Good Bad Ugly Box Office Collection: பாக்ஸ் ஆபீஸில் முதல் நாளே கலக்கிய குட் பேட் அக்லி.. அதுவும் இத்தனை கோடி வசூலா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ஏப்ரல் பத்தாம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.

நடிகர் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை. இதனால் குட் பேட் அட்லி திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா நடித்துள்ளார்.

Ajith Kumar Arjun Das Good Bad Ugly Movie

குட் பேட் அக்லி நடிகர்கள்

ஏற்கனவே அஜித்துடன் ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால், விடாமுயற்சி போன்ற பல படங்களில் திரிஷா நடித்திருந்தாலும் இந்த திரைப்படத்தில் இவருடைய கூட்டணி எப்படி இருக்க போகிறது என்று எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது. அதோடு இந்த திரைப்படத்தில் சிம்ரன், பிரியா வாரியார், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், ரெடின் கிங்ஸ்லி என்று அதிகமான நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

ஜி வி பிரகாஷ் இசை

மைத்ரி மூவிஸ் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. தெலுங்கில் புஷ்பா போன்ற பிரமாண்ட படங்களை தயாரித்த இந்த நிறுவனம் அஜித் மூலம் ஹாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். அதுபோல இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசை அமைத்திருந்தார். திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் ரசிகர்களை முணுமுணுக்க வைத்திருந்தது.

Ajith Kumar Arjun Das Good Bad Ugly Movie

குட் பேட் அக்லி முதல் நாள் வசூல்

இந்த நிலையில் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியிருக்கிறது. முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ 28.5 கோடி வசூலித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த திரைப்படம் ரூ 21. 8 கோடி வசூலித்து இருக்கிறது. அது போல் கர்நாடகாவில் மூன்று கோடி வசூலித்துள்ளது. ஏற்கனவே வெளியான விடாமுயற்சி படத்தைவிட இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளில் வெறும் ரூ.22 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.

நெருங்க முடியாத கோட் வசூல்

அதேபோல அஜித் ரசிகர்கள் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்த்து கொண்டாடிக் கொண்டிருந்தாலும் விஜய் திரைப்பட வசூலை குட் பேட் அக்லியால் நெருங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. கோட் திரைப்படம் வெளியான அன்று உலக அளவில் ரூபாய் 126 கோடி வசூலித்து இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 35 கோடிக்கு மேல் வசூலித்தது. ஆனால் குட் பேட் அக்லி திரைப்படம் அதைவிட 14 கோடி குறைவாக வசூலித்து இருக்கிறது.

அதிகம் வசூலித்த திரைப்படம்

அதுபோல இன்னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது. அதையாவது இந்த வருடத்தில் தமிழ்நாட்டில் அதிக அளவு வசூலித்த படம் என்றால் அது பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் என்று கூறப்படுகிறது. அந்த திரைப்படம் 150 கோடிக்கு மேல் வசூலித்தது குட் பேட் அட்லி திரைப்படம் டிராகன் சாதனையை முறியடிக்கிறதா என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.

Ajith Kumar Arjun Das Good Bad Ugly Movie

அஜித் படங்களின் முதல் நாள் கலெக்ஷன்

அதே நேரத்தில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான வலிமை, துணிவு, விடாமுயற்சி, குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரங்களை பார்க்கும் போது வலிமை திரைப்படம் முதல் நாள் 28 கோடி வசூல் செய்து இருக்கிறது. அதுபோல துணிவு 23 கோடி வசூல் செய்திருக்கிறது. அதைத்தொடர்ந்து விடா முயற்சி உலக அளவில் 26 கோடி வசூல் செய்திருக்கிறது. இப்போது வெளியான குட் பேட் அட்லி 28.5 கோடி வசூல் செய்து முன்னேறி இருக்கிறது. தொடர்ச்சியாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வரும் நிலையில் இந்த திரைப்படம் இன்னும் அதிக வசூலை பெறுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+