அடேங்கப்பா! சொந்தமாக சொகுசு கப்பல் வாங்கிய ஆலியா மானசா.. விலை இத்தனை கோடியா?
சென்னை: நடிகை ஆலியா மானசா சஞ்சீவ் தம்பதி சமீபத்தில் பிரமாண்டமாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் வைத்திருந்தனர். அதை தொடர்ந்து தற்போது புது சொகுசு கப்பல் ஒன்று வாங்கியதாக கூறி இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலமாக ஆலியா மானசா பெரிய அளவில் பிரபலமானார். முதல் சீரியலிலேயே தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து கல்யாணமும் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது.

ராஜா ராணி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவர்களுடைய திருமணம் முடிவடைந்ததை தொடர்ந்து முதல் குழந்தைக்கு தாயார். பொதுவாக சில நடிகைகள் புகழின் உச்சத்தில் இருக்கும் போது திருமணம் செய்து கொள்வதையோ, குழந்தை பெற்றுக் கொள்ளதையோ விரும்ப மாட்டார்கள். ஒரு சிலர் திருமணம் செய்து கொண்டால் கூட குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்று தள்ளி போடுவார்கள்.
ஆனால் ஆலியா மனசா புகழில் உச்சத்தில் இருக்கும்போதே குழந்தை பெற்றுக் கொண்டது பெரிய அளவில் பேசப்பட்டது. முதல் குழந்தை பிறந்ததை தொடர்ந்து ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாவது முறையாக கர்ப்பமானார். அதனால் அந்த சீரியலில் பாதியிலேயே விலகிவிட்டார்.

பிறகு இரண்டு குழந்தைகள் பிறந்ததும் விஜய் டிவியில் இருந்து சன் டிவி சீரியலுக்கு மாறி இருந்தார். சன் டிவியில் இனியா சீரியலில் ஆலியா நடித்துக் கொண்டிருக்கும் போது புதியதாக வீடு வாங்கிய செய்தியையும் ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார்.

ஆலியா சஞ்சீவை காதலித்து திருமணம் செய்ததால் இவர்களுடைய திருமணத்திற்கு ஆலியா குடும்பத்தில் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் சஞ்சீவ் குடும்பத்தோடு இருந்து வந்தார். ஆலியா புது வீடு கட்டிய நேரத்தில் அவருடைய குடும்பத்தினரும் வந்து சேர்ந்தனர். அது குறித்து நெகிழ்ந்து போஸ்ட் போட்டு இருந்தார்.
அதுபோல சஞ்சீவ் இப்போது கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆலியா நடித்து வந்த இனியா சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்திருக்கிறது. சின்னத்திறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் ஆலியா மானசாவும் ஒருவராக இருக்கிறார். இவருக்கு ஒரு நாளைக்கு 50,000 சம்பளம் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய கணவரின் கனவை ஆலியா மானசா வீடு கட்டி நிறைவேற்றி இருந்தார்.

கேரளா மாநிலம் ஆலப்புழாவில் போட் ஹவுஸ் மிகவும் பிரபலமாக இருக்கும். அங்குள்ள போட் ஹவுஸுக்கு இந்தியா மட்டுமில்ல பல உலக நாடுகளில் இருந்து பலர் வருகிறார்கள். அங்கு ஒரு நாள் தங்குவதற்கு ஆயிரக்கணக்கில் வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆலியா மானசா தற்போது ஆலப்புழாவில் சொந்தமாக போர்ட் கவுஸ் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
அந்த போட் ஹவுஸில் விலை இரண்டு கோடியாம். அதில் நவீன வசதிகளுடன் கூடிய படுக்கையறைகள், பிரமாண்ட டைனிங் ஹால், டிஜே என சகல வசதிகளும் இருக்கிறது என்று ஆலியா மானசா youtube சேனல் ஒன்றில் மணிமேகலையோடு கலந்து கொள்ளும்போது மணிமேகலை இடம் கூறி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆலியா மானசாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications