிறவர் இப்படியொரு எனர்ஜி டிரிங்கை பிரபலப்படுத்தலாமா?"
என கேள்விகள் எழுப்பி, சட்டையை பிடித்து உலுக்காத குறையாக பதிவுகள் போட்டு வருகிறார்கள்.
விளம்பரத்துக்குப் பின்னால் இருக்கும் உண்மை
இதற்கு இன்னொரு பக்கம் விளக்கம் சொல்லும் ரசிகர்களும் இருக்கிறார்கள். அஜித்துக்கு சிறுவயதிலிருந்தே பைக், கார் ரேசிங் மீது தீராத ஆர்வம். அந்த ஆர்வத்தின் விளைவாக தான் 'Ajith Kumar Racing' என்ற அணியை தொடங்கி, இதுவரை சினிமாவில் சம்பாதித்த பெரும்பாலான பணத்தையும் அதில் முதலீடு செய்துள்ளார்.
இந்த அணியில் வெளிநாட்டு வீரர்களும் இருப்பதால், சர்வதேச போட்டிகள், தொழில்நுட்ப வசதிகள் என மிகப் பெரிய செலவுகள் தேவைப்படுகிறது. அதனால் தான் ஸ்பான்சர்ஷிப்புக்காக இந்த 'கேம்பா எனர்ஜி' விளம்பரத்தில் நடித்துள்ளார் என்றும், அதற்காக பெரிய தொகை பெற்றுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், "கடவுளே அஜித்தே"ன்னு கத்தின ரசிகர்களே இப்போ "தப்புன்னா தப்பு தான்"ன்னு கேள்வி கேட்குற நிலைக்கு வந்திருப்பது தான் இந்த விவகாரத்தின் ஹைலைட். ஒருபக்கம் விஜய் ரசிகர்களே கூட "இதில் அஜித் ரசிகர்கள் பேசுவது நியாயம் தான்" என்று சொல்லும் அளவுக்கு இந்த விவாதம் பெரிதாகி இருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications