ஹீரோவாக அல்லு அர்ஜுன் செய்ததை...காமெடியாக எப்போதோ செய்துவிட்ட வடிவேல்...கம்பேர் செய்யும் ரசிகர்கள்
சென்னை: வடிவேலுவை காப்பி அடித்தாரா அல்லு அர்ஜுன் என்று புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் செய்கைகளை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
இன்று எத்தனை ஹீரோக்கள் புதுசு புதுசாக ஸ்டைல் செய்தாலும் அதையெல்லாம் பல வருடங்களுக்கு முன்பே எங்க தல செய்துவிட்டார் என்று வடிவேலுவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ட்ரண்டாகும் மீம்ஸ்
வெளியான அத்தனை மொழிகளிலும்.. அனைவரின் பாராட்டுகளையும் பெற்று... மிகப்பெரிய வரவேற்புடன் திரையரங்குகளில் வசூல் மழை நடத்திக் கொண்டிருக்கிறது புஷ்பா திரைப்படம்.புஷ்பா திரைபடத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பும், ஸ்டைலும், பலரால் மெய்சிலிர்த்து பாராட்டப்பட்ட வரும் இந்த நிலையில்... இதையெல்லாம் எங்க தலைவன் அப்பவே.. பண்ணிட்டாரு...!! என்று நகைச்சுவை மன்னன் வடிவேலு ரசிகர்கள் மீம்ஸ் டெம்பிளட் போட்டு டிரண்ட் செய்து வருகின்றனர்.

எல்லாவற்றுக்கும் பொருந்தும் ரியாக்ஷன்
இன்றைய காலகட்டத்திற்கு தேவையானது மட்டுமல்லாமல், இன்னும் அரை நூற்றாண்டிற்கு தேவையான மீம்ஸ் கன்டென்டுகளை நகைச்சுவை புயல் வடிவேலு தன் நடித்த படங்களில் கொட்டிக் கொடுத்துள்ளார். எவ்வளவு பெரிய சென்டிமென்ட் சீன், ஆக்ஷன்சீனாக இருந்தாலும் அதனை கலாய்ப்பதற்கு நகைச்சுவை புயல் வடிவேலுவின் ஒரே ஒரு ரியாக்சன் போதுமானது.. அந்த சீன்களுக்கு உண்டான கன்டென்டே மாறிவிடும்.அந்த அளவிற்கு வடிவேலு தன் படங்களில் பல்வேறு வகையான பாடி லாங்குவேஜ் மற்றும் பேஸ் ரியாக்ஷனை கொடுத்து இன்றளவும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஒரு கூகுள் போல் இருந்து வருகிறார்.

புஷ்பாவின் மேனரிசம்
திரைப்படங்களில் காமெடி ரவுடியாக வந்து ரவுடிகளின் நடை, உடை பாவனைகளை அசால்டாக கலாய்ப்பதற்கு வடிவேலுவை அவர்களை மிஞ்சுவதற்கு ஆளில்லை. அந்த அளவிற்கு தத்துரூபமாக காமெடி ரவுடியாக பல படங்களில் வாழ்ந்திருப்பார். தற்பொழுது மிகப்பெரிய பொருட்செலவில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்ட புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் செம்மரம் கடத்தும் கடத்தல்காரராக நடித்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே கெத்தாக இருப்பதுபோல் காட்டப்பட்டிருக்கும் அவரது கதாபாத்திரத்திற்காக ஒருபக்க தோள்பட்டையை உயர்த்திக்கொண்டும், ஒருபக்க தோள்பட்டையை கொஞ்சம் தாழ்த்திக்கொண்டும் இருப்பது போல் வித்தியாசமான மேனரிசம் காட்டி இருப்பார்கள்.

இதை எப்போவே பண்ணியாச்சு
தங்களது தலைவன் நகைச்சுவை புயல் வடிவேலு அல்லு அர்ஜுனின் இந்த ரவுடி தோரணையை, சத்யராஜுடன் வடிவேலு இணைந்து நடித்த சவுண்ட் பார்ட்டி படத்தில் தொடங்கி,வின்னர்,உட்பட பல படங்களில் அசால்டாக செய்திருப்பதை...தற்பொழுது வடிவேலு ரசிகர்கள்... "நாங்கள்லாம் அப்பவே... அப்படி...!! இப்ப சொல்லவா.. வேணும்...!!?." என்று வடிவேலுவின் ரவுடி தோரணையை அல்லு அர்ஜுன் தோரணையுடன் கம்பேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications