Ajith Kumar: நடிகர், ரேசர், வழிகாட்டி! எனக்காக அல்ல, இந்தியாவுக்காக! அஜித்தின் உணர்ச்சிபூர்வமான வீடியோ
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், கடந்த சில வருடங்களாகவே நடிப்பை விட மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் ஜெர்மனியில் கலந்துகொண்ட ரேஸிங் போட்டியில், அவர் பேசிய உத்வேகமான பேச்சு, இணையத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

சினிமா முதல் ரேஸிங் வரை
அஜித்குமார், தான் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்திலேயே ரேஸிங் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், அந்த நேரத்தில் ஏற்பட்ட சில விபத்துகள் மற்றும் அவரது திரை வாழ்க்கை அவரை ரேஸிங் களத்திலிருந்து ஒதுங்கி இருக்கச் செய்தன. பல வருட இடைவெளிக்குப் பிறகு, அவர் பைக் சுற்றுலாக்களில் ஈடுபட்டு, தனது ரேஸிங் ஆர்வத்தைத் மீண்டும் வெளிப்படுத்தத் தொடங்கினார்.
கடந்த ஆண்டு, தனது சொந்த ரேஸிங் நிறுவனமான 'அஜித்குமார் ரேஸிங்'-ஐத் தொடங்கி, துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும், இனிமேல் தனது நேரத்தை, "ஆறு மாதங்கள் சினிமாவிற்கும், அடுத்த ஆறு மாதங்கள் ரேஸிங்கிற்கும்" என்று பிரித்துக் கொள்ளப் போவதாகவும் அறிவித்தார்.
ஜெர்மனியில் பிரம்மாண்ட வெற்றி பயணம்
சமீபத்தில், ஜெர்மனியில் நடைபெற்ற ஜிடி4 யூரோப்பியன் சீரீஸ் போட்டியின் நான்காவது சுற்றில் அஜித்குமார் கலந்துகொண்டார். இந்தத் தொடரின்போது, உலகப் புகழ்பெற்ற இத்தாலிய முன்னாள் எஃப் 1 ரேசர் ரிக்கார்டோ பாட்ரீசியைச் சந்தித்து, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஸ்போர்ட்ஸை ப்ரொமோட் செய்யுங்கள்
போட்டியின்போது, அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் மற்றும் செய்தியாளர்களிடம் பேசிய அஜித்குமார், தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார். "மோட்டார் ஸ்போர்ட்ஸ் என்பது ரொம்ப எளிமையானது எனப் பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி இல்லை. உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் ஒரு ரேசர் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால், தயவுசெய்து மோட்டார் ஸ்போர்ட்ஸை ப்ரொமோட் செய்யுங்கள்."
இது எனக்காக அல்ல இந்தியாவுக்காக! என்றாவது ஒரு நாள் நம்மிடமும் ஒரு எஃப்1 சாம்பியன் இருப்பார். எஃப்1 மட்டுமல்ல, எல்லாப் போட்டிகளிலும் இந்திய ரேஸர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். அதற்காகத்தான் இந்த விளையாட்டைப் பிரபலப்படுத்த வேண்டும்" என்று அவர் உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.
நடிகராக மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட ஆர்வத்தையும் ஒரு சமூக நோக்கமாக மாற்றியிருக்கும் அஜித்தின் இந்தச் செயல், பலரையும் கவர்ந்துள்ளது. அவருடைய இந்த வீடியோ, இளம் இந்திய ரேஸர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications