Alya Manasa: "அப்பாவை காப்பாற்ற சீரியலுக்கு வந்தேன்!" - ஆலியாவின் சோகமான கதை! - புதிய சீரியலுக்காக எடுத்த முயற்சி
சென்னை: சின்னத்திரை உலகில் மக்களின் மனதைக் கவர்ந்த நடிகையாக வலம் வருபவர் ஆலியா மானசா. விஜய் டிவியில் தொடங்கி, சன் டிவியில் வெற்றிக்கொடி நாட்டி, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். அவருடைய புதிய சீரியல் 'பாரிஜாதம்' ப்ரோமோக்கள் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அவரது கடந்த கால வாழ்க்கை பற்றிய உருக்கமான தகவல்கள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கனவை தியாகம் செய்த ஆலியா
மாடலிங் துறையில் தனது பயணத்தைத் தொடங்கிய ஆலியா, 17 வயதிலேயே தன் தந்தைக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பினால் தனது படிப்பைப் பாதியிலேயே நிறுத்த வேண்டியிருந்தது. தந்தையின் மருத்துவச் செலவுகளுக்காக சினிமா கனவை விட்டு, சீரியல் துறைக்கு வந்தார். "சினிமாவில் நடித்தால் தீபாவளி, பொங்கலுக்குத்தான் மக்கள் என்னை பார்ப்பார்கள். ஆனால், சீரியலில் தினமும் ஒரு குடும்பத்தில் ஒருத்தியாகப் பார்ப்பார்கள். அது போதும் எனக்கு" என்று ஒரு பேட்டியில் உருக்கமாகக் கூறியுள்ளார்.
ராஜா ராணி கொடுத்த புகழ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடரின் மூலம், 'செம்பா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். அந்த தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவ்வை நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் காதல் பல சவால்களை சந்தித்தது. 'ராஜா ராணி' தொடரின்போது ஏற்பட்ட ஒரு சண்டையால் இருவரும் பிரிந்து, பிறகு மீண்டும் இணைந்தனர். விவாகரத்து வதந்திகள் பரவியபோது, இருவரும் ஒன்றாக வீடியோ வெளியிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்த தம்பதிக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஜீ தமிழில் புதிய அத்தியாயம்
சன் டிவியின் 'இனியா' தொடருக்குப் பிறகு, ஆலியா மானசா ஜீ தமிழில் அடியெடுத்து வைத்துள்ளார். புதிய சீரியலான 'பாரிஜாதம்'-ல் 'இசை' என்ற காது கேட்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தொடர், ஜாதகம், காதல், குடும்ப உறவுகள் ஆகியவற்றை மையமாக வைத்துப் பயணிக்கிறது. இதன் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
தற்போது, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'சிங்கிள் பசங்க' என்ற ரியாலிட்டி ஷோவிலும் அவர் நடுவராக பங்கேற்று வருகிறார். ஒரு கலைஞராக மட்டுமல்லாமல், தனது குடும்பத்திற்காகவும், தனது திறமைகளுக்காகவும் கடுமையாக உழைக்கும் ஆலியா மானசாவிற்கு, அவரது புதிய பயணத்தில் வெற்றிபெற ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல இந்த சீரியலுக்காக ஆலியா மானசா காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுடன் சில மாதங்களாக பயணித்து அவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று கற்று இருக்கிறாராம். அதன் மூலம் பலருடைய வலி வேதனையை புரிந்து கொள்ள முடிந்தது என்று ஆலியா கூறியிருக்கிறார்.
ஆலியா மனசா கர்ப்பமாக இருந்த சமயத்தில் உடல் எடை கூடி இருந்தார். ஆனால் குழந்தை பிறந்த அடுத்த சில மாதங்களிலேயே கடுமையான உடற்பயிற்சி மூலமாக மீண்டும் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார். பொதுவாக பல நடிகைகள் கதாநாயகியாக டாப்பில் இருக்கும் போது திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் உடனே குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார்கள் ஆனால் டாப் ஹீரோயினியாக இருக்கும்போது திருமணம் செய்து அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்து வளர்த்து இப்போது தனது கனவை நோக்கி மீண்டும் அடி எடுத்து வைத்திருக்கிறார் ஆலியா மனசா. அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களை சொல்லிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
