இரவு உறவு.. காலையில் செய்த செயல்.. முத்துக்குமரன் மீது குற்றச்சாட்டு! வாஹிதா வெளியிட்ட புதிய ஸ்டோரி!
சென்னை: பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற முத்துக்குமரன் மீது இன்ஸ்டாகிராம் பிரபலமான வாஹிதா வைத்துள்ள குற்றச்சாட்டுகள் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தன்னை காதலிப்பதாகக் கூறி நெருக்கமாகப் பழகிவிட்டு, திருமணம் குறித்து பேசியபோது முத்துக்குமரன் பின்வாங்கிவிட்டதாக வாஹிதா குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோக்களும் வேகமாகப் பரவின. பின்னர் அந்த வீடியோக்களை அவர் டெலிட் செய்திருக்கிறார்.
இந்த சூழலில், வாஹிதா தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது. அதில், ஒரு ஆணும் பெண்ணும் இருக்கும் ஓவியத்துடன் "To be Loved, not lusted" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, வெறும் உடல் ஈர்ப்புக்காக அல்ல, உண்மையான அன்புடன் நேசிக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த வரிகளின் பொருள். அந்தப் பதிவில் "Difference" என்றும் எழுதப்பட்டுள்ளது.
முத்துக்குமரன் விவகாரம் பேசப்பட்டு வரும் நேரத்தில் இந்த ஸ்டோரியை வாஹிதா பகிர்ந்திருப்பதால், பலருடைய கவனமும் அந்தப் பதிவின் பக்கம் திரும்பியிருக்கிறது. ஆனால் இந்த ஸ்டோரி முத்துக்குமரனுக்கு பதிலடியாக அவர் வெளியிட்டு இருப்பதாகவே பலரும் கூறி வருகின்றனர் ஆனால் முத்துக்குமரன் ஏற்கனவே கொடுத்த விளக்கத்தில் வாஹதா என்னுடைய தோழிதான் அவரை எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவர் எதற்காக இப்படி எல்லாம் பேசுகிறார் என்று எனக்கு தெரியவில்லை அதற்கான விளக்கம் கேட்டு இருக்கிறேன் என்று சொல்லி இருந்தார்.

முத்துக்குமரன் மீது குற்றச்சாட்டு
வஹிதா வெளியிட்ட வீடியோக்களில், எனக்கு ஏற்கனவே பல பிரேக்கப் நடந்திருக்கிறது, நான் ஒருவரை திருமணம் செய்து கொண்டேன் 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்து விட்டது. அதற்குப் பிறகு ஒரு பிரேக்கப்பில் நான் இருந்த சமயத்தில் தான் முத்துக்குமரனுடன் எனக்கு அறிமுகம் ஆனது. முதலில் நட்பாக தான் நாங்கள் சோசியல் மீடியாவில் பேசிக் கொண்டிருந்தோம் . கடந்த அக்டோபர் 4ஆம் தேதி கத்திப்பாரா பகுதியில் முத்துக்குமரனைச் சந்தித்தேன்.
தூத்துக்குடியில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவி.. பிக் பாஸ் முத்துக்குமரன் ஆதங்க கேள்வி
அப்போது அவர் என்னை அவருடைய வீட்டிற்கு கூட்டிட்டு போனார் அது கடத்தல் என்று கூட சொல்லலாம். திருமணம் செய்து கொள்வதாக முத்துக்குமரன் என்கிட்ட சொன்னாரு உன்னுடைய சம்மதம் இல்லாமல் உன்னை தொட மாட்டேன் என்று சொன்னாரு பிறகு எனக்கு ஆயிரம் முத்தங்கள் கொடுத்தாரு இரவு நாங்கள் உறவில் இருந்தோம். ஆனால் அடுத்த நாள் காலையில் அந்த உறவைத் தொடரவோ திருமணம் குறித்துப் பேசவோ அவர் விரும்பவில்லை என்று வஹிதா குற்றம்சாட்டியிருந்தார்.

பின்னர் நீக்கப்பட்ட பதிவுகள்
இந்த விவகாரம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதற்குக் காரணம், வாஹிதா வெளியிட்ட சில வீடியோக்கள்தான். அதில் அவர் மது அருந்துவது, புகைபிடிப்பது, காய்ச்சல் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது போன காட்சிகள் இருந்தது. தற்கொலைக்கு முயன்றதாகவும், தனது மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் பேசியிருந்தார். பின்னர் அந்த வீடியோக்களை நீக்கிய வாஹிதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்ததார்.
இதற்கிடையில், முத்துக்குமரனுடன் நெருக்கமாக இருக்கும் சில காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவின. அந்தக் காட்சிகள் தொடர்பாகவும் இணையத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. அது நிஜத்தில் முத்துக்குமார் என்று பேசிய வீடியோ தானா அல்லது ஏஐ வீடியோவா என்ற கேள்விகளும் பலருக்கு இருக்கிறது. ஒருபக்கம் வஹிதா வெளியிட்ட குற்றச்சாட்டுகள், இன்னொரு பக்கம் முத்துக்குமரனின் விளக்கம் என இந்த விவகாரம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இப்போது வஹிதா பகிர்ந்துள்ள "To be Loved, not lusted" என்ற ஸ்டோரியும் இந்தச் சர்ச்சைக்கு மத்தியில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications
